அத்தியாயம்: 5, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1063

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ هُرْمُزَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَحَدُكُمْ مَا قَعَدَ يَنْتَظِرُ الصَّلَاةَ فِي صَلَاةٍ مَا لَمْ ‏ ‏يُحْدِثْ ‏ ‏تَدْعُو لَهُ الْمَلَائِكَةُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِ هَذَا

“தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவர், அவருக்குக் காற்றுப் பிரியும்வரை தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகின்றார். அவருக்காக வானவர்கள், ‘இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1062

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا دَامَتْ الصَّلَاةُ ‏ ‏تَحْبِسُهُ ‏ ‏لَا يَمْنَعُهُ أَنْ ‏ ‏يَنْقَلِبَ ‏ ‏إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ

“உங்களில் ஒருவர், தம் இல்லத்தாரிடம் திரும்பிச் செல்லவிடாமல் தம்மைத் தடுக்கவல்ல(தாகக் கருதும்) தொழுகையை எதிர்பார்த்துக் கட்டுப்பாட்டுடன் காத்திருக்குங் காலமெல்லாம் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1061

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَزَالُ الْعَبْدُ فِي صَلَاةٍ مَا كَانَ فِي مُصَلَّاهُ يَنْتَظِرُ الصَّلَاةَ وَتَقُولُ الْمَلَائِكَةُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ حَتَّى يَنْصَرِفَ أَوْ يُحْدِثَ قُلْتُ مَا يُحْدِثُ قَالَ ‏ ‏يَفْسُو أَوْ يَضْرِطُ

“ஓர் அடியார், தொழுகையை எதிர்பார்த்துத் தொழுமிடத்தில் அமர்ந்திருக்குவரை தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகின்றார். அவர் அங்கிருந்து அகலும்வரை அல்லது அவருக்கு ‘ஹதஸ்’ ஏற்படும்வரை, ‘இறைவா, இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா, இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று வானவர்கள் (அவருக்காகப்) பிரார்த்திக்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸில் இடம்பெறும் ‘ஹதஸ்’ என்றால் என்னவென்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் தாம் வினவியபோது, “ஒலியுடனோ ஒலியின்றியோ காற்றுப் பிரிவதாகும்” என்று பதிலளித்ததாக அபூராஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1060

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الْمَلَائِكَةَ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ ‏ ‏يُحْدِثْ ‏ ‏وَأَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا كَانَتْ الصَّلَاةُ ‏ ‏تَحْبِسُهُ

“உங்களில் ஒருவர் தொழுத இடத்திலேயே (உளூவுடன்) அமர்ந்திருந்தால் அவருக்குக் காற்றுப் பிரியும்வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். ‘இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!’ என்று அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். தொழுகையை எதிர்பார்த்துக் கட்டுப்பாட்டுடன் காத்திருக்கும் உங்களில் ஒருவர், தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1059

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ ‏ ‏بِضْعًا ‏ ‏وَعِشْرِينَ دَرَجَةً وَذَلِكَ أَنَّ أَحَدَهُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْمَسْجِدَ لَا ‏ ‏يَنْهَزُهُ ‏ ‏إِلَّا الصَّلَاةُ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ فَلَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي الصَّلَاةِ مَا كَانَتْ الصَّلَاةُ هِيَ تَحْبِسُهُ وَالْمَلَائِكَةُ يُصَلُّونَ عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي صَلَّى فِيهِ يَقُولُونَ اللَّهُمَّ ارْحَمْهُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ تُبْ عَلَيْهِ مَا لَمْ يُؤْذِ فِيهِ مَا لَمْ ‏ ‏يُحْدِثْ ‏ ‏فِيهِ ‏


حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْثَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِ مَعْنَاهُ

“ஒருவர் தமது வீட்டில், தமது வணிகவிடத்தில் (கடமைத் தொழுகையைத்) தொழுவதைவிடவும் அவர் (பள்ளிவாசலுக்குச் சென்று) ஜமாஅத்துடன் தொழுவது இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் நிறைவாக உளூச் செய்து கொண்டு, தொழுகையைத் தவிர வேறு எந்த நோக்கமும் விருப்பமும் இன்றிப் பள்ளிவாசலுக்கு வரும்போது, அதில் நுழையும்வரை அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு தகுதி அவருக்கு உயர்த்தப்படுகின்றது; ஒரு தவறு அவருக்காக மன்னிக்கப்படுகின்றது. அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்து, தொழுகையை எதிர்பார்த்துக் கட்டுப்பாட்டுடன் காத்திருக்கும்வரை தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகின்றார். உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே (உளூவுடன்) அமர்ந்திருந்தால் அவருக்குக் காற்றுப் பிரிந்து தொல்லை தரும்வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். ‘இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக! இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவரது பாவமன்னிப்பை ஏற்பாயாக!’ என்று அவர்கள் கூறுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1058

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ :‏‏

أَنَّهُ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوَجَدَهُ ‏ ‏يُصَلِّي عَلَى حَصِيرٍ يَسْجُدُ عَلَيْهِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒருமுறை) சென்றபோது அவர்கள் பாய் ஒன்றில் ஸஜ்தாச் செய்து தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.

அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1057

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ الْعَوَّامِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ ‏ ‏قَالَ حَدَّثَتْنِي ‏ ‏مَيْمُونَةُ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ:‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي وَأَنَا ‏ ‏حِذَاءَهُ ‏ ‏وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ وَكَانَ ‏ ‏يُصَلِّي عَلَى ‏ ‏خُمْرَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழும்போது அவர்களுக்கு அருகில் நான் (உறங்கிக்கொண்டு) இருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது சில நேரங்களில் அவர்களது ஆடை என்மீது படும். நபி (ஸல்) (சிறிய) தொழுகை விரிப்பில் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1056

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْمُخْتَارِ ‏ ‏سَمِعَ ‏ ‏مُوسَى بْنَ أَنَسٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ :‏‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى بِهِ وَبِأُمِّهِ ‏ ‏أَوْ خَالَتِهِ ‏ ‏قَالَ فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ وَأَقَامَ الْمَرْأَةَ خَلْفَنَا ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனக்கும் என் தாயாருக்கும் – அல்லது என் சிறிய தாயாருக்கும் – (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது என்னைத் தமக்கு வலப் பக்கத்திலும் பெண்ணை எங்களுக்குப் பின்னாலும் நிறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1055

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏:‏

دَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْنَا وَمَا هُوَ إِلَّا أَنَا وَأُمِّي ‏ ‏وَأُمُّ حَرَامٍ ‏ ‏خَالَتِي فَقَالَ قُومُوا فَلِأُصَلِّيَ بِكُمْ ‏ ‏فِي غَيْرِ وَقْتِ صَلَاةٍ ‏ ‏فَصَلَّى بِنَا فَقَالَ رَجُلٌ ‏ ‏لِثَابِتٍ ‏ ‏أَيْنَ جَعَلَ ‏ ‏أَنَسًا ‏ ‏مِنْهُ قَالَ جَعَلَهُ عَلَى يَمِينِهِ ثُمَّ دَعَا لَنَا أَهْلَ الْبَيْتِ بِكُلِّ خَيْرٍ مِنْ خَيْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ فَقَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خُوَيْدِمُكَ ادْعُ اللَّهَ لَهُ قَالَ فَدَعَا لِي ‏ ‏بِكُلِّ خَيْرٍ وَكَانَ فِي آخِرِ مَا دَعَا لِي ‏ ‏بِهِ أَنْ قَالَ ‏ ‏اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيهِ

நபி (ஸல்) (ஒரு நாள்) எங்களிடம் (வீட்டுக்கு) வந்தார்கள். அப்போது (வீட்டில்) நான், என் தாயார், என் சிறிய தாயார் உம்முஹராம் (ரலி) ஆகியோர் மட்டுமே இருந்தோம். நபி (ஸல்), “எழுங்கள்! உங்களுக்காக நான் (நஃபில்) தொழுவிக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு எங்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவித்தார்கள். அது கடமையான தொழுகையின் நேரமல்ல.

பின்னர், நபி (ஸல்) எங்கள் குடும்பத்தாருக்காக இம்மை-மறுமைக்கான எல்லா நன்மைகளையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போது என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய சேவகச் சிறுவருக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்!” என்றார். நபி (ஸல்), எனக்காக எல்லா விதமான நன்மையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனையின் இறுதியில், “இறைவா! அனஸுக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அதில் அவருக்கு வளம் சேர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான ஸாபித் (ரஹ்) அவர்களிடம் ஒருவர், “நபி (ஸல்), அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு (அருகில்) எந்தப் பக்கத்தில் நிறுத்தினார்கள்?” என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரஹ்), “நபி (ஸல்), அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 5, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1054

و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏قَالَ ‏ ‏شَيْبَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْسَنَ النَّاسِ خُلُقًا فَرُبَّمَا تَحْضُرُ الصَّلَاةُ وَهُوَ فِي بَيْتِنَا فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ ثُمَّ ‏ ‏يُنْضَحُ ‏ ‏ثُمَّ يَؤُمُّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَقُومُ خَلْفَهُ فَيُصَلِّي بِنَا وَكَانَ بِسَاطُهُمْ مِنْ جَرِيدِ النَّخْلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது சில வேளைகளில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும். உடனே, தாம் அமரும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு பணிப்பார்கள். அவ்வாறே அது பெருக்கி(த் துடைத்து)ச் சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்னே நிற்க, நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தொழுவிப்பார்கள். (அன்று) மக்களுடைய விரிப்பு என்பது பேரீச்சங் கீற்றுகளால் செய்யப்பட்டதாக இருந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)