அத்தியாயம்: 2, பாடம்: 23, ஹதீஸ் எண்: 413

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏بِلَالٍ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَسَحَ عَلَى الْخُفَّيْنِ ‏ ‏وَالْخِمَارِ ‏


‏وَفِي حَدِيثِ ‏ ‏عِيسَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بِلَالٌ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيٌّ يَعْنِي ابْنَ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடைய காலுறைகள் மீதும் தலைப்பாகையின் மீதும் (கைகளின் ஈரத்தால்) தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : பிலால் (ரலி)


குறிப்பு :

ஸுவைத் இபுனு ஸஈத் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் … மஸஹுச் செய்வதை நான் பார்த்தேன்” என்று பிலால் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 23, ஹதீஸ் எண்: 412

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى الْقَطَّانِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏بَكْرٌ ‏ ‏وَقَدْ ‏ ‏سَمِعْتَ مِنَ ‏ ‏ابْنِ الْمُغِيرَةِ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ فَمَسَحَ ‏ ‏بِنَاصِيَتِهِ ‏ ‏وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى الْخُفَّيْنِ ‏

நபி (ஸல்) உளூச் செய்தபோது (கைகளின் ஈரத்தால்) தமது முன் தலையின் மீதும் தலைப்பகை மீதும் காலுறைகள் மீதும் தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)


குறிப்பு :

முஃகீரா (ரலி) அவர்களின் மகன் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக அறிவிப்பாளர்களுள் ஒருவரான பக்ரு பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 2, பாடம்: 23, ஹதீஸ் எண்: 411

حَدَّثَنَا ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَمُقَدَّمِ رَأْسِهِ وَعَلَى عِمَامَتِهِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

நபி (ஸல்) தம் காலுறைகள், முன்தலை மற்றும் தலைப்பாகை ஆகியவற்றின் மீது (கைகளின் ஈரத்தால்) தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 23, ஹதீஸ் எண்: 410

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدٌ الطَّوِيلُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

تَخَلَّفَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَخَلَّفْتُ مَعَهُ فَلَمَّا قَضَى حَاجَتَهُ قَالَ ‏ ‏أَمَعَكَ مَاءٌ فَأَتَيْتُهُ ‏ ‏بِمِطْهَرَةٍ ‏ ‏فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ ثُمَّ ذَهَبَ ‏ ‏يَحْسِرُ ‏ ‏عَنْ ذِرَاعَيْهِ فَضَاقَ كُمُّ ‏ ‏الْجُبَّةِ ‏ ‏فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ ‏ ‏الْجُبَّةِ ‏ ‏وَأَلْقَى ‏ ‏الْجُبَّةَ ‏ ‏عَلَى مَنْكِبَيْهِ وَغَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ ‏ ‏بِنَاصِيَتِهِ ‏ ‏وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى خُفَّيْهِ ثُمَّ رَكِبَ وَرَكِبْتُ فَانْتَهَيْنَا إِلَى الْقَوْمِ وَقَدْ قَامُوا فِي الصَّلَاةِ ‏ ‏يُصَلِّي بِهِمْ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ‏ ‏وَقَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً فَلَمَّا أَحَسَّ بِالنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَهَبَ يَتَأَخَّرُ ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏إِلَيْهِ فَصَلَّى بِهِمْ فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقُمْتُ فَرَكَعْنَا الرَّكْعَةَ الَّتِي سَبَقَتْنَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு குழுப் பயணத்தில்) அனைவருக்கும் பின்னால் (தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (வாகனத்திலிருந்து இறங்கி) இயற்கைத் தேவையை முடித்துக் கொண்டு வந்து, “உம்மிடம் தண்ணீர் உள்ளதா?” என்று கேட்டார்கள். நான் தண்ணீர் குவளையை அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அவர்கள் தம்முடைய முன் கைகளையும் முகத்தையும் கழுவினார்கள். பிறகு தமது முழங்கையை வெளியே எடுக்கப் போனபோது சட்டைக் கை குறுகலாக இருக்கவே, தமது கையை (அவர்கள் அணிந்திருந்த) நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நீளங்கியைத் தோளில் போட்டுக் கொண்டார்கள். பிறகு தமது முழங்கை வரைக் கழுவினார்கள். பிறகு (கைகளின் ஈரத்தால்) தமது முன் தலையின் மீதும் தலைப்பாகை மீதும் காலுறைகள் மீதும் தடவி மஸஹுச் செய்து கொண்டார்கள். பிறகு வாகனத்தில் ஏறினார்கள். நானும் ஏறிக் கொண்டேன். நாங்கள் (எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த எங்கள்) குழுவினரிடம் வந்து சேர்ந்தோம். அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு( ரலி) (இமாமாகத்) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு ரக்அத் தொழுது முடித்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டதை உணர்ந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி) பின்வாங்கப் பார்த்தார்கள். அப்போது, நபி (ஸல்), அவர்களை (அங்கேயே நின்று தொழுமாறு) சைகை செய்தார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) (எஞ்சிய ரக்அத்களையும்) மக்களுக்குத் தொழுவித்தார்கள். அவர் ஸலாம் கொடுத்ததும் நபிஅ(ஸல்) அவர்களும் நானும் எழுந்து எங்களுக்கு விடுபட்டுப் போயிருந்த ஒரு ரக்அத்தைத் தொழுதோம்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 409

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏:‏

أَنَّهُ وَضَّأَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقَالَ لَهُ فَقَالَ إِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ

நபி (ஸல்) உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்தார்கள். (கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி (மஸஹுச் செய்து) கொண்டார்கள். அப்போது நான் (காலுறைகளைக் கழற்ற வேண்டுமல்லவா என்பது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 408

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏ ‏

كُنْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فِي مَسِيرٍ فَقَالَ لِي ‏ ‏أَمَعَكَ مَاءٌ قُلْتُ نَعَمْ فَنَزَلَ عَنْ رَاحِلَتِهِ فَمَشَى حَتَّى ‏ ‏تَوَارَى ‏ ‏فِي سَوَادِ اللَّيْلِ ثُمَّ جَاءَ فَأَفْرَغْتُ عَلَيْهِ مِنْ ‏ ‏الْإِدَاوَةِ ‏ ‏فَغَسَلَ وَجْهَهُ وَعَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏مِنْ صُوفٍ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُخْرِجَ ذِرَاعَيْهِ مِنْهَا حَتَّى أَخْرَجَهُمَا مِنْ أَسْفَلِ ‏ ‏الْجُبَّةِ ‏ ‏فَغَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ ثُمَّ أَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ وَمَسَحَ عَلَيْهِمَا ‏

நான் ஓர் இரவுப் பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்!(இருக்கிறது)” என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளையிலிருந்த நீரை அவர்கள் (கைகளின்) மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அவர்கள் கம்பளி நீளங்கி அணிந்திருந்ததால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, முழங்கைகளை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு (கைகளை ஈரப்படுத்தி) தமது தலையைத் தடவி மஸஹுச் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், “அவற்றை விட்டு விடுவீராக! ஏனெனில் நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்” என்று சொல்லி, (கைகளை ஈரப்படுத்தி) காலுறைகளைத் தடவி மஸஹுச் செய்து கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 407

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ :‏ ‏

خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِيَقْضِيَ حَاجَتَهُ فَلَمَّا رَجَعَ تَلَقَّيْتُهُ ‏ ‏بِالْإِدَاوَةِ ‏ ‏فَصَبَبْتُ عَلَيْهِ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ لِيَغْسِلَ ذِرَاعَيْهِ فَضَاقَتْ الْجُبَّةُ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ ‏ ‏الْجُبَّةِ ‏ ‏فَغَسَلَهُمَا وَمَسَحَ رَأْسَهُ ‏ ‏وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى بِنَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக (ஒருமுறை) புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது தண்ணீர் குவளையுடன் அவர்களை நான் எதிர் கொண்டேன். நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தம் (முன்)கைகளைக் கழுவி விட்டுப் பிறகு முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் முழங்கைகளைக் கழுவ முயன்றபோது அவர்கள் அணிந்திருந்த நீளங்கி குறுகலானதாக இருந்ததால், தம் கைகளை நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும், (கைகளை ஈரப்படுத்தி) தமது தலையைத் தடவி மஸஹுச் செய்தார்கள். தம் காலுரைகள் மீதும் (அவ்வாறே கைகளை ஈரப்படுத்தி) தடவி மஸஹுச் செய்தார்கள். பிறகு எங்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 406

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ :‏ ‏

كُنْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَقَالَ يَا ‏ ‏مُغِيرَةُ ‏ ‏خُذْ ‏ ‏الْإِدَاوَةَ ‏ ‏فَأَخَذْتُهَا ثُمَّ خَرَجْتُ مَعَهُ فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى ‏ ‏تَوَارَى ‏ ‏عَنِّي فَقَضَى حَاجَتَهُ ثُمَّ جَاءَ وَعَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏شَامِيَّةٌ ضَيِّقَةُ الْكُمَّيْنِ فَذَهَبَ يُخْرِجُ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ عَلَيْهِ فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا فَصَبَبْتُ عَلَيْهِ ‏ ‏فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى ‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், “முஃகீரா! தண்ணீர் குவளையை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள். நான் (நீர் நிறைந்த குவளையை) எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னை விட்டு மறைந்து, இயற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். அவர்கள், கைப்பகுதி குறுகலான ஷாம் நாட்டு (இறுக்கமான) நீளங்கி அணிந்திருந்தார்கள். எனவே, தமது கையைச் சட்டையிலிருந்து வெளியே கழற்றி எடுக்க முயன்றார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக இருக்கவே, தமது கையை அதன் கீழிலிருந்து வெளியே எடுத்தார்கள். நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக உளூச் செய்வதைப் போன்று உளூச் செய்தார்கள். பிறகு (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்து விட்டுப் பின்னர் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 405

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ بْنِ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏:‏

بَيْنَا أَنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ إِذْ نَزَلَ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ مِنْ ‏ ‏إِدَاوَةٍ ‏ ‏كَانَتْ مَعِي فَتَوَضَّأَ ‏ ‏وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவுப் பயணத்தில் நான் இருந்தேன். அப்போது அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். பிறகு (திரும்பி) வந்தார்கள். அப்போது நான் என்னிடமிருந்த குவளையிலிருந்து தண்ணீரை ஊற்ற, அவர்கள் உளூச் செய்தார்கள். (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 404

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏:‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ ‏ ‏الْمُغِيرَةُ ‏ ‏بِإِدَاوَةٍ ‏ ‏فِيهَا مَاءٌ فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ ‏ ‏وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ رُمْحٍ ‏ ‏مَكَانَ حِينَ حَتَّى ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ ‏ ‏سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ ثُمَّ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோது நான் தண்ணீர் குவளையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துத் திரும்பியபின் நான் தண்ணீரை ஊற்ற, அவர்கள் உளூச் செய்தார்கள். (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)


குறிப்பு :

முஹம்மதிப்னில் முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) தமது முகத்தையும் கைகளையும் (தண்ணீரால்) கழுவினார்கள். மேலும், (கைகளை ஈரப்படுத்தி) தமது தலையில் தடவி மஸஹுச் செய்தார்கள். பின்னர் தம் காலுறைகள் மீது மஸஹுச் செய்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.