அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 373

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏غَيْلَانَ وَهُوَ ابْنُ جَرِيرٍ الْمَعْوَلِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏:‏

دَخَلْتُ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ ‏

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது பல் துலக்கும் குச்சியின் முனை அவர்களின் வாயில் இருந்தது.

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 372

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا دَخَلَ بَيْتَهُ بَدَأَ بِالسِّوَاكِ

நபி (ஸல்) வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல் துலக்குவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 371

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏ ‏

سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قُلْتُ ‏ ‏بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் செய்யத் தொடங்கும் முதற் செயல் எது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “பல் துலக்குவது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஷுரைஹ் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 370

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏عَلَى أُمَّتِي ‏ ‏لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏

“இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமமாகி விடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் (ரஹ்) வழி அறிவிப்பு, “இறைநம்பிக்கையாளர்களுக்கு …” என்றில்லாமல் “என் சமுதாயத்தாருக்கு …” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 2, பாடம்: 14, ஹதீஸ் எண்: 369

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا ‏ ‏يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏إِسْبَاغُ ‏ ‏الْوُضُوءِ عَلَى ‏ ‏الْمَكَارِهِ ‏ ‏وَكَثْرَةُ ‏ ‏الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ ‏ ‏الرِّبَاطُ ‏


‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ذِكْرُ ‏ ‏الرِّبَاطِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏ثِنْتَيْنِ فَذَلِكُمْ ‏ ‏الرِّبَاطُ ‏ ‏فَذَلِكُمْ ‏ ‏الرِّبَاطُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சிரமகாலச் சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும் பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும் ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை உங்கள் (தகுதிகள் உயர்வதற்கான) முன்னேற்பாடுகளாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஷுஃபா (ரஹ்) வழி அறிவிப்பில், “இவை உங்கள் (தகுதிகள் உயர்வதற்கான) முன்னேற்பாடுகளாகும்” என்பது இடம்பெறவில்லை. மாலிக் (ரஹ்) வழி அறிவிப்பில், “இவை உங்கள் (தகுதிகள் உயர்வதற்கான) முன்னேற்பாடுகளாகும்”; “இவை உங்கள் (தகுதிகள் உயர்வதற்கான) முன்னேற்பாடுகளாகும்” என இருமுறை இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 13, ஹதீஸ் எண்: 368

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَلَفٌ يَعْنِي ابْنَ خَلِيفَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ ‏:‏

كُنْتُ خَلْفَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَهُوَ يَتَوَضَّأُ لِلصَّلَاةِ فَكَانَ يَمُدُّ يَدَهُ حَتَّى تَبْلُغَ إِبْطَهُ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏مَا هَذَا الْوُضُوءُ فَقَالَ يَا ‏ ‏بَنِي فَرُّوخَ ‏ ‏أَنْتُمْ هَاهُنَا لَوْ عَلِمْتُ أَنَّكُمْ هَاهُنَا مَا تَوَضَّأْتُ هَذَا الْوُضُوءَ سَمِعْتُ ‏ ‏خَلِيلِي ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏تَبْلُغُ ‏ ‏الْحِلْيَةُ ‏ ‏مِنْ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ ‏

தொழுகைக்காக உளூச் செய்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள்வரை நீட்டிக் கழுவினார்கள்.

நான், “அபூஹுரைரா அவர்களே! இது என்ன (புது) உளூ?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்கு இருந்தீர்களா? நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள் என்று தெரிந்திருந்தால் இவ்வாறு உளூச் செய்திருக்க மாட்டேன். என் உற்ற தோழர் (நபி-ஸல்), ‘இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்’ என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூ ஹாஸிம் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 367

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَسُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَى الْمَقْبُرَةَ فَقَالَ ‏ ‏السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا قَالُوا أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ فَقَالُوا كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا لَهُ خَيْلٌ غُرٌّ ‏ ‏مُحَجَّلَةٌ ‏ ‏بَيْنَ ظَهْرَيْ خَيْلٍ ‏ ‏دُهْمٍ ‏ ‏بُهْمٍ ‏ ‏أَلَا يَعْرِفُ خَيْلَهُ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّهُمْ يَأْتُونَ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ الْوُضُوءِ وَأَنَا ‏ ‏فَرَطُهُمْ ‏ ‏عَلَى الْحَوْضِ أَلَا ‏ ‏لَيُذَادَنَّ ‏ ‏رِجَالٌ عَنْ حَوْضِي كَمَا ‏ ‏يُذَادُ ‏ ‏الْبَعِيرُ الضَّالُّ ‏ ‏أُنَادِيهِمْ أَلَا ‏ ‏هَلُمَّ ‏ ‏فَيُقَالُ إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ فَأَقُولُ ‏ ‏سُحْقًا ‏ ‏سُحْقًا ‏
‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ إِلَى الْمَقْبُرَةِ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏غَيْرَ أَنَّ حَدِيثَ ‏ ‏مَالِكٍ ‏ ‏فَلَيُذَادَنَّ ‏ ‏رِجَالٌ عَنْ حَوْضِي ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்’ (மண்ணறையிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடும்போது நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறிவிட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகில்) காண விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் காண விரும்பியது) இதுவரை (பூமியில் பிறந்து) வந்திராத நம் சகோதரர்களை” என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்து, அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ளமாட்டாரா? கூறுங்கள்” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (உளூவின்) உறுப்புகள் ஒளிர்பவர்களாக (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்-கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து) விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் ‘வாருங்கள்’ என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றி விட்டார்கள்’ என்று சொல்லப்படும். அப்போது நான் “(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக; அப்புறப்படுத்துவானாக!” என்று கூறுவேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், இஸ்ஹாக் பின் மூஸா அல்-அன்ஸாரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து) விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள்” என்றில்லாமல், “நிச்சயமாக சிலர் எனது தடாகத்திலிருது துரத்தப் படுவார்கள்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 366

و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِىِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ حَوْضِي لَأَبْعَدُ مِنْ ‏ ‏أَيْلَةَ ‏ ‏مِنْ ‏ ‏عَدَنٍ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي ‏ ‏لَأَذُودُ ‏ ‏عَنْهُ الرِّجَالَ كَمَا ‏ ‏يَذُودُ ‏ ‏الرَّجُلُ الْإِبِلَ الْغَرِيبَةَ عَنْ حَوْضِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَتَعْرِفُنَا قَالَ نَعَمْ تَرِدُونَ عَلَيَّ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ آثَارِ الْوُضُوءِ لَيْسَتْ لِأَحَدٍ غَيْرِكُمْ ‏

“எனது (சுவனத்) தடாக(மான அல்-கவ்ஸரின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென்திசையின்) ஏடன் நகரத்திலிருந்து (வடதிசையின்) ஐலாவைவிட அதிகத் தொலைவுடையதாகும். என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டு மற்றவர்களின் ஒட்டகத்தை விரட்டுவதைப் போன்று, அந்தத் தடாகத்திலிருந்து சிலரை நான் விரட்டி விடுவேன்” என்று கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்; நீங்கள் உளூச் செய்ததன் அடையாளமாக (உளூவின்) உறுப்புகள் ஒளிர்பவர்களாய் என்னிடம் வருவீர்கள். அந்த அடையாளம் உங்களையன்றி வேறெவருக்கும் இருக்காது.” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 365

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِوَاصِلٍ ‏ ‏قَالَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَرِدُ عَلَيَّ أُمَّتِي الْحَوْضَ وَأَنَا ‏ ‏أَذُودُ ‏ ‏النَّاسَ عَنْهُ كَمَا ‏ ‏يَذُودُ ‏ ‏الرَّجُلُ إِبِلَ الرَّجُلِ عَنْ إِبِلِهِ قَالُوا يَا نَبِيَّ اللَّهِ أَتَعْرِفُنَا قَالَ نَعَمْ لَكُمْ ‏ ‏سِيمَا ‏ ‏لَيْسَتْ لِأَحَدٍ غَيْرِكُمْ تَرِدُونَ عَلَيَّ غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ آثَارِ الْوُضُوءِ وَلَيُصَدَّنَّ عَنِّي طَائِفَةٌ مِنْكُمْ فَلَا يَصِلُونَ فَأَقُولُ يَا رَبِّ هَؤُلَاءِ مِنْ أَصْحَابِي فَيُجِيبُنِي مَلَكٌ فَيَقُولُ وَهَلْ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எனது சமுதாயத்தார் (மறுமை நாளில்) எனது (அல்-கவ்ஸர் எனும்) தடாகத்திற்கு வருவார்கள். ஒருவர் தமது ஒட்டகத்தைத் தவிர்த்து, பிறரது ஒட்டகத்தை விரட்டி விடுவதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரை விரட்டுவேன்” என்று கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் நபியே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்; வேறெவருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூச் செய்ததன் அடையாளமாக (உளூவின்) உறுப்புகள் ஒளிர்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். உங்களில் ஒரு குழுவினர் என்னிடம் வரமுடியாதவாறு தடுக்கப்படுவர். அவர்களால் (என்னிடம்) வந்து சேரமுடியாது. அப்போது நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்” என்பேன். அப்போது வானவர் ஒருவர், ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (பொல்லாப் புதுமைகளாக உங்களது மார்க்கத்தில்) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று என்னிடம் கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 364

حَدَّثَنَا ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مَرْوَانَ الْفَزَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ حَوْضِي أَبْعَدُ مِنْ ‏ ‏أَيْلَةَ ‏ ‏مِنْ ‏ ‏عَدَنٍ ‏ ‏لَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنْ الثَّلْجِ وَأَحْلَى مِنْ الْعَسَلِ بِاللَّبَنِ وَلَآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ النُّجُومِ وَإِنِّي لَأَصُدُّ النَّاسَ عَنْهُ كَمَا يَصُدُّ الرَّجُلُ إِبِلَ النَّاسِ عَنْ حَوْضِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَتَعْرِفُنَا يَوْمَئِذٍ قَالَ نَعَمْ لَكُمْ سِيمَا لَيْسَتْ لِأَحَدٍ مِنْ الْأُمَمِ تَرِدُونَ عَلَيَّ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ أَثَرِ الْوُضُوءِ ‏

“எனது (சுவனத்) தடாக(மான அல்-கவ்ஸரின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென்திசையின்) ஏடன் நகரத்திலிருந்து (வடதிசையின்) ஐலாவைவிட அதிகத் தொலைவுடையதாகும். அதன் நீர், பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையும் பால் கலந்த தேனைவிட இனிமையுமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியில் (பிற)மக்களின் ஒட்டகங்கள் (நீரருந்துவதைத்) தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்த சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூச் செய்ததன் அடையாளமாக உறுப்புகள் ஒளிர்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதன் மூலம் உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)