அத்தியாயம்: 3, பாடம்: 18, ஹதீஸ் எண்: 513

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏:‏

وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَتْ ‏ ‏بَنُو إِسْرَائِيلَ ‏ ‏يَغْتَسِلُونَ عُرَاةً يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى سَوْأَةِ بَعْضٍ وَكَانَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏يَغْتَسِلُ وَحْدَهُ فَقَالُوا وَاللَّهِ مَا يَمْنَعُ ‏ ‏مُوسَى ‏ ‏أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلَّا أَنَّهُ آدَرُ قَالَ فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ قَالَ ‏ ‏فَجَمَحَ ‏ ‏مُوسَى ‏ ‏بِإِثْرِهِ يَقُولُ ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ حَتَّى نَظَرَتْ ‏ ‏بَنُو إِسْرَائِيلَ ‏ ‏إِلَى سَوْأَةِ ‏ ‏مُوسَى ‏ ‏قَالُوا وَاللَّهِ مَا ‏ ‏بِمُوسَى ‏ ‏مِنْ بَأْسٍ فَقَامَ الْحَجَرُ حَتَّى نُظِرَ إِلَيْهِ قَالَ فَأَخَذَ ثَوْبَهُ فَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا


قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏وَاللَّهِ إِنَّهُ بِالْحَجَرِ نَدَبٌ سِتَّةٌ أَوْ سَبْعَةٌ ضَرْبُ ‏ ‏مُوسَى ‏ ‏بِالْحَجَرِ ‏

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார், ஒருவர் மற்றவரது இன உறுப்பைப் பார்க்கும் நிலையில் பிறந்தமேனியுடன் (கூட்டாகக்) குளிக்கும் வழக்கம் உடையோராக இருந்தனர். மூஸா (அலை) எப்போதும் தனியாகவே குளிப்பார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! விதைவீக்க நோயாளியாய் இருப்பதனால்தான் மூஸா நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை” என்று அம்மக்கள் கேலி பேசினர். ஒருமுறை மூஸா (அலை) குளிக்கப் போனபோது தமது ஆடையை(க் களைந்து) ஒரு கல்லின் மீது வைத்(து விட்டுக் குளித்)தார்கள். அந்தக் கல் அவர்களது துணியுடன் ஓடியது. மூஸா (அலை) அதைப் பின்தொடர்ந்து “கல்லே, எனது துணி; கல்லே, எனது துணி!” என்று கூறியவாறு விரைந்து ஓடி, (இறுதியாக பனூ இஸ்ராயீல் மக்கள் பகுதிக்கு) வந்தபோது மூஸா (அலை) அவர்களது இன உறுப்பை அவர்கள் பார்த்து விட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! மூஸாவுக்கு எந்தக் குறையுமில்லை” என்று கூறினர். மூஸா (அலை) (நிர்வாணமாகப்) பார்க்கப்படும்வரை (ஓடிய) அந்தக் கல் நின்றது. உடனே மூஸா (அலை) தமது ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை (த் தமது கைத்தடியால்) அடிக்கலானார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

“அல்லாஹ்வின் மீதாணையாக! மூஸா (அலை) கல்லின் மீது அடித்ததில் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்து விட்டன” என்று இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) (கூடுதலாகக்) கூறுகின்றார்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த பல ஹதீஸ்களுள் இதுவும் ஒன்று” என்று ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 3, பாடம்: 17, ஹதீஸ் எண்: 512

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ الْحُبَابِ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلَا ‏ ‏يُفْضِي ‏ ‏الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلَا ‏ ‏تُفْضِي ‏ ‏الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَا ‏ ‏مَكَانَ عَوْرَةِ عُرْيَةِ الرَّجُلِ وَعُرْيَةِ الْمَرْأَةِ ‏

“ஓர் ஆண், மற்றோர் ஆணின் இன உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண், மற்றொரு பெண்ணின் இன உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

இபுனு அபீ ஃபுதைக் (ரஹ்) வழி அறிவிப்பில், “இன உறுப்பை” என்பதற்குப் பகரமாக, “நிர்வாணத்தை” எனும் சொல் ஆளப் பட்டுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 511

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُوسَى الْقَارِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏وَضَعْتُ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَاءً وَسَتَرْتُهُ فَاغْتَسَلَ ‏

“நான் நபி (ஸல்) அவர்களுக்கு (குளிக்கத்) தண்ணீர் வைத்து விட்டு அவர்களைத் திரையிட்டு மறைத்துக் கொண்டேன்; அவர்கள் குளித்தார்கள்” என மைமூனா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 510

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا مُرَّةَ ‏ ‏مَوْلَى ‏ ‏عَقِيلٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ ‏ ‏حَدَّثَتْهُ :‏

أَنَّهُ ‏‏لَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ بِأَعْلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى غُسْلِهِ فَسَتَرَتْ عَلَيْهِ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏ثُمَّ أَخَذَ ثَوْبَهُ فَالْتَحَفَ بِهِ ثُمَّ صَلَّى ثَمَانَ رَكَعَاتٍ ‏ ‏سُبْحَةَ ‏ ‏الضُّحَى ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فَسَتَرَتْهُ ابْنَتُهُ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏بِثَوْبِهِ فَلَمَّا اغْتَسَلَ أَخَذَهُ فَالْتَحَفَ بِهِ ثُمَّ قَامَ فَصَلَّى ثَمَانَ سَجَدَاتٍ وَذَلِكَ ضُحًى ‏

நான் மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி), திரையிட்டு மறைத்தார். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக் கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஹானீ பின்த்தி அபீதாலிப் (ரலி)


குறிப்பு :

ஸயீத் பின் அபில் ஹிந்த் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்களது ஆடையினால் திரையிட்டு மறைத்துக் கொண்டார். குளித்து முடிந்தபின் அந்த ஆடையை வாங்கி நபி (ஸல்) போர்த்திக் கொண்டார்கள். பின்னர் நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அது முற்பகல் (ளுஹா) நேரமாகும்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 509

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا مُرَّةَ ‏ ‏مَوْلَى ‏ ‏أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ ‏ ‏تَقُولُ ‏:‏

‏ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ ‏ ‏يَغْتَسِلُ ‏ ‏وَفَاطِمَةُ ‏ ‏ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ ‏

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை, அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக் கொண்டிருந்தார்.

அறிவிப்பாளர் : உம்மு ஹானீ பின்த்தி அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 508

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ وَلَا تَقْضِي الصَّلَاةَ فَقَالَتْ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قُلْتُ لَسْتُ ‏ ‏بِحَرُورِيَّةٍ وَلَكِنِّي أَسْأَلُ قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக்கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “நீ ‘ஹரூரா’க்காரியா?” என்று கேட்டார்கள். “நான் ‘ஹரூரா’க்காரி அல்லள். ஆயினும், (தெரிந்து கொள்வதற்காகவே) கேட்கின்றேன்” என்றேன். அப்போது ஆயிஷா (ரலி), “எங்களுக்கும் (மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளை இடப்பட்டோம்; விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் கட்டளை இடப்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த்தி அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 507

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُعَاذَةَ ‏:‏

‏أَنَّهَا سَأَلَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قَدْ ‏ ‏كُنَّ نِسَاءُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحِضْنَ أَفَأَمَرَهُنَّ أَنْ يَجْزِينَ ‏قَالَ ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏تَعْنِي يَقْضِينَ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்ட பெண், விடுபட்ட தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “நீ ‘ஹரூரா’க்காரியா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்பட்ட காலத்தில் (விடுபட்ட தொழுகைகளை) மீட்குமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளை இடவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த்தி அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 506

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ الرِّشْكِ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ :‏

‏ ‏أَنَّ ‏‏امْرَأَةً سَأَلَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ ‏ ‏أَتَقْضِي إِحْدَانَا الصَّلَاةَ أَيَّامَ مَحِيضِهَا فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قَدْ ‏ ‏كَانَتْ إِحْدَانَا تَحِيضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ لَا تُؤْمَرُ بِقَضَاءٍ ‏

ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “எங்களில் ஒருத்தி மாதவிடாய் நாட்களில் தமக்கு விடுப்பட்டுப் போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி), “நீ ‘ஹரூரா’க்காரியா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் எங்களில் மாதவிடாய் ஏற்படும் ஒருவள், தொழுகைகளை மீட்குமாறு கட்டளையிடப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த்தி அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 505

حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ قُرَيْشٍ التَّمِيمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏:‏

‏إِنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏الَّتِي كَانَتْ تَحْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏شَكَتْ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الدَّمَ فَقَالَ لَهَا ‏ ‏امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி) அவர்களின் துணைவி உம்மு ஹபீபா பின்த்தி ஜஹ்ஷு (ரலி), தமது தொடர் குருதிப் போக்கைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாள்கள் வரை நீ காத்திரு! பின்னர் குளித்துக்கொள்!” என்று அவரிடம் கூறினார்கள். (எனினும்) உம்மு ஹபீபா (ரலி) ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 504

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ:‏ ‏

‏إِنَّ ‏ ‏أَمَّ حَبِيبَةَ ‏ ‏سَأَلَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الدَّمِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَأَيْتُ ‏ ‏مِرْكَنَهَا ‏ ‏مَلْآنَ دَمًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي ‏

உம்மு ஹபீபா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொடர் குருதிப் போக்கைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள் வரை நீ காத்திரு! அதற்குப் பின்னர் குளித்து விட்டுத் தொழுது கொள்!” என்று அவரிடம் கூறினார்கள்.

அவர் (நின்று) குளித்து வந்த துணி அலசும் பாத்திரத்தில் குருதி நிரம்பியிருக்க நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)