அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 533

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏ ‏

‏أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحْتَزُّ ‏ ‏مِنْ كَتِفٍ يَأْكُلُ مِنْهَا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆட்டுச் சப்பையை விண்டு உண்டதையும் உண்டபின் (மீண்டும்) உளூச் செய்யாமலேயே தொழுதையும் நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் உமய்யா அள்ளம்ரீ(ரலி) வழியாக அவரின் மகன் ஜஅஃபர் (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 532

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏وَهْبُ بْنُ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكَلَ ‏ ‏عَرْقًا ‏ ‏أَوْ لَحْمًا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ وَلَمْ يَمَسَّ مَاءً ‏

நபி (ஸல்) (சமைக்கப்பட்ட) இறைச்சியை/எலும்பில் ஒட்டிக் கொண்டிருந்த இறைச்சியை உண்டுவிட்டுத் தொழுதார்கள். அவர்கள் தண்ணீரைத் தொடவுமில்லை, (தொழுகைக்காக மீண்டும்) உளூச் செய்யவுமில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 531

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சமைக்கப்பட்ட) ஆட்டுச்சப்பை இறைச்சியை உண்டு விட்டு, (தொழுகைக்காக மீண்டும்) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 23, ஹதீஸ் எண்: 530

قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ خَالِدِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏وَأَنَا أُحَدِّثُهُ هَذَا الْحَدِيثَ أَنَّهُ سَأَلَ ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏عَنْ الْوُضُوءِ مِمَّا مَسَّتْ النَّارُ ‏ ‏فَقَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّئُوا مِمَّا مَسَّتْ النَّارُ ‏

“நெருப்புத் தீண்டிய(சமைத்த)வற்றை உண்டால் உளூச் செய்து கொள்ளுங்கள்” என்ற ஹதீஸை நான் ஸயீத் பின் காலித் பின் அம்ரு பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தபோது, உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் ஸயீத் (ரஹ்), “சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டுமா?” என்று கேட்டதாகவும் அதற்கு, “நெருப்புத் தீண்டிய(சமைத்த)வற்றை உண்டால் உளூச் செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உர்வா (ரஹ்) பதில் கூறியதாகவும் ஸயீத் (ரஹ்) கூறினார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) > உர்வா (ரஹ்) > ஸயீத் (ரஹ்) வழியாக இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 23, ஹதீஸ் எண்: 529

قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ ‏ ‏أَخْبَرَهُ ‏:‏

‏أَنَّهُ وَجَدَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَتَوَضَّأُ عَلَى الْمَسْجِدِ فَقَالَ إِنَّمَا أَتَوَضَّأُ مِنْ ‏ ‏أَثْوَارِ ‏ ‏أَقِطٍ ‏ ‏أَكَلْتُهَا لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏تَوَضَّئُوا مِمَّا مَسَّتْ النَّارُ ‏

அபூஹுரைரா (ரலி) பள்ளிவாசலில் ‘உளூ’ச் செய்து கொண்டிருப்பதைக் கண்டபோது, “(காய்ச்சப்பட்ட) பாலாடைக் கட்டிகளை சாப்பிட்டதால்தான் நான் உளூச் செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நெருப்புத் தீண்டிய(சமைத்த)வற்றை உண்டால் உளூச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் எனக் கூறினார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அப்துல்லாஹ் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 23, ஹதீஸ் எண்: 528

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏أَنَّ ‏ ‏خَارِجَةَ بْنَ زَيْدٍ الْأَنْصَارِيَّ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏زَيْدَ بْنَ ثَابِتٍ ‏ ‏قَالَ ‏:‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏الْوُضُوءُ مِمَّا مَسَّتْ النَّارُ ‏

“நெருப்புத் தீண்டிய(சமைத்த)வற்றை உண்டால் உளூச் செய்தல் உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸ், அடுத்து வரும் ஹதீஸ்களால் மாற்றப்பட்டு, ‘சமைத்த உணவுகளைச் சாப்பிடுபவர்கள் வாய் கொப்பளித்தால் போதுமானது’ என்று நிலைத்தது.

அத்தியாயம்: 3, பாடம்: 22, ஹதீஸ் எண்: 527

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ كُلْثُومٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏إِنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الرَّجُلِ يُجَامِعُ أَهْلَهُ ثُمَّ ‏ ‏يُكْسِلُ ‏ ‏هَلْ عَلَيْهِمَا الْغُسْلُ ‏ ‏وَعَائِشَةُ ‏ ‏جَالِسَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَفْعَلُ ذَلِكَ أَنَا وَهَذِهِ ثُمَّ نَغْتَسِلُ ‏

“தம் மனைவியுடன் உடலுறவு கொண்ட ஒருவர், விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குளியல் கடமையாகுமா?” என்று ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைக் காட்டி, “இதோ இவளும் நானும் அவ்வாறு செய்த பின்னர் நாங்கள் குளிப்போம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உம்மு குல்ஸூம் பின்த்தி அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 22, ஹதீஸ் எண்: 526

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عِبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدُ بْنُ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏وَهَذَا حَدِيثُهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ هِلَالٍ ‏ ‏قَالَ ‏ ‏وَلَا أَعْلَمُهُ إِلَّا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏:‏

‏اخْتَلَفَ فِي ذَلِكَ ‏ ‏رَهْطٌ ‏ ‏مِنْ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏وَالْأَنْصَارِ ‏ ‏فَقَالَ ‏ ‏الْأَنْصَارِيُّونَ ‏ ‏لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ ‏ ‏الْمُهَاجِرُونَ ‏ ‏بَلْ إِذَا ‏ ‏خَالَطَ ‏ ‏فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏فَأَنَا ‏ ‏أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَأُذِنَ لِي فَقُلْتُ لَهَا يَا ‏ ‏أُمَّاهْ ‏ ‏أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَيْءٍ وَإِنِّي ‏ ‏أَسْتَحْيِيكِ فَقَالَتْ لَا ‏ ‏تَسْتَحْيِي أَنْ تَسْأَلَنِي عَمَّا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا جَلَسَ بَيْنَ ‏ ‏شُعَبِهَا ‏ ‏الْأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ ‏

நபித்தோழர்களான முஹாஜிர்ககளையும் அன்ஸாரிகளையும் சார்ந்த குழுவினர் கருத்து வேறுபட்ட சொல்லாடல்களில் ஈடுபட்டிருந்தனர். “விந்து வெளியானால்தான் அல்லது சிலிர்ப்பு ஏற்பட்டால்தான் குளியல் கடமையாகும்” என்று அன்ஸாரிகள் கூறினர். “இல்லை; (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகி விடும்” என்று முஹாஜிர்கள் கூறினர்.

உடனே நான், “இதற்கு நான் தீர்வு கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எழுந்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்துக்குச் சென்று (உள்ளே வர) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “என் அன்னையே!இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகின்றேன். ஆனால் உங்களிடம் அதைக் கேட்க வெட்கமாக இருக்கிறது” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி), “உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு நானும் ஒரு தாய்தான்” என்றார்கள். எனவே, “குளியல் எதனால் கடமையாகும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பொருத்தமான ஆளிடம்தான் வந்தீர்கள். ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (அவரது ஆண்) குறி (மனைவியின் பெண்)குறியைத் தொட்டுவிட்டாலே (இருவர் மீதும்) குளியல் கடமையாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 22, ஹதீஸ் எண்: 525

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏وَمَطَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا جَلَسَ بَيْنَ ‏ ‏شُعَبِهَا ‏ ‏الْأَرْبَعِ ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْغُسْلُ ‏


‏وَفِي حَدِيثِ ‏ ‏مَطَرٍ ‏ ‏وَإِنْ لَمْ يُنْزِلْ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏مِنْ بَيْنِهِمْ بَيْنَ ‏ ‏أَشْعُبِهَا ‏ ‏الْأَرْبَعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ثُمَّ اجْتَهَدَ وَلَمْ يَقُلْ وَإِنْ لَمْ يُنْزِلْ ‏

“ஒருவர் தம் மனைவியின் நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, (இன்பம் துய்க்க) முயன்றுவிட்டால் அவர் மீது குளியல் கடமையாகி விடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

மத்தர் (ரஹ்) வழி அறிவிப்பில், “விந்து வெளியாகாவிட்டாலும்” எனும் சொற்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அபூஹுரைரா (ரலி) வழியாக ஷுஅபா (ரஹ்) அறிவிப்பதில், “‘பின்னர் அவர் (இன்பம் துய்க்க) முயன்று விட்டால்” என இடம் பெற்றுள்ளதே தவிர, “விந்து வெளியாகாவிட்டாலும்” என்பது இடம் பெறவில்லை.

“நான்கு கிளைகள்” என்பன மனைவியின் இரு கைகளும் இரு கால்களுமாகும்.

அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 524

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏الْحُسَيْنِ بْنِ ذَكْوَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَطَاءَ بْنَ يَسَارٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏قَالَ:‏ ‏

‏قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَلَمْ يُمْنِ قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ وَيَغْسِلُ ذَكَرَهُ قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


وَحَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏الْحُسَيْنِ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَا أَيُّوبَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏أَنَّهُ سَمِعَ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம், “தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, விந்தை வெளியேற்றாத ஒருவரின் மீது குளிப்புக் கடமையாகுமா?” என்று கேட்டேன். “அவர் தம் இன உறுப்பைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குச் செய்வதைப் போன்று உளூச் செய்து கொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்” என்று உஸ்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனி (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தானும் செவியுற்றதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.