அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1458

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا صَلَّيْتُمْ بَعْدَ الْجُمُعَةِ فَصَلُّوا أَرْبَعًا ‏

‏زَادَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏قَالَ ‏ ‏سُهَيْلٌ ‏ ‏فَإِنْ ‏ ‏عَجِلَ ‏ ‏بِكَ شَيْءٌ فَصَلِّ رَكْعَتَيْنِ فِي الْمَسْجِدِ وَرَكْعَتَيْنِ إِذَا رَجَعْتَ

“ஜும்ஆவுக்குப் பின் நீங்கள் (ஸுன்னத்) தொழுவதானால் நான்கு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு : இந்த ஹதீஸின் அம்ரு முஹம்மத் (ரஹ்) வழி அறிவிப்பில், “உமக்கு ஏதேனும் அவசரம் எனில், பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள். (வீட்டுக்குத்) திரும்பியதும் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள் என்று சுஹைல் பின் அபீசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1155

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ بْنُ حُدَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ ‏ ‏قَالَ ‏

قَالَ رَجُلٌ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ لَا أُمَّ لَكَ ‏ ‏أَتُعَلِّمُنَا بِالصَّلَاةِ وَكُنَّا نَجْمَعُ بَيْنَ الصَّلَاتَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “தொழுகை(க்கு நேரமாகிவிட்டது)” என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் “தொழுகை(க்கு நேரமாகி விட்டது)” என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் “தொழுகை(க்கு நேரமாகி விட்டது)” என்று கூறினார். அப்போதும் இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள்.

பிறகு, “தாயில்லாமல் போவானே! எங்களுக்கே தொழுகைகளைக் கற்றுத் தருகிறாயா? நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் இணைத்துத் தொழுபவர்களாக இருந்தோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 29, ஹதீஸ் எண்: 948

‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ الصُّورِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏أَخْبَرَهُ قَالَ ‏

بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَمِعَ ‏ ‏جَلَبَةً ‏ ‏فَقَالَ ‏ ‏مَا شَأْنُكُمْ قَالُوا اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ قَالَ فَلَا تَفْعَلُوا إِذَا أَتَيْتُمْ الصَّلَاةَ فَعَلَيْكُمْ السَّكِينَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا سَبَقَكُمْ فَأَتِمُّوا ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு முறை) தொழுது கொண்டிருந்தோம். அப்போது (சிலர் வேகமாக வரும்) காலடி ஓசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள்.

(தொழுது முடித்த) பின்னர், “உங்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் சலசலப்பு?)” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியைக் கடைபிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த(ரக்அத்)தை (இமாமுடன்) தொழுது கொள்ளுங்கள். தவறிப்போனதை (தொழுகை முடிந்ததும் எழுந்து) நிறைவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 877

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏

لَمْ نَعْدُ أَنْ فُتِحَتْ ‏ ‏خَيْبَرُ ‏ ‏فَوَقَعْنَا ‏ ‏أَصْحَابَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي تِلْكَ الْبَقْلَةِ الثُّومِ وَالنَّاسُ جِيَاعٌ فَأَكَلْنَا مِنْهَا أَكْلًا شَدِيدًا ثُمَّ رُحْنَا إِلَى الْمَسْجِدِ فَوَجَدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الرِّيحَ فَقَالَ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْخَبِيثَةِ شَيْئًا فَلَا يَقْرَبَنَّا فِي الْمَسْجِدِ فَقَالَ النَّاسُ حُرِّمَتْ حُرِّمَتْ فَبَلَغَ ذَاكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَيْسَ بِي تَحْرِيمُ مَا أَحَلَّ اللَّهُ لِي ‏ ‏وَلَكِنَّهَا شَجَرَةٌ أَكْرَهُ رِيحَهَا

கைபர் வெற்றி கொள்ளப்பட்டு (அதன் கோட்டையைக்கூட) நாங்கள் கடந்திருக்க வில்லை. (அதற்குள் வழியிலுள்ள) அந்த வெள்ளைப் பூண்டு பயிரி(டப்பட்டிருந்த தோட்டத்தி)ல் நபித்தோழர்களான நாங்கள் புகுந்தோம். அப்போது மக்கள் பசியுடன் இருந்தனர். எனவே, நாங்கள் வெள்ளைப் பூண்டை நன்கு சாப்பிட்டோம்.

பிறகு நாங்கள் தொழும் இடத்துக்குச் சென்றபோது (எங்களிடமிருந்து வெள்ளைப் பூண்டின்) துர்நாற்றம் வீசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். அப்போது, “இந்த துர்நாற்றம் வீசும் செடியிலிருந்து எதையேனும் சாப்பிட்டவர் தொழுமிடத்தில் நம்மருகே நெருங்க வேண்டாம்” என்று கூறினார்கள். மக்கள், “வெள்ளைப் பூண்டு தடை செய்யப் பட்டுவிட்டது; வெள்ளைப் பூண்டு தடை செய்யப் பட்டுவிட்டது” என்று கூறினர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, “மக்களே! அல்லாஹ் எனக்கு அனுமதித்த ஒன்றைத் தடை செய்யும் உரிமை எனக்கு இல்லை. இருப்பினும் அந்தச் செடியின் துர்நாற்றத்தை நான் வெறுக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 876

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الثُّومِ ‏ ‏و قَالَ ‏ ‏مَرَّةً مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ ‏ ‏فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ ‏ ‏تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو ‏ ‏آدَمَ ‏

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏قَالَا جَمِيعًا ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يُرِيدُ الثُّومَ فَلَا ‏ ‏يَغْشَنَا ‏ ‏فِي مَسْجِدِنَا وَلَمْ يَذْكُرْ الْبَصَلَ وَالْكُرَّاثَ

“இச் செடியிலிருந்து விளைகின்ற வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர்,” – மற்றொரு தடவை – “வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட்டவர், நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் தொல்லை அடைபவற்றால் வானவர்களும் தொல்லை அடைகின்றனர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

இப்னு ஜுரைஜ் வழியான இன்னொரு அறிவிப்பில், “…இச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலில் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு கூறினார்கள் என்று இடம் பெற்றுள்ளது. வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 875

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ ‏ ‏أَنَّ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏حَرْمَلَةَ ‏ ‏وَزَعَمَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا فَلْيَعْتَزِلْنَا ‏ ‏أَوْ لِيَعْتَزِلْ مَسْجِدَنَا ‏ ‏وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ وَإِنَّهُ أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ فَوَجَدَ لَهَا رِيحًا فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنْ الْبُقُولِ فَقَالَ قَرِّبُوهَا إِلَى بَعْضِ أَصْحَابِهِ فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا قَالَ كُلْ فَإِنِّي ‏ ‏أُنَاجِي ‏ ‏مَنْ لَا ‏ ‏تُنَاجِي

“வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மிடமிருந்து – அல்லது – நமது பள்ளிவாசலிலிருந்து விலகி இருக்கட்டும். அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தம் இல்லத்திலேயே இருந்து கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு முறை) ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. அவற்றில் துர்நாற்றம் வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். (அவற்றைப் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தம் தோழர்களில் ஒருவருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாமலிருந்ததைக் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில் நீங்கள் உரையாடாத(வான)வர்களுடன் நான் உரையாட வேண்டியதுள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 36, ஹதீஸ் எண்: 123

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَفْضَلُ الْأَعْمَالِ ‏ ‏أَوْ الْعَمَلِ ‏ ‏الصَّلَاةُ لِوَقْتِهَا وَبِرُّ الْوَالِدَيْنِ ‏

“நற்செயல்களில் மிகச் சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் பெற்றோரின் நலன் நாடுவதுமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.07, ஹதீஸ் எண்: 28

حَدَّثَنَا ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا بَعَثَ ‏ ‏مُعَاذًا ‏ ‏إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ ‏ ‏أَهْلِ كِتَابٍ ‏ ‏فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَإِذَا عَرَفُوا اللَّهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا فَعَلُوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ زَكَاةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِذَا أَطَاعُوا بِهَا فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ ‏ ‏كَرَائِمَ ‏ ‏أَمْوَالِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:

நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதல் அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் அவர்கள் மீது அவர்களது ஒரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பெற்று அவர்களுள் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஜகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி உள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்களிடமிருந்து ஜகாத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை (ஜகாத்தாக எடுப்பதை)த் தவிர்த்துக் கொள்க!

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.07, ஹதீஸ் எண்: 27

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ جَبَلٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رُبَّمَا قَالَ ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏مُعَاذًا ‏ ‏قَالَ ‏
‏بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّكَ تَأْتِي قَوْمًا مِنْ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَإِيَّاكَ ‏ ‏وَكَرَائِمَ ‏ ‏أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ‏
‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ ‏ ‏مُعَاذًا ‏ ‏إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமனுக்கு) அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:

“நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம், வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மத் ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி எடுக்கும்படி அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.

இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள் மீது ஒவ்வொரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து (வேளைத்) தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள் மீது அல்லாஹ் ஜகாத் (எனும் கட்டாய தானத்)தைக் கடமையாக்கி உள்ளான் என்றும், அது அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களுள் ஏழைகளுக்கு வழங்கப் படவேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் கட்டுப் படும்போது அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை (ஜகாத்தாக) எடுப்பதைத் தவிர்த்துக் கொள்க என உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதி இழைக்கப் பட்டவனது பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில் அவனது பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை ஏதுமில்லை”. என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)


குறிப்பு:

மேற்காணும் ஹதீஸ், இரு அறிவிப்பாளர் வரிசைகளில் அறிவிக்கப் படுகிறது. அவற்றுள் ஒரு தொடரில் இடம்பெறும் அபூமஅபத் (நாஃபித்-ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது ‘நீங்கள் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள்…’ எனத் தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு முழுமையாக அறிவித்தார்கள் எனக் குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.02, ஹதீஸ் எண்: 8

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفِ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيُّ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُا جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرُ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلا نَفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الإسْلامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ فَقَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لا أَزِيدُ عَلَى هَذَا وَلا أَنْقُصُ مِنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைமுடி கலைந்தவராக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நெருங்கி வந்தபோதுதான் அவர் இஸ்லாத்(தின் அடிப்படைக் கடமைகள் யாவை என்ப)தைப் பற்றி வினவுகிறார் என்று எங்களுக்குப் புரிந்தது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “(ஒரு நாளின்) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது)” என்று அவருக்கு பதிலளித்தார்கள். உடனே அவர் “இவற்றைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமைத் தொழுகைகள்) உள்ளதா?” என்று கேட்க “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அடுத்து, “ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளதா?” என்று கேட்க, “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) ஏதுமில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், ‘ஜகாத்’ (செலுத்துவது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான தானம்) உண்டா?” எனக் கேட்க, “நீயாக விரும்பி(வழங்கி)டுவதைத் தவிரக் கூடுதலாக(க் கடமை) இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த மனிதர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதை (விடக்) குறைக்கவும் மாட்டேன்” என்று கூறித் திரும்பிச் சென்றார். “அவருடைய கூற்றை உண்மைப் படுத்திச் செயலாற்றினால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)