அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 523

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏الْمَلِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْمَلِيِّ ‏ ‏يَعْنِي بِقَوْلِهِ الْمَلِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْمَلِيِّ ‏ ‏أَبُو أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ :‏ ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ فِي الرَّجُلِ يَأْتِي أَهْلَهُ ثُمَّ لَا يُنْزِلُ قَالَ ‏ ‏يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, விந்தை வெளியேற்றாத ஒருவரின் மீது குளிப்புக் கடமையாகுமா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் தமது இன உறுப்பைக் கழுவிக் கொண்டு உளூச் செய்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 522

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏قَالَ ‏:‏

‏سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الرَّجُلِ ‏ ‏يُصِيبُ ‏ ‏مِنْ الْمَرْأَةِ ثُمَّ ‏ ‏يُكْسِلُ ‏ ‏فَقَالَ ‏ ‏يَغْسِلُ مَا أَصَابَهُ مِنْ الْمَرْأَةِ ثُمَّ يَتَوَضَّأُ وَيُصَلِّي

தம் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டு, விந்து வெளியேறாத ஒருவரது நிலையைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். “மனைவியிடமிருந்து தம் மீது பட்டதை அவர் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு உளூச் செய்து கொண்டு தொழலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 521

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏ذَكْوَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ عَلَى ‏ ‏رَجُلٍ ‏ ‏مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَأَرْسَلَ إِلَيْهِ فَخَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ فَقَالَ ‏ ‏لَعَلَّنَا أَعْجَلْنَاكَ قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا أُعْجِلْتَ أَوْ ‏ ‏أَقْحَطْتَ ‏ ‏فَلَا غُسْلَ عَلَيْكَ وَعَلَيْكَ الْوُضُوءُ ‏


و قَالَ ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏إِذَا أُعْجِلْتَ أَوْ ‏ ‏أُقْحِطْتَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்ஸாரித் தோழர்களில் ஒருவரது இல்லத்தைக் கடந்து சென்றபோது அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்கள். அந்த அன்ஸாரித் தோழர் (குளித்து விட்டுத்) தமது தலையிலிருந்து தண்ணீர் வழியும் நிலையில் (விரைந்து) வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாம் உங்களை அவசரப் படுத்தி விட்டோம் போலும்” என்றார்கள். அதற்கு அவர், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (உடலுறவின்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தாலோ விந்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலோ குளிக்க வேண்டியதில்லை; நீங்கள் உளூச் செய்து கொள்வது போதுமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

இப்னு பஷ்ஷார் (ரஹ்) வழி அறிவிப்பில், “…. அவசரப்பட்டு அல்லது (விந்தை) வெளிப்படுத்தாமல் …” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 520

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْعَلَاءِ بْنُ الشِّخِّيرِ ‏ ‏قَالَ ‏:‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْسَخُ ‏ ‏حَدِيثُهُ بَعْضُهُ بَعْضًا كَمَا ‏ ‏يَنْسَخُ ‏ ‏الْقُرْآنُ بَعْضُهُ بَعْضًا ‏

“குர்ஆனின் ஒரு வசனம் மற்றொரு வசனத்(தின் சட்டத்)தை மாற்றுவதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றுகளும் ஒன்றை மற்றொன்று மாற்றி வந்தது” என்று அபுல் அலா அல்ஷிக்கீர் (ரஹ்) கருத்துத் தெரிவிக்கின்றார்.

அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 519

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ:‏ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِنَّمَا الْمَاءُ مِنْ الْمَاءِ

“(விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 518

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكٍ يَعْنِي ابْنَ أَبِي نَمِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏ ‏

‏خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ ‏ ‏الِاثْنَيْنِ إِلَى ‏ ‏قُبَاءَ ‏ ‏حَتَّى إِذَا كُنَّا فِي ‏ ‏بَنِي سَالِمٍ ‏ ‏وَقَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى بَابِ ‏ ‏عِتْبَانَ ‏ ‏فَصَرَخَ بِهِ فَخَرَجَ يَجُرُّ ‏ ‏إِزَارَهُ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَعْجَلْنَا الرَّجُلَ فَقَالَ ‏ ‏عِتْبَانُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الرَّجُلَ يُعْجَلُ عَنْ امْرَأَتِهِ وَلَمْ ‏ ‏يُمْنِ ‏ ‏مَاذَا عَلَيْهِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا الْمَاءُ مِنْ الْمَاءِ

நான் ஒரு திங்கட்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குபா எனும் இடத்திற்குச் சென்றேன். நாங்கள் பனூ ஸாலிம் கோத்திரத்தார் வசிக்குமிடத்திற்கு வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இத்பான் பின் மாலிக் (ரலி) வீட்டு வாசலுக்குச் சென்று நின்று அவர்களை உரத்து அழைத்தார்கள். உடனே இத்பான் (ரலி) தமது கீழாடையை இழுத்தபடி (அவசரமாக) வெளியே வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாம் இவரை அவசரப் படுத்தி விட்டோமே!” என்று கூறினார்கள்.

அப்போது இத்பான் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (உடலுறவின்போது) விந்து வெளிவருவதற்கு முன்பே தம் மனைவியை விட்டகல அவசரப் படுத்தப்பட்ட ஒருவருக்கான சட்டம் என்னவென்று கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 20, ஹதீஸ் எண்: 517

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي يَعْقُوبَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ سَعْدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْحَسَنِ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏:‏

‏أَرْدَفَنِي ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ يَوْمٍ خَلْفَهُ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبَّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِحَاجَتِهِ ‏ ‏هَدَفٌ ‏ ‏أَوْ ‏ ‏حَائِشُ ‏ ‏نَخْلٍ ‏


‏قَالَ ‏ ‏ابْنُ أَسْمَاءَ ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏يَعْنِي حَائِطَ نَخْلٍ ‏

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாகனத்தில் என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு சென்றபோது என்னிடம் இரகசியமாக ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை எந்த மனிதரிடமும் சொல்ல மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இயற்கைத் தேவைக்காக ஒதுங்கும் மறைவிடங்களிலேயே மேடுகள் நிறைந்த ஒதுக்குப்புறம் அல்லது பேரீச்சந் தோட்டம் ஆகியனவே அவர்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி)


குறிப்பு :

இப்னு அஸ்மா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘ஹாயிஷு நக்லு’ என்பதற்கு, அடர்ந்த பேரீச்சந் தோட்டம் என்பதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 516

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ الْأَنْصَارِيُّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏أَقْبَلْتُ بِحَجَرٍ أَحْمِلُهُ ثَقِيلٍ وَعَلَيَّ ‏ ‏إِزَارٌ ‏ ‏خَفِيفٌ قَالَ فَانْحَلَّ إِزَارِي ‏ ‏وَمَعِيَ الْحَجَرُ لَمْ أَسْتَطِعْ أَنْ أَضَعَهُ حَتَّى بَلَغْتُ بِهِ إِلَى مَوْضِعِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ارْجِعْ إِلَى ثَوْبِكَ فَخُذْهُ وَلَا تَمْشُوا عُرَاةً ‏

நான் ஒரு கனமான கல்லைத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். அப்போது என் இடுப்பில் ஒரு மெல்லிய கீழாடை மட்டுமே இருந்தது. அதுவும் அவிழ்ந்து விழுந்துவிட்டது; என்னிடமோ பெரிய கல். என்னால் அதை இறக்கி வைக்க முடியாமல், சேர வேண்டிய இடம்வரை போய்ச் சேர்ந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “திரும்பிச் சென்று (அவிழ்ந்து விழுந்த) உமது ஆடையை எடுத்து (உடுத்தி)க் கொள்க! நிர்வாணமாக நடக்காதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 515

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَنْقُلُ مَعَهُمْ الْحِجَارَةَ ‏ ‏لِلْكَعْبَةِ ‏ ‏وَعَلَيْهِ إِزَارُهُ فَقَالَ لَهُ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏عَمُّهُ يَا ابْنَ أَخِي لَوْ حَلَلْتَ إِزَارَكَ فَجَعَلْتَهُ عَلَى مَنْكِبِكَ دُونَ الْحِجَارَةِ قَالَ فَحَلَّهُ فَجَعَلَهُ عَلَى مَنْكِبِهِ فَسَقَطَ مَغْشِيًّا عَلَيْهِ قَالَ فَمَا رُئِيَ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ عُرْيَانًا ‏

(கஅபாவைப் புதுப்பிக்கும்போது சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களுடன் கஅபாவுக்காகக் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு கீழாடை மட்டுமே அணிந்திருந்தார்கள். அவர்களுடைய சிறிய தந்தையான அப்பாஸ் (ரலி), “என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் கீழாடையை அவிழ்த்து, உங்கள் தோள்மீது கல்லுக்குக் கீழே வைத்துக் கொள்ளலாமே!” என்று கூறினார்கள். (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறே அதை அவிழ்த்துத் தமது தோள் மீது வைத்தார்கள். உடனே மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அவர்கள் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 514

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ بَكْرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏لَمَّا بُنِيَتْ ‏ ‏الْكَعْبَةُ ‏ ‏ذَهَبَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَبَّاسٌ ‏ ‏يَنْقُلَانِ حِجَارَةً فَقَالَ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اجْعَلْ ‏ ‏إِزَارَكَ ‏ ‏عَلَى ‏ ‏عَاتِقِكَ ‏ ‏مِنْ الْحِجَارَةِ فَفَعَلَ ‏ ‏فَخَرَّ ‏ ‏إِلَى الْأَرْضِ ‏ ‏وَطَمَحَتْ ‏ ‏عَيْنَاهُ إِلَى السَّمَاءِ ثُمَّ قَامَ فَقَالَ ‏ ‏إِزَارِي ‏ ‏إِزَارِي فَشَدَّ عَلَيْهِ ‏ ‏إِزَارَهُ ‏


‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏فِي رِوَايَتِهِ عَلَى رَقَبَتِكَ وَلَمْ يَقُلْ عَلَى عَاتِقِكَ ‏

கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களை நோக்கி, “கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது கீழாடையை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு மயக்கம் தீர்ந்து எழுந்தவுடன், “என் கீழாடை, என் கீழாடை” என்றார்கள். கீழாடை (எடுத்துக் கொடுக்கப் பட்டவுடன்) அதனை இறுக்கிக் கட்டிக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “உமது தோளில்” என்பதற்குப் பகரமாக “உமது பிடரியில்” என இடம் பெற்றுள்ளது.