அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 193

و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ وَهُوَ ابْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَزَالُونَ يَسْأَلُونَكَ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَتَّى يَقُولُوا هَذَا اللَّهُ فَمَنْ خَلَقَ اللَّهَ قَالَ فَبَيْنَا أَنَا فِي الْمَسْجِدِ إِذْ جَاءَنِي نَاسٌ مِنْ ‏ ‏الْأَعْرَابِ ‏ ‏فَقَالُوا يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏هَذَا اللَّهُ فَمَنْ خَلَقَ اللَّهَ قَالَ فَأَخَذَ حَصًى بِكَفِّهِ فَرَمَاهُمْ ثُمَّ قَالَ قُومُوا قُومُوا صَدَقَ خَلِيلِي ‏

“அபூஹுரைரா! உம்மிடம் (சிலர்) கேள்வி கேட்டுக் கொண்டே வந்து இறுதியில், (எல்லாவற்றையும்) படைத்தவன் அல்லாஹ்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறி (முன்னறிவிப்புச் செய்து) இருந்தார்கள்.

ஒரு நாள் நான் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கையில் என்னிடம் கிராமவாசிகளில் சிலர் வந்து, “அபூஹுரைரா! (எல்லாவற்றையும்) படைத்தவன் அல்லாஹ்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்று கேட்டார்கள். உடனே நான் எனது உள்ளங்கை நிறைய பொடிக்கற்களை அள்ளி, அவர்கள் மீது வீசியெறிந்தேன். பிறகு “எழுந்திருங்கள்; எழுந்திருங்கள்! என் உற்ற தோழர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உண்மையே உரைத்தார்கள்” என்றேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 192

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ يَسْأَلُونَكُمْ عَنْ الْعِلْمِ حَتَّى يَقُولُوا هَذَا اللَّهُ خَلَقَنَا فَمَنْ خَلَقَ اللَّهَ قَالَ وَهُوَ آخِذٌ بِيَدِ رَجُلٍ فَقَالَ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ قَدْ سَأَلَنِي اثْنَانِ وَهَذَا الثَّالِثُ أَوْ قَالَ سَأَلَنِي وَاحِدٌ وَهَذَا الثَّانِي ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْإِسْنَادِ وَلَكِنْ قَدْ قَالَ فِي آخِرِ الْحَدِيثِ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ‏

“(சில) மனிதர்கள் அறிவுபூர்வமான (சில) கேள்விகளை உங்களிடம் கேட்டுக் கொண்டே வந்து இறுதியில், நம்மை அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வை யார் படைத்தார்? என்று கேட்பார்கள்” என்று நபி (ஸல்) கூறி (முன்னறிவிப்புச் செய்து) இருந்தார்கள். “அல்லாஹ்வும் அவனின் தூதரும் உண்மையே உரைத்தனர். (அந்தக் கேள்வியை ஏற்கனவே) என்னிடம் இருவர் கேட்டுவிட்டனர்; இவர் மூன்றாமவர் அல்லது (ஏற்கனவே) என்னிடம் ஒருவர் கேட்டுவிட்டார்; இவர் இரண்டாமவர்” என்று (அவ்வாறு வினவிய) ஒருவரது கையைப் பிடித்தவராக அபூஹுரைரா (ரலி) கூறினார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

இஸ்மாயீல் இபுனு உலய்யா (ரஹ்) இடம்பெறும் முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்) கூறியது பதிவு செய்யப் படாமல் “அல்லாஹ்வும் அவனின் தூதரும் உண்மையே உரைத்தனர் …” என்று அபூஹுரைரா (ரலி) தொடங்குவதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 191

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولَ مَنْ خَلَقَ كَذَا وَكَذَا حَتَّى يَقُولَ لَهُ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَ ذَلِكَ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ وَلْيَنْتَهِ ‏


حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْتِي الْعَبْدَ الشَّيْطَانُ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا وَكَذَا مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ ‏

“உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவன் யார்?; இதைப் படைத்தவன் யார்? என்று (ஒவ்வொன்றாகக்)கேட்டுக்கொண்டே வந்து, உன் இறைவனைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் கட்டத்தை எட்டுவான். அப்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (அவனது கேள்விகளை) முடிவுக்குக் கொண்டு வந்துவிடவும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஓர் அடியானிடம் ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவன் யார்?; இதைப் படைத்தவன் யார்? என்று (ஒவ்வொன்றாகக்)கேட்டுக்கொண்டே வந்து …” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 190

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ آمَنْتُ بِاللَّهِ ‏


و حَدَّثَنَا ‏ ‏مَحْمُودُ بْنُ غَيْلَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْمُؤَدِّبُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ السَّمَاءَ مَنْ خَلَقَ الْأَرْضَ فَيَقُولُ اللَّهُ ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ وَزَادَ وَرُسُلِهِ ‏

“எல்லாப் படைப்பினங்களையும் அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்று நீட்சியடையும் கேள்வி கேட்கும் குழப்ப நிலைக்கு மக்கள் உள்ளாவார்கள். (உங்களுள்) ஒருவருக்கு இதுபோன்ற குழப்ப எண்ணம் ஏற்பட்டால் ‘நான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறி (அதில் அவர் உறுதி அடைந்து) கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து ‘வானத்தைப் படைத்தவன் யார்? பூமியைப் படைத்தவர் யார்?’ என்று கேட்பான். அவர் ‘அல்லாஹ்’ என்று பதிலளிப்பார். (தொடர்ந்து, அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்றும் கேட்பான்) என்றும் ‘அத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறுங்கள்” என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 189

حَدَّثَنَا ‏ ‏يُوسُفُ بْنُ يَعْقُوبَ الصَّفَّارُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ عَثَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏سُعَيْرِ بْنِ الْخِمْسِ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏ ‏‏

سُئِلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْوَسْوَسَةِ قَالَ ‏ ‏تِلْكَ ‏ ‏مَحْضُ ‏ ‏الْإِيمَانِ ‏

நபி (ஸல்) அவர்களிடம் மனத்தடுமாற்றைப் பற்றி வினவப்பட்டபோது, “அதுதான் தெளிவான இறைநம்பிக்கை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 188

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

جَاءَ نَاسٌ مِنْ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلُوهُ إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ قَالَ ‏ ‏وَقَدْ وَجَدْتُمُوهُ قَالُوا نَعَمْ قَالَ ذَاكَ ‏ ‏صَرِيحُ ‏ ‏الْإِيمَانِ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو الْجَوَّابِ ‏ ‏عَنْ ‏ ‏عَمَّارِ بْنِ رُزَيْقٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) நினைவுகள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகின்றோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்), “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 187

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏الْجَعْدِ أَبِي عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏ ‏‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ سَيِّئَةً وَاحِدَةً ‏


و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْجَعْدِ أَبِي عُثْمَانَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏وَزَادَ وَمَحَاهَا اللَّهُ وَلَا يَهْلِكُ عَلَى اللَّهِ إِلَّا هَالِكٌ ‏

“நன்மைகளையும் தீமைகளையும் அல்லாஹ் (வரையறுத்து) விதி செய்து, பின்னர் அவற்றை விளக்கி விட்டான். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டவருக்கு, அதைச் செய்யாவிட்டாலும் ஒரு முழுமையான நன்மையாக அதை அல்லாஹ் பதிவு செய்கின்றான். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்தும் முடித்துவிட்டால் அதை அவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்காக, இன்னும் பல மடங்குகளாகப் பதிவு செய்கின்றான். ஒரு தீமையைச் செய்ய நினைத்து, (அல்லாஹ்வின் அச்சமேற்பட்டு) அதைச் செய்யாதவருக்கு அதை ஒரு முழு நன்மையாகப் பதிவு செய்கிறான். நினைத்தவாறு அவர் செய்து முடித்தால் ஒரு தீமையாக (மட்டுமே) பதிவு செய்கின்றான்” என்று மிக்குயர்ந்தோனும் வளங்களுக்கு உரியவனுமான தம் இறைவனைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு:

அப்துல் வாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “விரிந்து-பரந்து கிடக்கும் அல்லாஹ்வின் அருளை அள்ளிக் கொள்ளாமல் அலட்சியப் படுத்தியவன் அழிந்து விடுவான்” என்று அவரது கருத்துப் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 186

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَعَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ وَإِنْ عَمِلَهَا كُتِبَتْ ‏

“ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டவருக்கு, அதைச் செய்யாவிட்டாலும் ஒரு நன்மையாக அது பதிவு செய்யப்பட்டுவிடும். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்தும் முடித்துவிட்டவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக அது பதிவு செய்யப்படும். ஒரு தீமையைச் செய்ய நினைத்து, அதைச் செய்யாதவருக்கு அ(வரது தீய எண்ணமான)து (தீமையாகப்) பதியப்படுவதில்லை. நினைத்தவாறு அவர் செய்து முடித்தால் (மட்டுமே) பதிவு செய்யப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 185

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ :‏ ‏‏

عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا ‏ ‏تَحَدَّثَ ‏ ‏عَبْدِي بِأَنْ يَعْمَلَ حَسَنَةً فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا وَإِذَا ‏ ‏تَحَدَّثَ ‏ ‏بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً فَأَنَا أَغْفِرُهَا لَهُ مَا لَمْ يَعْمَلْهَا فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا لَهُ بِمِثْلِهَا وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ الْمَلَائِكَةُ رَبِّ ذَاكَ عَبْدُكَ يُرِيدُ أَنْ يَعْمَلَ سَيِّئَةً وَهُوَ أَبْصَرُ بِهِ فَقَالَ ارْقُبُوهُ فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً إِنَّمَا تَرَكَهَا مِنْ جَرَّايَ وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلَامَهُ فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِمِثْلِهَا حَتَّى يَلْقَى اللَّهَ ‏

“என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய நினைத்தால், அவன் அதைச் செய்து முடிக்காவிட்டாலும் ஒரு நன்மையாகப் பதிவு செய்வேன். அதை அவன் செய்து முடித்துவிட்டால், அதைப் போன்ற பத்து நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்யாவிட்டால் அவனை மன்னித்து விடுவேன். அவன் (செய்ய நினைத்த) அந்தத் தீமையைச் செய்துவிட்டால் செய்ததற்கொப்ப ஒரு தீமையாகப் பதிவு செய்வேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கூறினான்”.

“தன் (ஒவ்வொரு) அடியானை(யும்) பார்த்து (அவனது எண்ணவோட்டங்களை) அல்லாஹ் அறிந்து கொண்டிருக்கும் நிலையில், ‘இறைவா! உன்னுடைய இன்ன அடியான் ஒரு தீமையைச் செய்ய விரும்புகிறானே?’ என்று வானவர்கள் கேட்டதற்கு, ‘அவனைக் கண்காணித்து வாருங்கள்! அந்தத் தீமையை அவன் செய்து முடித்து விட்டால் செய்ததற்கொப்ப ஒரு தீமையாக அதைப் பதிவு செய்யுங்கள். அந்தத் தீமையைச் செய்வதை அவன் கைவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். ஏனெனில், என்(மீதிருந்த அச்சத்தி)னால் தான் அதை அவன் கைவிட்டான்’ என்று அல்லாஹ் கூறினான்”.

“உங்களுள் இஸ்லாத்தைத் தம் செயல்பாடுகளால் அழகுபடுத்தும் ஒருவருக்கு, அவர் (மரணித்து) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் அதைப் போன்று பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை (நன்மை) பதிவு செய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அதற்கொப்ப ஒரு தீமையே பதிவு செய்யப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)


குறிப்பு:

“இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்தப் பல ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முநப்பிஹ் (ரஹ்) கூறும் குறிப்பொன்று இதில் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 184

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏ ‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ وَلَمْ يَعْمَلْهَا كَتَبْتُهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كَتَبْتُهَا عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَإِذَا هَمَّ بِسَيِّئَةٍ وَلَمْ يَعْمَلْهَا لَمْ أَكْتُبْهَا عَلَيْهِ فَإِنْ عَمِلَهَا كَتَبْتُهَا سَيِّئَةً وَاحِدَةً ‏

“என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். அவன் (எண்ணியவாறு) அந்த நன்மையைச் செயல்படுத்திவிட்டால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மையாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு தீமையாகப் பதிவு செய்வதில்லை. அவன் (எண்ணியவாறு) அந்தத் தீமையை செய்துவிட்டால் அதை ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்வேன் என்று மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கூறினான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)