அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 333

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

سَمِعْتُ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏وَهُوَ بِفِنَاءِ الْمَسْجِدِ فَجَاءَهُ الْمُؤَذِّنُ عِنْدَ الْعَصْرِ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ وَاللَّهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمْ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَتَوَضَّأُ رَجُلٌ مُسْلِمٌ فَيُحْسِنُ الْوُضُوءَ فَيُصَلِّي صَلَاةً إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الَّتِي تَلِيهَا ‏


‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ ‏ ‏يُصَلِّي الْمَكْتُوبَةَ ‏

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) பள்ளிவாசலின் முற்றத்தில் அமர்ந்திருந்த ஓர் அஸ்ருத் தொழுகை நேரத்தில், அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். அவரிடம் உளூச் செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, உளூச் செய்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப் போகிறேன். ஓர் இறைவசனம் மட்டும் இல்லையெனில் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

“ஒருவர் அழகிய முறையில் (நிறைவாக) உளூச் செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக அன்னாரின் பணியாள் ஹும்ரான் (ரஹ்)


குறிப்பு :

அபூஉஸாமா (ரஹ்) வழி அறிவிப்பில், “அழகிய முறையில் உளூச் செய்தபின், கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் …” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 03, ஹதீஸ் எண்: 332

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏عُثْمَانَ ‏:‏ ‏

دَعَا بِإِنَاءٍ فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلَاثَ مِرَارٍ فَغَسَلَهُمَا ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْإِنَاءِ فَمَضْمَضَ ‏ ‏وَاسْتَنْثَرَ ‏ ‏ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏

உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (ஆரம்பமாகத்) தம்முடைய முன் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்தினுள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். மேலும், இரு (கைகளையும்) முழங்கை மூட்டுவரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக் கையால் தடவி) மஸஹு செய்தார்கள். பிறகு தம்மிரு கால்களையும் மூன்று முறை கழுவினார்கள்.

பின்னர், “யார் எனது இந்த உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவர் செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக அன்னாரின் பணியாள் ஹும்ரான் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 03, ஹதீஸ் எண்: 331

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏:‏ ‏

دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ مَضْمَضَ ‏ ‏وَاسْتَنْثَرَ ‏ ‏ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى ‏ ‏الْمِرْفَقِ ‏ ‏ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَكَانَ عُلَمَاؤُنَا يَقُولُونَ هَذَا الْوُضُوءُ ‏ ‏أَسْبَغُ ‏ ‏مَا يَتَوَضَّأُ بِهِ أَحَدٌ لِلصَّلَاةِ ‏

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) உளூச் செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உளூச் செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன்கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்து, தமது இடக்கரத்தையும் அதைப் போன்றே (மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக்கையால் தடவி) மஸஹு செய்தார்கள். பிறகு தமது வலக்காலை கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக்காலையும் அதைப் போன்றே (மூன்று முறை) கழுவினார்கள்.

பின்னர், “நான் செய்த இந்த உளூவைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உளூச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன். மேலும், ‘யார் நான் செய்த இந்த உளூவைப் போன்று உளூச் செய்து, பின்னர் வேறு எந்த(க்கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


குறிப்பு :

“இவ்வாறு உளூச் செய்வது தான் தொழுகைக்காக ஒருவர் உளூச் செய்யும் முறைகளிலேயே நிறைவானதாகும்” என்று தம் சமகால அறிஞர்கள் கூறியதாக அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 2, பாடம்: 02, ஹதீஸ் எண்: 330

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرُ بْنُ رَاشِدٍ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏أَخِي ‏ ‏وَهْبِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏:‏ ‏

عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تُقْبَلُ صَلَاةُ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ ‏

“உங்களில் ஒருவருக்குச் சிறு துடக்கு (காற்றுப் பிரிதல்) ஏற்பட்டுவிட்டால், அவர் உளூச் செய்து கொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறித்த ஹதீஸ்களுள் மேற்காண்பதும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறினார்

அத்தியாயம்: 2, பாடம்: 02, ஹதீஸ் எண்: 329

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏قَالُوا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ ‏:‏ ‏

دَخَلَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَلَى ‏ ‏ابْنِ عَامِرٍ ‏ ‏يَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَقَالَ أَلَا تَدْعُو اللَّهَ لِي يَا ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ ‏ ‏غُلُولٍ ‏‏وَكُنْتَ عَلَى ‏ ‏الْبَصْرَةِ


 ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْرَائِيلَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) சென்றபோது இப்னு ஆமிர் (ரஹ்), “இப்னு உமர் அவர்களே! எனக்காக நீங்கள் அல்லாஹ்விடம் (தொழுது) பிரார்த்திக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி), “உளூ இல்லாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்தத் தான-தர்மமும் ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியதை நான் கேட்டிருக்கின்றேன். அப்போது நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 01, ஹதீஸ் எண்: 328

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ بْنُ هِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ ‏ ‏قَالَ ‏:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الطُّهُورُ ‏ ‏شَطْرُ ‏ ‏الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ ‏ ‏أَوْ تَمْلَأُ ‏ ‏مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ ‏ ‏يَغْدُو ‏ ‏فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ ‏ ‏مُوبِقُهَا ‏

“தூய்மை என்பது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்'(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று துதிப்)பது, (நன்மை-தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். ‘சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி'(அல்லாஹ் தூயவன்; எல்லாப்புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள்-பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை என்பது (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் என்பது சான்றாகும். பொறுமை என்பது வெளிச்சமாகும். குர்ஆன் என்பது உனக்குத் தவிர்க்க முடியாத (ஏவல்) தேவையாகும்; அல்லது எதிரான (விலக்கல்) சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மைத் தாமே விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மையே அழித்துக் கொள்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல்-அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 96, ஹதீஸ் எண்: 327

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْعَبْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ :‏ ‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏يَا ‏ ‏آدَمُ ‏ ‏فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ قَالَ يَقُولُ أَخْرِجْ ‏ ‏بَعْثَ ‏ ‏النَّارِ قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ قَالَ فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ [‏وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ‏]

‏قَالَ فَاشْتَدَّ عَلَيْهِمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ فَقَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْ ‏ ‏يَأْجُوجَ ‏ ‏وَمَأْجُوجَ ‏ ‏أَلْفًا وَمِنْكُمْ رَجُلٌ قَالَ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ‏ ‏شَطْرَ ‏ ‏أَهْلِ الْجَنَّةِ إِنَّ مَثَلَكُمْ فِي الْأُمَمِ كَمَثَلِ الشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ ‏ ‏كَالرَّقْمَةِ ‏ ‏فِي ذِرَاعِ الْحِمَارِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُمَا ‏ ‏قَالَا ‏ ‏مَا أَنْتُمْ يَوْمَئِذٍ فِي النَّاسِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي الثَّوْرِ الْأَبْيَضِ وَلَمْ يَذْكُرَا أَوْ ‏ ‏كَالرَّقْمَةِ ‏ ‏فِي ذِرَاعِ الْحِمَارِ

“வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (மறுமை நாளில்), ‘ஆதமே!’ என்றழைப்பான். அதற்கு ஆதம் (அலை), ‘(இறைவா, கட்டளையிடு!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்’ என்று கூறுவார்கள். அப்போது இறைவன், ‘நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களைத் தனியாகப் பிரித்தெடுங்கள்’ என்று கட்டளையிடுவான். அதற்கு அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது பேரை’ என்று பதிலளிப்பான். சிறுவனும் நரைத்து (கிழவனாகி) விடுகின்ற(தைப் போன்ற) நேரமது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, “கருவுற்ற ஒவ்வொரு பெண்ணும் தன் கருவை (அரைகுறையாகப்) பிரசவித்துவிடும் நேரமது. மக்கள் (மதுவால்) போதை கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் (அங்குக்) காண்பீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்” என்று (22:2 இறைவசனத்தையும்) சொன்னார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியது, மக்களுக்குக் கடுமையானதாகத் தோன்றியது. எனவே மக்கள், “(எஞ்சுகின்ற) அந்த ஒருவர் எங்களுள் யார்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நற்செய்தி பெறுங்கள்! யஃஜூஜ்-மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (தனியாகப் பிரிக்கப்படுவோரில்) இருப்பார்” என்று கூறிவிட்டுப் பின்னர், “என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மகிழ்ச்சியடைந்து) அல்லாஹ்வைப் புகழ்ந்தோம்; “அல்லாஹ் மிகப் பெரியவன்” (அல்லாஹு அக்பர்) என்று முழங்கினோம். பின்னர், “என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன்” என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று முழக்கமிட்டோம். பின்னர், “என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன். மற்றச் சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் (எண்ணிக்கையின்) நிலை, கறுப்புக்காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றது – அல்லது – கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று (தனித்துவமாய் இருக்கும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்றைய தினம் மனிதர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக்காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்று – அல்லது – வெள்ளைக்காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவீர்கள்)” என்ற உவமையுடன் இடம்பெற்றுள்ளது. “கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று” என்ற உவமை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 95, ஹதீஸ் எண்: 326

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ وَهُوَ ابْنُ مِغْوَلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏خَطَبَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَسْنَدَ ظَهْرَهُ إِلَى قُبَّةِ أَدَمٍ فَقَالَ ‏ ‏أَلَا لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ اشْهَدْ أَتُحِبُّونَ أَنَّكُمْ رُبُعُ أَهْلِ الْجَنَّةِ فَقُلْنَا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَتُحِبُّونَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ مَا أَنْتُمْ فِي سِوَاكُمْ مِنْ الْأُمَمِ إِلَّا كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي الثَّوْرِ الْأَبْيَضِ أَوْ كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي الثَّوْرِ الْأَسْوَدِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது முதுகை, தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி எங்களிடையே (ஒருமுறை) உரையாற்றினார்கள். அப்போது, “அறிந்து கொள்ளுங்கள்! சொர்க்கத்தில் முஸ்லிமான ஆன்மாவைத் தவிர வேறெவரும் நுழையமுடியாது” என்று அறிவித்துவிட்டு, “இறைவா! நான் (சொல்ல வேண்டிய செய்தியைச்) சொல்லிவிட்டேனா? இறைவா (இதற்கு) நீயே சாட்சி” என்று கூறினார்கள். பின்னர், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். அடுத்து, “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். “சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கின்றேன். மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் வெள்ளைக் காளைமாட்டிலிலுள்ள கறுப்பு முடியைப் போன்று – அல்லது – கறுப்புக்காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவீர்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 95, ஹதீஸ் எண்: 325

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي قُبَّةٍ نَحْوًا مِنْ أَرْبَعِينَ رَجُلًا فَقَالَ ‏ ‏أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ قُلْنَا نَعَمْ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ فَقُلْنَا نَعَمْ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَاكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ

நாங்கள் சுமார் நாற்பது பேர் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தில் இருந்தோம். அப்போது அவர்கள், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்” என்று சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். அதற்கும் நாங்கள் “ஆம்” என்றோம். “என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கின்றேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிம் ஆன்மாவைத் தவிர வேறெவரும் நுழையமுடியாது. இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் கறுப்புக்காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று – அல்லது – சிவப்புக்காளை மாட்டின் தோலிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவீர்கள்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 95, ஹதீஸ் எண்: 324

حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَا تَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَكَبَّرْنَا ثُمَّ قَالَ أَمَا تَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَكَبَّرْنَا ثُمَّ قَالَ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ وَسَأُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ مَا الْمُسْلِمُونَ فِي الْكُفَّارِ إِلَّا كَشَعْرَةٍ بَيْضَاءَ فِي ثَوْرٍ أَسْوَدَ أَوْ كَشَعْرَةٍ سَوْدَاءَ فِي ثَوْرٍ أَبْيَضَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, “சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (எனது சமுதாயத்தவர்) இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கின்றேன். அதைப் பற்றி (ஓர் உவமை) உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்: இறைமறுப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கறுப்புக்காளை மாட்டி(ன் உடலி)லுள்ள வெள்ளை முடியைப் போன்று – அல்லது – வெள்ளைக்காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவர்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)