அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 403

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏قَالَ :‏ ‏

كَانَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏يُشَدِّدُ فِي الْبَوْلِ وَيَبُولُ فِي قَارُورَةٍ وَيَقُولُ إِنَّ ‏ ‏بَنِي إِسْرَائِيلَ ‏ ‏كَانَ إِذَا أَصَابَ جِلْدَ أَحَدِهِمْ بَوْلٌ ‏ ‏قَرَضَهُ ‏ ‏بِالْمَقَارِيضِ ‏ ‏فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏لَوَدِدْتُ أَنَّ صَاحِبَكُمْ لَا يُشَدِّدُ هَذَا التَّشْدِيدَ فَلَقَدْ رَأَيْتُنِي أَنَا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَتَمَاشَى ‏ ‏فَأَتَى سُبَاطَةً خَلْفَ حَائِطٍ فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ ‏ ‏فَانْتَبَذْتُ ‏ ‏مِنْهُ فَأَشَارَ إِلَيَّ فَجِئْتُ فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ ‏

சிறுநீர் (கழிக்கும்) விஷயத்தில் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், “சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்துவிடக் கூடியவராக இஸ்ரவேலர்களில் ஒருவர் இருந்தார்” என்று கூறுவார்கள்.

ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) (இதைக் கேள்வியுற்றபோது), “உங்கள் தோழர் (அபூமூஸா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் (கூற) விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆயத்தமானார்கள். நான் அவர்களை விட்டும் விலகிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று, அவர்களுக்குப் பின்பக்கம் நின்று, அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களை மறைத்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) வழியாக அபூவாஇல் ஷகீக் பின் ஸலமா (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 402

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ :‏ ‏

كُنْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْتَهَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ فَبَالَ قَائِمًا فَتَنَحَّيْتُ فَقَالَ ‏ ‏ادْنُهْ فَدَنَوْتُ حَتَّى قُمْتُ عِنْدَ عَقِبَيْهِ فَتَوَضَّأَ ‏ ‏فَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் (சென்று கொண்டு) இருந்தபோது அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்குச் சென்று நின்றவாறு சிறுநீர் கழிக்க ஆயத்தமானார்கள். நான் அவர்களை விட்டு விலகலானேன். அப்போது நபி (ஸல்), “(என்னை மறைத்துக் கொண்டு) பின்பக்கம் நில்” என்று கூறினார்கள். நான் அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (அவர்களை மறைத்துக்) கொண்டேன். பிறகு நபியவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தம் (கால்களைக் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) காலுறைகள் மீது தடவி மஸஹு செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 401

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامٍ ‏ ‏قَالَ :‏ ‏

بَالَ ‏ ‏جَرِيرٌ ‏ ‏ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ تَفْعَلُ هَذَا فَقَالَ نَعَمْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَالَ ثُمَّ تَوَضَّأَ ‏ ‏وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏


‏قَالَ ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏كَانَ يُعْجِبُهُمْ هَذَا الْحَدِيثُ لِأَنَّ إِسْلَامَ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كَانَ بَعْدَ نُزُولِ ‏ ‏الْمَائِدَةِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏عِيسَى ‏ ‏وَسُفْيَانَ ‏ ‏قَالَ فَكَانَ أَصْحَابُ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏يُعْجِبُهُمْ هَذَا الْحَدِيثُ لِأَنَّ إِسْلَامَ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كَانَ بَعْدَ نُزُولِ ‏ ‏الْمَائِدَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூச் செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்புகள் :

அறிவிப்பாளர் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூச் செய்தார்கள். (இறுதியில் கால்களைக் கழுவாமல்) தம் காலுறைகள் மீது (ஈரக் கைகளால்) தடவி மஸஹுச் செய்தார்கள். அவர்களிடம் (இது குறித்து), “இவ்வாறு செய்யலாமா?” என்று கேட்கப்பட்டபோது மேற்கண்டவாறு அறிவித்ததாக ஹம்மாம் பின் அல் ஹாரிஸ் (ரஹ்) கூறினார்.

“இந்த ஹதீஸ் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) 5:6ஆவது இறைவசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்” என்று (இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) கூறினார்.

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) மற்றும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய தோழர்களுக்கு இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளித்தது. ஏனெனில், ஜரீர் (ரலி), அல்மாயிதா எனும் (5ஆவது) அத்தியாயம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

5:6ஆவது இறைவசனம், மஸஹுச் செய்து கொள்ள அனுமதி அளிப்பதாகும்.

அத்தியாயம்: 2, பாடம்: 21, ஹதீஸ் எண்: 400

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِزُهَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رَوْحُ بْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَبَرَّزُ لِحَاجَتِهِ ‏ ‏فَآتِيهِ بِالْمَاءِ ‏ ‏فَيَتَغَسَّلُ بِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இயற்கைத் தேவைகளை முடிப்பதற்கு ஒதுக்குப்புறங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக நான் கொண்டு செல்லும் தண்ணீரால் (மல-ஜலம் கழித்தபின்) கழுவித் துப்புரவு செய்து கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 21, ஹதீஸ் எண்: 399

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَغُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدْخُلُ الْخَلَاءَ فَأَحْمِلُ أَنَا ‏ ‏وَغُلَامٌ ‏ ‏نَحْوِي إِدَاوَةً مِنْ مَاءٍ وَعَنَزَةً ‏ ‏فَيَسْتَنْجِي بِالْمَاءِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கழிப்பிடத்திற்குச் சென்றால் நானும் என்னைப் போன்ற இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பாத்திரத்தையும் கைத்தடி ஒன்றையும் உடன் கொண்டு செல்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்) அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 21, ஹதீஸ் எண்: 398

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏حَائِطًا ‏ ‏وَتَبِعَهُ ‏ ‏غُلَامٌ ‏ ‏مَعَهُ ‏ ‏مِيضَأَةٌ ‏ ‏هُوَ أَصْغَرُنَا فَوَضَعَهَا عِنْدَ سِدْرَةٍ فَقَضَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَاجَتَهُ فَخَرَجَ عَلَيْنَا وَقَدْ ‏ ‏اسْتَنْجَى ‏ ‏بِالْمَاءِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மல-ஜலம் கழிக்க) ஒரு தோட்டத்திற்குள் சென்றபோது எங்களில் வயதில் சிறியவரான ஒருவர் தம்முடன் தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அதை ஓர் இலந்தை மரம் அருகே வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இயற்கைத் தேவைகளை முடித்தபின் அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்துவிட்டு எங்களிடம் வந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 20, ஹதீஸ் எண்: 397

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اتَّقُوا ‏ ‏اللَّعَّانَيْنِ ‏ ‏قَالُوا وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي ‏ ‏يَتَخَلَّى ‏ ‏فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ ‏

“சாபத்துக்குரிய இரு செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்களிடம்) கூறினார்கள். “சாபத்துக்குரிய அவ்விரு செயல்கள் யாவை அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர்.

அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்வுக்கான) நிழல்(இடங்)களில் மலம் கழிப்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 19, ஹதீஸ் எண்: 396

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَشْعَثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُحِبُّ التَّيَمُّنَ فِي شَأْنِهِ كُلِّهِ فِي نَعْلَيْهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலணி அணியும் போதும் தலை வாரிக் கொள்ளும் போதும் (தண்ணீரால் தம்மைத்) தூய்மைப் படுத்திக் கொள்ளும் போதும் – தம் செயல்கள் அனைத்திலும் வலப் பக்கத்தை(க் கொண்டு தொடங்குவதை)யே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 19, ஹதீஸ் எண்: 395

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

إِنْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ إِذَا تَطَهَّرَ وَفِي ‏ ‏تَرَجُّلِهِ ‏ ‏إِذَا تَرَجَّلَ وَفِي انْتِعَالِهِ إِذَا انْتَعَلَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தண்ணீரால்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் காலணி அணியும் போதும் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விருப்பமாகக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 18, ஹதீஸ் எண்: 394

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الثَّقَفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏:‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى أَنْ يَتَنَفَّسَ فِي الْإِنَاءِ وَأَنْ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ وَأَنْ ‏ ‏يَسْتَطِيبَ ‏ ‏بِيَمِينِهِ ‏

எவரும் (பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாம் என்றும் (இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது) வலக் கரத்தால் இன உறுப்பைத் தொட வேண்டாம் என்றும் வலக் கரத்தால் கழுவ வேண்டாம் என்றும் நபி (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)