அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 363

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏أَبَا هُرَيْرَةَ :‏ ‏

يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ حَتَّى كَادَ يَبْلُغُ الْمَنْكِبَيْنِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ حَتَّى رَفَعَ إِلَى السَّاقَيْنِ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ أَثَرِ الْوُضُوءِ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ ‏ ‏غُرَّتَهُ ‏ ‏فَلْيَفْعَلْ ‏

அபூஹுரைரா (ரலி) உளூச் செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவியதோடு, (கூடுதலாகக் கழுவுதலைத்) தோள்பட்டைவரை நீட்டினார்கள். பிறகு கால்களைக் கழுவியதோடு (கழுவுதலைக்) கணுக்கால்வரை உயர்த்தினார்கள். பிறகு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூச் செய்ததன் அடையாளமாக (உளூவின்) உறுப்புகள் ஒளியுடையோராக வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவின் உறுப்புகளைக் கூடுதலாக நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக் கொள்ள முடியுமோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 362

حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَالْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ بْنِ دِينَارٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَارَةُ بْنُ غَزِيَّةَ الْأَنْصَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ ‏ ‏قَالَ رَأَيْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏:‏

يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ ‏ ‏فَأَسْبَغَ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي الْعَضُدِ ثُمَّ يَدَهُ الْيُسْرَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي الْعَضُدِ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي السَّاقِ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُسْرَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي السَّاقِ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَوَضَّأُ وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْتُمْ ‏ ‏الْغُرُّ ‏ ‏الْمُحَجَّلُونَ ‏ ‏يَوْمَ الْقِيَامَةِ مِنْ ‏ ‏إِسْبَاغِ ‏ ‏الْوُضُوءِ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ فَلْيُطِلْ ‏ ‏غُرَّتَهُ ‏ ‏وَتَحْجِيلَهُ ‏

அபூஹுரைரா (ரலி) உளூச் செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தை முழுமையாகக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் புஜம் வரைக் கழுவினார்கள். பிறகு இடக் கரத்தை புஜம் வரை கழுவினார்கள். பிறகு (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். பிறகு வலக் காலின் கணுவரை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் (அவ்வாறே) கணுவரைக் கழுவினார்கள். பின்னர், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உளூச் செய்வதை நான் பார்த்திருக்கின்றேன்” என்று கூறிவிட்டு, “நீங்கள் உளூவை முழுமையாகச் செய்தமையால் மறுமை நாளில் (உளூச் செய்த) உறுப்புகள் ஒளியுடையோராக இருப்பீர்கள். எனவே, உங்களில் யாருக்கு முடியுமோ அவர் (உளூவின் உறுப்புகளின்) எல்லைக்கு மேல் அதிகமாகக் கழுவிக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 11, ஹதீஸ் எண்: 361

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مَعْمَرِ بْنِ رِبْعِيٍّ الْقَيْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هِشَامٍ الْمَخْزُومِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ وَهُوَ ابْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ حَكِيمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ ‏

“ஒருவர் அழகிய முறையில் (முழுமையாக) உளூச் செய்யும்போது அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறுகின்றன. (உளூவின்) முடிவில், அவருடைய நகக்கண்கள் வழியாக (அவர் செய்த சிறு பாவங்கள்) வெளியேறி விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 11, ஹதீஸ் எண்: 360

حَدَّثَنَا ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوْ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ خَرَجَ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ كَانَ ‏ ‏بَطَشَتْهَا ‏ ‏يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنْ الذُّنُوبِ ‏

“ஒரு முஸ்லிமான/முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் உளூச் செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன்/நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகொண்டு செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) நீருடன்/நீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும் போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீருடன்/நீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. இறுதியில், (அங்கிருந்து) அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராகக் கிளம்புகின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 10, ஹதீஸ் எண்: 359

حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏:‏

أَنَّ رَجُلًا تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعَ ظُفُرٍ عَلَى قَدَمِهِ فَأَبْصَرَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ فَرَجَعَ ثُمَّ صَلَّى ‏

ஒருவர் உளூச் செய்தபோது தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை(க் கழுவாமல்) விட்டு விட்டார். அதைக் கண்ட நபி (ஸல்), “திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார்.

அறிவிப்பாளர் : உமர் பின் கத்தாப் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 09, ஹதீஸ் எண்: 358

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلٌ ‏ ‏لِلْأَعْقَابِ ‏ ‏مِنْ النَّارِ ‏

“(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 09, ஹதீஸ் எண்: 357

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

أَنَّهُ رَأَى قَوْمًا يَتَوَضَّئُونَ مِنْ ‏ ‏الْمَطْهَرَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَسْبِغُوا ‏ ‏الْوُضُوءَ فَإِنِّي سَمِعْتُ ‏ ‏أَبَا الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏وَيْلٌ ‏ ‏لِلْعَرَاقِيبِ ‏ ‏مِنْ النَّارِ ‏

நீர்க் குவளைகளில் இருந்து (தண்ணீர் ஊற்றி) உளூச் செய்து கொண்டிருந்த மக்கள் சிலரை அபூஹுரைரா (ரலி) கண்டு, “உளூவை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், ‘(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால் நரம்புகளுக்கு நரக வேதனைதான்’ என்று அபுல்காஸிம் (முஹம்மது-ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக முஹம்மது பின் ஸியாத் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 09, ஹதீஸ் எண்: 356

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَّامٍ الْجُمَحِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الرَّبِيعُ يَعْنِي ابْنَ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ وَهُوَ ابْنُ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى رَجُلًا لَمْ يَغْسِلْ ‏ ‏عَقِبَيْهِ ‏ ‏فَقَالَ ‏ ‏وَيْلٌ ‏ ‏لِلْأَعْقَابِ ‏ ‏مِنْ النَّارِ

தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துக் கொண்டிருந்)த ஒருவரை நபி (ஸல்)  கண்டு, “(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 09, ஹதீஸ் எண்: 355

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏يُوسُفَ بْنِ مَاهَكَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏:‏

‏قَالَ تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ سَافَرْنَاهُ فَأَدْرَكَنَا وَقَدْ حَضَرَتْ صَلَاةُ الْعَصْرِ فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا فَنَادَى ‏ ‏وَيْلٌ ‏ ‏لِلْأَعْقَابِ ‏ ‏مِنْ النَّارِ ‏

நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) எங்களுக்குப் பின்னால் (சற்றுத் தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். அஸ்ருத் தொழுகையின் நேரம் நெருங்கும்போது எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவி (மஸஹுச் செய்து) கொண்டிருந்தோம். (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்), “(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான்” என்று அறிவிப்புச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னுல் ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 09, ஹதீஸ் எண்: 354

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالِ بْنِ يِسَافٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏قَالَ ‏:‏

رَجَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏حَتَّى إِذَا كُنَّا بِمَاءٍ بِالطَّرِيقِ تَعَجَّلَ قَوْمٌ عِنْدَ الْعَصْرِ فَتَوَضَّئُوا وَهُمْ عِجَالٌ فَانْتَهَيْنَا إِلَيْهِمْ وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يَمَسَّهَا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلٌ ‏ ‏لِلْأَعْقَابِ ‏ ‏مِنْ النَّارِ ‏ ‏أَسْبِغُوا ‏ ‏الْوُضُوءَ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏أَسْبِغُوا ‏ ‏الْوُضُوءَ وَفِي حَدِيثِهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِى يَحْيَى الْأَعْرَجِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி நாங்கள் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்தடைந்தபோது சிலர் அஸ்ரு(த் தொழுகைக்)காக அவசர அவசரமாக உளூச் செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல், அவை காய்ந்து கிடப்பதைக் கண்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான். உளூவை முழுமையாகச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னுல் ஆஸ் (ரலி)