அத்தியாயம்: 1, பாடம்: 54, ஹதீஸ் எண்: 173

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَاصِمٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ يَعْنِي أَبَا عَاصِمٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏حَيْوَةُ بْنُ شُرَيْحٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ ‏ ‏قَالَ : ‏

حَضَرْنَا ‏ ‏عَمْرَو بْنَ الْعَاصِ ‏ ‏وَهُوَ ‏ ‏فِي سِيَاقَةِ ‏ ‏الْمَوْتِ فَبَكَى طَوِيلًا وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏إِنِّي كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلَاثٍ لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنِّي وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدْ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ فَبَسَطَ يَمِينَهُ قَالَ فَقَبَضْتُ يَدِي قَالَ مَا لَكَ يَا ‏ ‏عَمْرُو ‏ ‏قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ قَالَ تَشْتَرِطُ بِمَاذَا قُلْتُ أَنْ يُغْفَرَ لِي قَالَ ‏ ‏أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا أَجَلَّ فِي عَيْنِي مِنْهُ وَمَا كُنْتُ أُطِيقُ أَنْ أَمْلَأَ عَيْنَيَّ مِنْهُ إِجْلَالًا لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لِأَنِّي لَمْ أَكُنْ أَمْلَأُ عَيْنَيَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِي مَا حَالِي فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلَا تَصْحَبْنِي نَائِحَةٌ وَلَا نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي ‏ ‏فَشُنُّوا ‏ ‏عَلَيَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا تُنْحَرُ ‏ ‏جَزُورٌ ‏ ‏وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي ‏

அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அவர்களது மரணத் தருவாயில் நாங்கள் அவரிடம் சென்றோம். நெடுநேரம் அழுத பின்னர் அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது, “அருமைத் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்னின்ன நற்செய்திகளைக் கூறியிருக்கிறார்களே! (ஏன் அழுகை)?” என்று அவரின் மகன் கேட்டார். அம்ரிப்னில் ஆஸ் (ரலி) தமது முகத்தை(த்தம் மகனை நோக்கி)த் திருப்பி, “நமது சேமிப்புகளுள் மிகச் சிறந்தது வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மது (ஸல்)  அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறியதுதான். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றேன்.

(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருந்ததில்லை. முடியுமெனில் அவர்களைக் கொன்றுவிடுவது எனக்கு மிக்க விருப்பமானதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை(ப் பற்றிய சிந்தனையை) ஏற்படுத்தியபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள்; நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன் என்று கூறினேன். நபி (ஸல்) தமது வலது கரத்தை நீட்டினார்கள். ஆனால், நான் என் கையை இழுத்துக் கொண்டேன். நபி (ஸல்), அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகின்றேன் என்று கூறினேன். நபி (ஸல்), எதில் நிபந்தனைகளை விதிக்கப்போகிறீர்? என்று கேட்டார்கள். எனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்), முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; (இஸ்லாத்துக்காக நாடுதுறக்கும் தியாகமான) ஹிஜ்ரத்தும் முந்தைய பாவங்களை அழித்து விடும்; (இஸ்லாமியக் கடமையான) ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்து விடும் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அவ்வேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட நான் விரும்பும் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் எனது கண்களால் அவர்களை ஏறெடுத்து முழுமையாகப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் என்னால் இயலாமலாகிவிடும். ஏனெனில், அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் நான் அவர்களை ஏறெடுத்து முழுமையாகப் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்து விட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என்னை நெருங்கக் கூடாது. என்னை (குழிக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும் போது என் மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரமளவுக்கு நீங்கள் என் மண்ணறையைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்)களிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டு கொள்வேன்” என்று அம்ரிப்னில் ஆஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் ஷிமாஸா அல் மஹ்ரீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 53, ஹதீஸ் எண்: 172

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ : ‏

قُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ قَالَ ‏ ‏مَنْ أَحْسَنَ فِي الْإِسْلَامِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ وَمَنْ أَسَاءَ فِي الْإِسْلَامِ أُخِذَ بِالْأَوَّلِ وَالْآخِرِ ‏


حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

“அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காக நாங்கள் (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?” என்று கேட்டோம். அதற்கு, “இஸ்லாத்தில் (நுழைந்து தொடர்ந்து) நற்செயல்கள் செய்து வருபவர் அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். இஸ்லாத்தில் (நுழைந்த பிறகும் ‘இறைமறுப்பு’ எனும்) தீமை செய்பவர், (இஸ்லாத்தைத் தழுவுவதற்கு) முன் செய்த தவறுகளுக்காகவும் (இஸ்லாத்தை ஏற்ற) பின் செய்த தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 53, ஹதீஸ் எண்: 171

: حَدَّثَنَا ‌عُثْمَانُ ‌بْنُ ‌أَبِي ‌شَيْبَةَ ، ‌حَدَّثَنَا ‌جَرِيرٌ ، ‌عَنْ ‌مَنْصُورٍ ، ‌عَنْ ‌أَبِي ‌وَائِلٍ ، عَنْ عَبْدِ اللهِ قَالَ

 قَالَ أُنَاسٌ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم: يَا رَسُولَ اللهِ، أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ؟ قَالَ: أَمَّا مَنْ أَحْسَنَ مِنْكُمْ فِي الْإِسْلَامِ فَلَا يُؤَاخَذُ بِهَا، وَمَنْ أَسَاءَ أُخِذَ بِعَمَلِهِ فِي الْجَاهِلِيَّةِ وَالْإِسْلَامِ

“அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காக நாங்கள் தண்டிக்கப் படுவோமா?” என்று சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, “இஸ்லாத்தில் (இணைந்தபின்) நற்செயல்கள் செய்து வருபவர், அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். (ஆனால், இஸ்லாத்தில் நுழைந்த பிறகும் ‘இறைமறுப்பு’ எனும்) தீமை செய்பவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகவும் இஸ்லாத்தில் (நுழைந்த பிறகு) செய்த தவறுகளுக்காகவும் (மறுமையில்) தண்டிக்கப்படுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 52, ஹதீஸ் எண்: 170

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏[يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ]  ‏إِلَى آخِرِ الْآيَةِ جَلَسَ ‏ ‏ثَابِتُ بْنُ قَيْسٍ ‏ ‏فِي بَيْتِهِ وَقَالَ أَنَا مِنْ أَهْلِ النَّارِ وَاحْتَبَسَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏أَبَا عَمْرٍو ‏ ‏مَا شَأْنُ ‏ ‏ثَابِتٍ ‏ ‏اشْتَكَى ‏ ‏قَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏إِنَّهُ لَجَارِي وَمَا عَلِمْتُ لَهُ بِشَكْوَى قَالَ فَأَتَاهُ ‏ ‏سَعْدٌ ‏ ‏فَذَكَرَ لَهُ قَوْلَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏ثَابِتٌ ‏ ‏أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ وَلَقَدْ عَلِمْتُمْ أَنِّي مِنْ أَرْفَعِكُمْ صَوْتًا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَنَا مِنْ أَهْلِ النَّارِ فَذَكَرَ ذَلِكَ ‏ ‏سَعْدٌ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَلْ هُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏قَطَنُ بْنُ نُسَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ ‏ ‏خَطِيبَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَلَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏حَمَّادٍ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِهِ ذِكْرُ ‏ ‏سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا نَزَلَتْ ‏‏[لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ] ‏‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏فِي الْحَدِيثِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏هُرَيْمُ بْنُ عَبْدِ الْأَعْلَى الْأَسَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يَذْكُرُ عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَاقْتَصَّ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏وَزَادَ فَكُنَّا ‏ ‏نَرَاهُ يَمْشِي بَيْنَ أَظْهُرِنَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ

“இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்” எனும் இந்த (49 : 2ஆவது) வசனம் அருளப்பெற்றபின் ஸாபித் பின் கைஸ் (ரலி), “நான் நரகவாசிகளில் ஒருவன்” என்று கூறிக்கொண்டு, நபி(ஸல்) அவர்களின் முன்வராமல் (வீட்டிலேயே) அடைந்து கிடந்தார்கள். எனவே, நபி (ஸல்), (ஸாபித் குறித்து) ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம் “அபூ அம்ரே! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?” என்று கேட்டார்கள் அதற்கு ஸஅத் (ரலி, “அவர் என் பக்கத்து வீட்டுகாரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். பிறகு ஸஅத் (ரலி), ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.

அப்போது ஸாபித் (ரலி), “இந்த (49 :2 ஆவது) வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார்கள். இதை ஸஅத் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு:

இதே ஹதீஸ் ஜஅஃபர் பின் ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அன்ஸாரீகளின் பேச்சாளராக இருந்தார்” என்ற கூடுதல் தகவல் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பேதுமில்லை.

ஸுலைமான் பின் அல்-முகைரா (ரஹ்) வழி அறிவிப்பு, “உங்கள் குரல்களை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் எனும் (49:2 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது…” என்று தொடங்குகிறது. அந்த ஹதீஸிலும் ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்களைப் பற்றியப் குறிப்பில்லை.

முஃதமிர் பின் ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பிலும் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை. ஆனால், “எங்களிடையே நடமாடிய ஒரு சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் (ரலி) அவர்களைக் கருதி வந்தோம்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 51, ஹதீஸ் எண்: 169

حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا ‏ ‏وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ ‏ ‏بِعَرَضٍ ‏ ‏مِنْ الدُّنْيَا

“காரிருள் சூழ்ந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அப்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் மனிதன் மாலையில் இறைமறுப்பாளானாக மாறிவிடுவான்.

மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்று விடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 50, ஹதீஸ் எண்: 168

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏وَأَبُو عَلْقَمَةَ الْفَرْوِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏صَفْوَانُ بْنُ سُلَيْمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ سَلْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ يَبْعَثُ رِيحًا مِنْ ‏ ‏الْيَمَنِ ‏ ‏أَلْيَنَ مِنْ الْحَرِيرِ فَلَا تَدَعُ أَحَدًا فِي قَلْبِهِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو عَلْقَمَةَ ‏ ‏مِثْقَالُ حَبَّةٍ ‏ ‏و قَالَ ‏ ‏عَبْدُ الْعَزِيزِ ‏ ‏مِثْقَالُ ذَرَّةٍ ‏ ‏مِنْ إِيمَانٍ إِلَّا قَبَضَتْهُ

“(மறுமை நாள் நெருங்கும்போது) யமன் நாட்டி(ன் திசையி)லிருந்து பட்டைவிட மென்மையான ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். உள்ளத்தில் ‘கடுகளவு’ அல்லது ‘அணுவளவு’ இறைநம்பிக்கை உள்ள எவரது உயிரையும் அது கைப்பற்றாமல் விடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸ், அபூஅல்கமா அல்ஃபர்லீ (ரஹ்) வழி அறிவிப்பில் ‘கடுகளவு’ என்றும், அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் (ரஹ்) வழி அறிவிப்பில் ‘அணுவளவு’ என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 49, ஹதீஸ் எண்: 167

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَجَّاجٍ الصَّوَّافِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏
‏أَنَّ ‏ ‏الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ ‏ ‏أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ حَصِينٍ وَمَنْعَةٍ قَالَ حِصْنٌ كَانَ ‏ ‏لِدَوْسٍ ‏ ‏فِي الْجَاهِلِيَّةِ فَأَبَى ذَلِكَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلَّذِي ‏ ‏ذَخَرَ ‏ ‏اللَّهُ ‏ ‏لِلْأَنْصَارِ ‏ ‏فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏هَاجَرَ إِلَيْهِ ‏ ‏الطُّفَيْلُ بْنُ عَمْرٍو ‏ ‏وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ ‏ ‏فَاجْتَوَوْا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ ‏ ‏مَشَاقِصَ ‏ ‏لَهُ فَقَطَعَ بِهَا ‏ ‏بَرَاجِمَهُ ‏ ‏فَشَخَبَتْ ‏ ‏يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ ‏ ‏الطُّفَيْلُ بْنُ عَمْرٍو ‏ ‏فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا ‏ ‏الطُّفَيْلُ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ

அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குச் சொந்தமான கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ரு (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும்போது உங்களைத்) தற்காத்துக் கொள்ள உறுதியான கோட்டை இருக்கிறதா? (தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ள கோட்டை தங்களுக்கு வேண்டுமா?)” என்று வினவினார். (அது மதீனத்து) அன்ஸாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்றபோது நபி (ஸல்) அவர்களோடு துஃபைல் பின் அம்ரு (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவை அண்மியபோது) மதீனாவின் தட்ப வெப்ப நிலை ஒத்துக்கொள்ளாமல் அவர் நோய்வாய்ப்பட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) துடித்துப்போன அவர், தம்முடைய பெரிய அம்புகளை எடுத்து தமது கைகளின் நாடிநரம்பை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் முழுக்க வடிந்து, இறுதியில் அவர் இறந்துவிட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ரு (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில்தான் காட்சியளித்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மறைக்கப் பட்டிருந்தன. அவரிடம், “உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் நாடு துறந்து அவனுடைய நபியிடம் வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்” என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள். “ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?” என்று கேட்டார்கள். “நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்கமாட்டோம்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது.” என்று அவர் சொன்னார்.

துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!” என்று பிராத்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 48, ஹதீஸ் எண்: 166

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْرِ بْنِ زَيْدٍ الدُّؤَلِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ أَبِي الْغَيْثِ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ مُطِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَهَذَا حَدِيثُهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْغَيْثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏خَرَجْنَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَفَتَحَ اللَّهُ عَلَيْنَا فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلَا ‏ ‏وَرِقًا ‏ ‏غَنِمْنَا الْمَتَاعَ وَالطَّعَامَ وَالثِّيَابَ ثُمَّ انْطَلَقْنَا إِلَى الْوَادِي وَمَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَبْدٌ لَهُ وَهَبَهُ لَهُ رَجُلٌ مِنْ ‏ ‏جُذَامَ ‏ ‏يُدْعَى ‏ ‏رِفَاعَةَ بْنَ زَيْدٍ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي الضُّبَيْبِ ‏ ‏فَلَمَّا نَزَلْنَا الْوَادِي قَامَ عَبْدُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحُلُّ ‏ ‏رَحْلَهُ ‏ ‏فَرُمِيَ بِسَهْمٍ فَكَانَ فِيهِ ‏ ‏حَتْفُهُ ‏ ‏فَقُلْنَا هَنِيئًا لَهُ الشَّهَادَةُ يَا رَسُولَ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَلَّا وَالَّذِي نَفْسُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ ‏ ‏إِنَّ ‏ ‏الشَّمْلَةَ ‏ ‏لَتَلْتَهِبُ عَلَيْهِ نَارًا أَخَذَهَا مِنْ الْغَنَائِمِ يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ قَالَ فَفَزِعَ النَّاسُ فَجَاءَ رَجُلٌ ‏ ‏بِشِرَاكٍ ‏ ‏أَوْ شِرَاكَيْنِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصَبْتُ يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شِرَاكٌ ‏ ‏مِنْ نَارٍ ‏ ‏أَوْ شِرَاكَانِ ‏ ‏مِنْ نَارٍ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்குப்) புறப்பட்டோம்; அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின் போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாக அடையவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘வாதீ(அல்குரா)’ எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். ‘பனூ ளுபைப்’ குலத்தின் ’ஜுதாம்’ குடும்பத்தைச் சேர்ந்த ரிஃபாஆ பின் ஸைத் என்பவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்த (மித்அம் என்றழைக்கப்பட்ட) ஓர் அடிமையும் உடனிருந்தார்.

நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு வாழ்த்துகள்! இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு அவருக்குக் கிடைத்ததே” என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை என் உயிர் கையிலுள்ளவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே (அனுமதியின்றி) அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

(இதை கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒருவர் ஒரு/இரு செருப்பு வாரைக் கொண்டு வந்து, “(இதை) நான் கைபர் போரின்போது (பங்கிடுமுன்) எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால்) “இவை, நரகத்தின் செருப்பு வார்/கள் (ஆகியிருக்கும்) என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 48, ஹதீஸ் எண்: 165

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏سِمَاكٌ الْحَنَفِيُّ أَبُو زُمَيْلٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏قَالَ ‏:‏

لَمَّا كَانَ يَوْمُ ‏ ‏خَيْبَرَ ‏ ‏أَقْبَلَ نَفَرٌ مِنْ ‏ ‏صَحَابَةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا فُلَانٌ شَهِيدٌ فُلَانٌ شَهِيدٌ حَتَّى مَرُّوا عَلَى رَجُلٍ فَقَالُوا فُلَانٌ شَهِيدٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَلَّا ‏ ‏إِنِّي رَأَيْتُهُ فِي النَّارِ فِي ‏ ‏بُرْدَةٍ ‏ ‏غَلَّهَا ‏ ‏أَوْ عَبَاءَةٍ ‏ ‏ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏ابْنَ الْخَطَّابِ ‏ ‏اذْهَبْ فَنَادِ فِي النَّاسِ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ قَالَ فَخَرَجْتُ فَنَادَيْتُ أَلَا إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ

கைபர் போரின்போது நபித்தோழர்களில் சிலர், “இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகிவிட்டார். இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்” என்று கூறிக்கொண்டே வந்து, இறுதியாக ஒருவரைப் பற்றி, “இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை! (போரில் கிடைத்த) கோடு போட்ட வண்ணப் போர்வை ஒன்றை (ப் பங்கீட்டுக்கு முன் அனுமதியின்றி) அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன்” என்றார்கள்.

பிறகு (என்னிடம்), “கத்தாபின் மகனே! நீங்கள் சென்று, இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று மக்களுக்கு அறிவித்து விடுங்கள்!” என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே நானும் சென்று, “அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று மக்களிடையே அறிவித்தேன்.

அறிவிப்பாளர் : உமர் பின் அல் கத்தாப் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 164

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّبَيْرِيُّ وَهُوَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَسَنَ ‏ ‏يَقُولُ : ‏

إِنَّ رَجُلًا مِمَّنْ كَانَ قَبْلَكُمْ خَرَجَتْ بِهِ ‏ ‏قُرْحَةٌ ‏ ‏فَلَمَّا آذَتْهُ انْتَزَعَ سَهْمًا مِنْ ‏ ‏كِنَانَتِهِ ‏ ‏فَنَكَأَهَا ‏ ‏فَلَمْ ‏ ‏يَرْقَأْ ‏ ‏الدَّمُ حَتَّى مَاتَ قَالَ رَبُّكُمْ قَدْ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ ثُمَّ مَدَّ يَدَهُ إِلَى الْمَسْجِدِ فَقَالَ إِي وَاللَّهِ لَقَدْ حَدَّثَنِي بِهَذَا الْحَدِيثِ ‏ ‏جُنْدَبٌ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي هَذَا الْمَسْجِدِ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَسَنَ ‏ ‏يَقُولُ حَدَّثَنَا ‏ ‏جُنْدَبُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ ‏ ‏فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا وَمَا ‏ ‏نَخْشَى أَنْ يَكُونَ ‏ ‏جُنْدَبٌ ‏ ‏كَذَبَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ بِرَجُلٍ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ ‏ ‏خُرَاجٌ ‏ ‏فَذَكَرَ نَحْوَهُ ‏

உங்களுக்கு முன்னிருந்த (இஸ்ராயீல்) மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரை வேதனைப் படுத்தியபோது (பொறுமை இழந்த) அவர் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவிக் கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்துபோனார். உங்கள் இறைவன் “(என் அடியான் அவசரப்பட்டு தன்னை அழித்துக் கொண்டதால்) அவன் மீது நான் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டேன்” என்று கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் (ரலி) வழியாக ஹஸன் அல்பஸரீ (ரஹ்)


குறிப்பு :

(பஸ்ராவிலுள்ள) பள்ளிவாசலை நோக்கித் தமது கையை நீட்டியவாறு, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸைத் தாம் செவியுற்றதாக இந்தப் பள்ளிவாசலில் வைத்துத்தான் ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)  எனக்கு அறிவித்தார்கள்” என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர்களுள் ஒருவரன ஷைபான் (ரஹ்) கூறுகின்றார்.