அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 543

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَدَ شَاةً مَيْتَةً أُعْطِيَتْهَا مَوْلَاةٌ ‏ ‏لِمَيْمُونَةَ ‏ ‏مِنْ الصَّدَقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا قَالُوا إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ إِنَّمَا حَرُمَ أَكْلُهَا ‏


‏حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏بِنَحْوِ رِوَايَةِ ‏ ‏يُونُسَ

மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டு, “நீங்கள் இதன் தோலைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள், “இது செத்துப் போனதாயிற்றே?” என்று கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “செத்ததை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 542

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏:‏

‏تُصُدِّقَ عَلَى مَوْلَاةٍ ‏ ‏لِمَيْمُونَةَ ‏ ‏بِشَاةٍ فَمَاتَتْ فَمَرَّ بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏هَلَّا أَخَذْتُمْ ‏ ‏إِهَابَهَا ‏ ‏فَدَبَغْتُمُوهُ ‏ ‏فَانْتَفَعْتُمْ بِهِ فَقَالُوا إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ إِنَّمَا حَرُمَ أَكْلُهَا ‏


‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏فِي حَدِيثِهِمَا ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப்பெண் ஒருவருக்குத் தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்து விட்டது. அந்த வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கடந்து சென்றபோது, “நீங்கள் இதன் தோலை எடுத்துப் பதனிட்டுப் பயனடையக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள், “இது செத்துப் போனதாயிற்றே?” என்று கேட்க, அதற்கு அவர்கள், “செத்ததை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

மற்றொரு அறிவிப்பில், அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்), இப்னு அபீ உமர் (ரஹ்) ஆகியோர் இந்த ஹதீஸை மைமூனா (ரலி) அவர்களே அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்தியாயம்: 3, பாடம்: 26, ஹதீஸ் எண்: 541

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا ‏ ‏فَأَشْكَلَ ‏ ‏عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا فَلَا يَخْرُجَنَّ مِنْ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ‏

“உங்களில் ஒருவர் தமது வயிற்றில் (கோளாறு) ஒன்றை உணர்ந்து, அதிலிருந்து (உண்டான வாயு) ஏதேனும் வெளியேறியதா இல்லையா என்று ஐயுற்றால், அவர் (வாயு வெளியேறிய) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை (உளூ முறிந்து விட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறிவிட வேண்டாம்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 26, ஹதீஸ் எண்: 540

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَعَبَّادِ بْنِ تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ :‏ ‏

‏شُكِيَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الرَّجُلُ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلَاةِ قَالَ ‏ ‏لَا يَنْصَرِفُ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ‏


‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏فِي رِوَايَتِهِمَا ‏ ‏هُوَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ ‏

ஒருவருக்குத் தொழும்போது வாயு பிரிவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி (ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்டது. அதற்கு நபி (ஸல்), “(வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை அவர் (தொழுகையை) முடித்துக் கொள்ள வேண்டியதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) வழியாக அவரின் சகோதரர் மகன் அப்பாத் பின் தமீம் (ரஹ்)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) மற்றும் ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 25, ஹதீஸ் எண்: 539

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏:‏

‏أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَأَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ قَالَ ‏ ‏إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلَا تَوَضَّأْ قَالَ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ قَالَ نَعَمْ فَتَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ قَالَ أُصَلِّي فِي ‏ ‏مَرَابِضِ ‏ ‏الْغَنَمِ قَالَ نَعَمْ قَالَ أُصَلِّي فِي مَبَارِكِ الْإِبِلِ قَالَ لَا ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ‏ ‏وَأَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي كَامِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் (வந்து), “ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் உளூச் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ விரும்பினால் உளூச் செய்து கொள்! இல்லையேல் உளூச் செய்யத் தேவையில்லை” என்று சொன்னார்கள். மீண்டும் அவர், “ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (மீண்டும்) உளூச் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ செய்துக் கொள்!” என்றார்கள். அவர், “ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா?” என்று கேட்டார். அதற்கு, “ஆம் (தொழலாம்)” என்றார்கள். அவர், “ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்), “கூடாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


குறிப்பு :

உணவில், ஒட்டக இறைச்சியைத் தவிர எதுவும் உளூவை முறிக்காது.

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 538

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ عَلَيْهِ ثِيَابَهُ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ فَأُتِيَ بِهَدِيَّةٍ خُبْزٍ وَلَحْمٍ فَأَكَلَ ثَلَاثَ لُقَمٍ ثُمَّ صَلَّى بِالنَّاسِ وَمَا مَسَّ مَاءً ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ ‏ ‏قَالَ كُنْتُ مَعَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ حَلْحَلَةَ ‏ ‏وَفِيهِ أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏شَهِدَ ذَلِكَ مِنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ صَلَّى وَلَمْ يَقُلْ بِالنَّاسِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களுக்காக ரொட்டியும் இறைச்சியும் அன்பளிப்பாகக் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அதிலிருந்து மூன்று கவளம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் மக்களுக்காகத் தொழுகை நடத்தினார்கள். அவர்கள் (மீண்டும் உளூச் செய்வதற்காகத்) தண்ணீரைத் தொடவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு இருந்தபோது இதே போன்ற ஹதீஸை அவர்கள் அறிவித்தார்கள். மேற்காணும் நிகழ்வில், நபி (ஸல்) அவர்களுடன் தாம் இருந்ததாகவும் கூறினார்கள்” என முஹம்மது பின் அம்ரு பின் அதா (ரஹ்) குறிப்பிடுகின்றார். அந்த அறிவிப்பில், “மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்” என்று இல்லாமல் “தொழுதார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 537

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَرِبَ لَبَنًا ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ وَقَالَ إِنَّ لَهُ دَسَمًا ‏


‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِإِسْنَادِ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்) பால் அருந்திய பின்னர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்பளித்தார்கள். பிறகு, “(காரணம்) இதில் கொழுப்பு இருக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 536

قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي غَطَفَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏قَالَ ‏:‏

‏أَشْهَدُ لَكُنْتُ ‏ ‏أَشْوِي لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَطْنَ ‏ ‏الشَّاةِ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏

நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்காக ஆட்டு ஈரல் குலையைப் பொரித்துக் கொடுத்தேன். (அதை உண்டுவிட்டு மீண்டும்) அவர்கள் உளூச் செய்யாமல் தொழுதார்கள் என்பதை உறுதி கூறுகிறேன்.

அறிவிப்பாளர் : அபூராஃபிஉ (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 535

قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏بُكَيْرُ بْنُ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكَلَ عِنْدَهَا كَتِفًا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏


‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَلِكَ

நபி (ஸல்) என் இல்லத்தில் (சமைத்த ஆட்டுச்) சப்பையை உண்ட பின்னர் (மீண்டும்) உளூச் செய்யாமல் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 534

حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهَا فَدُعِيَ إِلَى الصَّلَاةِ فَقَامَ وَطَرَحَ السِّكِّينَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏


‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَلِكَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டுகளாக்கி உண்டு கொண்டிருந்தபோது தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப் பட்டது. உடனே அவர்கள் எழுந்து கத்தியைப் போட்டுவிட்டு (மீண்டும்) உளூச் செய்யாமல் தொழுததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் உமய்யா அள்ளம்ரீ(ரலி)


குறிப்பு :

இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அலீ (ரஹ்) இதே ஹதீஸைத் தமக்கு அறிவித்ததாக இபுனு ஷிஹாப் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.