அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 888

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحْ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعْنَ لَهُ صَلَاتَهُ وَإِنْ كَانَ صَلَّى إِتْمَامًا لِأَرْبَعٍ كَانَتَا ‏ ‏تَرْغِيمًا ‏ ‏لِلشَّيْطَانِ ‏


‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَمِّي ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏دَاوُدُ بْنُ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي مَعْنَاهُ ‏ ‏قَالَ ‏ ‏يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ السَّلَامِ كَمَا قَالَ ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ

“உங்களில் ஒருவருக்கு, அவர் தொழுத ரக்அத்கள் மூன்றா நான்கா எனும் ஐயம் ஏற்பட்டால் ஐயத்துக்குரிய(அதிக எண்ணிக்கையான)தைக் கைவிட்டு, உறுதியான(குறைந்த எண்ணிக்கைய)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு, ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும். அவர் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு ஸஜ்தாக்களால்) அவை (அவரது தொழுகையை) அவருக்கு இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் நிறைவாகத் தொழுதுவிட்டிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமைந்து விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

வேறொரு அறிவிப்பான தாவூது பின் கைஸ் (ரஹ்) வழி அறிவிப்பிலும் “ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” எனும் இதே ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) கூற்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 887

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ الْأَزْدِيِّ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ فِي ‏ ‏الشَّفْعِ ‏ ‏الَّذِي يُرِيدُ أَنْ يَجْلِسَ فِي صَلَاتِهِ فَمَضَى فِي صَلَاتِهِ فَلَمَّا كَانَ فِي آخِرِ الصَّلَاةِ سَجَدَ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தொழுகையில் இரண்டு ரக்அத்களை முடித்தபின் அமர வேண்டியவர்கள் (ஒருநாள்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து, தொடர்ந்து தொழுதார்கள். தொழுகை முடியும் தறுவாயில் ஸலாம் கொடுப்பதற்குமுன் (முதலாவது அத்தஹியாத் இருப்பில் அமராததற்குப் பரிகாரமாக இரு) ஸஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மாலிக் இப்னு புஹைனா அல்-அஸ்தீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 886

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ الْأَسْدِيِّ ‏ ‏حَلِيفِ ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ فِي صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ يُكَبِّرُ فِي كُلِّ سَجْدَةٍ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ مَكَانَ مَا نَسِيَ مِنْ الْجُلُوسِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு) லுஹ்ருத் தொழுகையின் (முதல் அத்தஹிய்யாத் இருப்பில்) உட்கார வேண்டியதிருக்க (உட்காராமல் மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் தறுவாயில் (இறுதி) அமர்வில் ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு ஸஜ்தாவின் போதும் தக்பீர் கூறினார்கள். மக்களும் அவர்களோடு இரு ஸஜ்தாக்கள் செய்தனர். (முதலாவது அத்தஹியாத்) இருப்பை மறந்ததற்குப் பகரமாகத்தான் அவ்வாறு செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் புஹைனா அல்-அஸ்தீ (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் புஹைனா, பனூ அப்தில் முத்தலிப் குலத்தாரின் நட்புக் குலமான அல்-அஸ்தீ குலத்தவராவார்.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 885

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكْعَتَيْنِ مِنْ بَعْضِ الصَّلَوَاتِ ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ فَقَامَ النَّاسُ مَعَهُ فَلَمَّا قَضَى صَلَاتَهُ وَنَظَرْنَا تَسْلِيمَهُ كَبَّرَ فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு (நான்கு ரக்அத்கள் கொண்ட) தொழுகையில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவித்து முடித்தபின் (முதலாம் அத்தஹிய்யாத் இருப்பில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, அவர்களோடு மக்களும் எழுந்துவிட்டனர். தொழுகை முடியும் தறுவாயில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸலாம் கொடுப்பதை எதிர்பாத்துக் காத்திருந்தபோது, அந்த அமர்வில் ஸலாம் கொடுப்பதற்குமுன் தக்பீர் கூறி (மறதிக்குப் பரிகாரமாக) இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 884

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُمْ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا نُودِيَ بِالْأَذَانِ ‏ ‏أَدْبَرَ ‏ ‏الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ الْأَذَانَ فَإِذَا قُضِيَ الْأَذَانُ أَقْبَلَ فَإِذَا ‏ ‏ثُوِّبَ ‏ ‏بِهَا أَدْبَرَ فَإِذَا قُضِيَ ‏ ‏التَّثْوِيبُ ‏ ‏أَقْبَلَ ‏ ‏يَخْطُرُ ‏ ‏بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى فَإِذَا لَمْ يَدْرِ أَحَدُكُمْ كَمْ صَلَّى فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ‏


‏حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ الشَّيْطَانَ إِذَا ‏ ‏ثُوِّبَ ‏ ‏بِالصَّلَاةِ وَلَّى وَلَهُ ضُرَاطٌ فَذَكَرَ نَحْوَهُ وَزَادَ ‏ ‏فَهَنَّاهُ وَمَنَّاهُ وَذَكَّرَهُ مِنْ حَاجَاتِهِ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ

“தொழுகைக்கான அழைப்புக் கொடுக்கப்பட்டால், அது தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் வாயு வெளியேறியவனாகத் திரும்பி ஓடுகின்றான். தொழுகை அழைப்பு முடிந்துவிட்டால் அவன் திரும்பிவருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடியும்போது திரும்பிவந்து (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி ‘இன்ன இன்னதையெல்லாம் நினைத்துப்பார்’ என்று கூறுகின்றான். அவர் நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகின்றான் (அதன் விளைவாக) அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாதவராகிவிடுகின்றார். உங்களில் ஒருவருக்கு, தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பது தெரியாவிட்டால் அவர் (தொழுகையின் இறுதி) அமர்வில் (மறதிக்குப் பரிகாரமாக) இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அப்துர் ரஹ்மான் அல் அஃரஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்போது ஷைத்தான் வாயு வெளியேறியவனாக ஓடுகின்றான் …” என்றும் “… அவன் திரும்பிவந்து தொழுகையில் ஈடுபட்டுள்ளவருக்குப் பல்வேறு எண்ணங்களையும் ஆசைகளையும் ஊட்டுகின்றான்; அவர் நினைத்துப் பார்த்திராத பல தேவைகளையும் அவருக்கு அவன் நினைவு படுத்துகின்றான் …” என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 883

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ ‏ ‏يُصَلِّي جَاءَهُ الشَّيْطَانُ ‏ ‏فَلَبَسَ عَلَيْهِ ‏ ‏حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ


‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ وَهُوَ ابْنُ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

“உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால் அவரிடம் ஷைத்தான் வந்து அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றான். எனவே, உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டால் (தொழுகையின் இறுதி) அமர்வில் அவர் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 19, ஹதீஸ் எண்: 882

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سِنَانٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا صَلَّى قَامَ رَجُلٌ فَقَالَ مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الْأَحْمَرِ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا وَجَدْتَ إِنَّمَا بُنِيَتْ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ ‏


‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ شَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَ أَعْرَابِيٌّ بَعْدَ مَا صَلَّى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الْفَجْرِ فَأَدْخَلَ رَأْسَهُ مِنْ بَابِ الْمَسْجِدِ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِهِمَا ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏هُوَ ‏ ‏شَيْبَةُ بْنُ نَعَامَةَ أَبُو نَعَامَةَ ‏ ‏رَوَى عَنْهُ ‏ ‏مِسْعَرٌ ‏ ‏وَهُشَيْمٌ ‏ ‏وَجَرِيرٌ ‏ ‏وَغَيْرُهُمْ مِنْ الْكُوفِيِّينَ

நபி (ஸல்) (ஒரு தொழுகையைத்) தொழுது முடித்தபோது ஒருவர் எழுந்து, ‘(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்), “உனக்கு (அது) கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி) வழியாக அன்னாரின் மகன் ஸுலைமான் (ரஹ்)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) (ஒரு) ஃபஜ்ருத் தொழுகையைத் தொழுது முடித்தபின் ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் கதவு வழியே தமது தலையை நீட்டினார் …” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 5, பாடம்: 19, ஹதீஸ் எண்: 881

‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الثَّوْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏ ‏

‏أَنَّ رَجُلًا ‏ ‏نَشَدَ ‏ ‏فِي الْمَسْجِدِ فَقَالَ مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الْأَحْمَرِ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا وَجَدْتَ إِنَّمَا بُنِيَتْ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ

காணாமற்போன(தமது ஒட்டகத்)தைப் பற்றிப் பள்ளிவாசலுக்குள் விசாரித்த ஒருவர், ‘(எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்), “உனக்கு (அது) கிடைக்காமல் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி) வழியாக அன்னாரின் மகன் ஸுலைமான் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 19, ஹதீஸ் எண்: 880

حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏حَيْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ اللَّهِ ‏ ‏مَوْلَى ‏ ‏شَدَّادِ بْنِ الْهَادِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ سَمِعَ رَجُلًا ‏ ‏يَنْشُدُ ‏ ‏ضَالَّةً ‏ ‏فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ لَا رَدَّهَا اللَّهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُقْرِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَيْوَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْأَسْوَدِ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏أَبُو عَبْدِ اللَّهِ ‏ ‏مَوْلَى ‏ ‏شَدَّادٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بِمِثْلِهِ

”தாம் தொலைத்துவிட்டதைப் பள்ளிவாசலுக்குள் தேடுபவரின் (விசாரிப்புக்) கூற்றைச் செவியுறுபவர், ‘அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!’ என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 879

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ :‏

‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏خَطَبَ يَوْمَ الْجُمُعَةِ فَذَكَرَ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَذَكَرَ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏قَالَ إِنِّي رَأَيْتُ كَأَنَّ دِيكًا نَقَرَنِي ثَلَاثَ نَقَرَاتٍ وَإِنِّي لَا أُرَاهُ إِلَّا حُضُورَ أَجَلِي وَإِنَّ أَقْوَامًا يَأْمُرُونَنِي أَنْ أَسْتَخْلِفَ وَإِنَّ اللَّهَ لَمْ يَكُنْ لِيُضَيِّعَ دِينَهُ وَلَا خِلَافَتَهُ وَلَا الَّذِي بَعَثَ بِهِ نَبِيَّهُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنْ عَجِلَ بِي أَمْرٌ فَالْخِلَافَةُ شُورَى بَيْنَ هَؤُلَاءِ السِّتَّةِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ عَنْهُمْ رَاضٍ وَإِنِّي قَدْ عَلِمْتُ أَنَّ أَقْوَامًا يَطْعَنُونَ فِي هَذَا الْأَمْرِ أَنَا ضَرَبْتُهُمْ بِيَدِي هَذِهِ عَلَى الْإِسْلَامِ فَإِنْ فَعَلُوا ذَلِكَ فَأُولَئِكَ أَعْدَاءُ اللَّهِ الْكَفَرَةُ الضُّلَّالُ ثُمَّ إِنِّي لَا أَدَعُ بَعْدِي شَيْئًا أَهَمَّ عِنْدِي مِنْ ‏ ‏الْكَلَالَةِ ‏

مَا رَاجَعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي شَيْءٍ مَا رَاجَعْتُهُ فِي ‏ ‏الْكَلَالَةِ ‏ ‏وَمَا أَغْلَظَ لِي ‏ ‏فِي شَيْءٍ مَا أَغْلَظَ لِي ‏ ‏فِيهِ حَتَّى طَعَنَ بِإِصْبَعِهِ فِي صَدْرِي فَقَالَ يَا ‏ ‏عُمَرُ ‏ ‏أَلَا ‏ ‏تَكْفِيكَ ‏ ‏آيَةُ الصَّيْفِ ‏ ‏الَّتِي فِي آخِرِ سُورَةِ ‏ ‏النِّسَاءِ ‏ ‏وَإِنِّي إِنْ أَعِشْ أَقْضِ فِيهَا بِقَضِيَّةٍ يَقْضِي بِهَا مَنْ يَقْرَأُ الْقُرْآنَ وَمَنْ لَا يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ قَالَ اللَّهُمَّ إِنِّي أُشْهِدُكَ عَلَى أُمَرَاءِ الْأَمْصَارِ وَإِنِّي إِنَّمَا بَعَثْتُهُمْ عَلَيْهِمْ لِيَعْدِلُوا عَلَيْهِمْ وَلِيُعَلِّمُوا النَّاسَ دِينَهُمْ وَسُنَّةَ نَبِيِّهِمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيَقْسِمُوا فِيهِمْ ‏ ‏فَيْئَهُمْ ‏ ‏وَيَرْفَعُوا إِلَيَّ مَا ‏ ‏أَشْكَلَ ‏ ‏عَلَيْهِمْ مِنْ أَمْرِهِمْ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا النَّاسُ تَأْكُلُونَ شَجَرَتَيْنِ لَا ‏ ‏أَرَاهُمَا إِلَّا خَبِيثَتَيْنِ هَذَا الْبَصَلَ وَالثُّومَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا وَجَدَ رِيحَهُمَا مِنْ الرَّجُلِ فِي الْمَسْجِدِ أَمَرَ بِهِ فَأُخْرِجَ إِلَى ‏ ‏الْبَقِيعِ ‏ ‏فَمَنْ أَكَلَهُمَا فَلْيُمِتْهُمَا طَبْخًا ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شَبَابَةَ بْنِ سَوَّارٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ரு (ரலி) அவர்களையும் நினைவு கூர்ந்தார்கள். மேலும்,

“ஒரு கோழி என்னை மூன்று முறை கொத்துவதைப்போன்று நான் (கனவு) கண்டேன். இதற்கு என் ஆயுட் காலம் முடிந்துவிட்டது என்றே நான் (விளக்கம்) கண்டேன். மக்களில் சிலர் (எனக்குப் பின்னால்) என் (ஆட்சிக்குப்) பிரதிநிதி (கலீஃபா) ஒருவரை அறிவிக்குமாறு கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் தனது மார்க்கத்தையோ, நபி (ஸல்) அவர்களுடன் அனுப்பி வைத்ததையோ பாழாக்கிவிடமாட்டான். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அறுவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்த அறுவரும் ஆட்சித் தலைமை குறித்துத் தம்மிடையே கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.

சிலர் இந்த விஷயத்தில் என்னைக் குறை கூறிவருவது எனக்குத் தெரியும். நான் (சில நேரங்களில்) அவர்களை எனது இந்தக் கையால் அடித்திருக்கிறேன் – இஸ்லாத்துக்காக. அவர்கள் அவ்வாறு (தொடர்ந்து தவறு) செய்தால் அத்தகையோர்தாம் இறைவனின் விரோதிகளும் வழிகெட்ட இறைமறுப்பாளர்களும் ஆவர்.

நான் எனக்குப் பின்னால் கலாலா(4:12)வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச் செல்லவில்லை. நான், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்து கொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்து கொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். ‘உமரே! அந்நிஸா அத்தியாயத்தின் கடைசியிலுள்ள (4:176ஆவது) வசனம் உமக்குப் போதுமானதாக இல்லையா?’ என்று கேட்டார்கள்.

நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்தக் கலாலா தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்.

இறைவா! நகரங்களின் ஆளுநர்களுக்கு உன்னையே சாட்சியாக்குகின்றேன். நான் அவர்களை அந்த மக்களிடையே நேர்மையாக நடந்து கொள்வதற்காகவும் அவர்களுடைய மார்க்கத்தையும் அவர்களுடைய நபி (ஸல்) அவர்களது வழிமுறையையும் கற்றுத் தருவதற்காகவுமே அனுப்பிவைத்தேன். மேலும், அவர்களுக்குப் போரிடாமல் கிடைத்த (ஃபய்உ எனும்) செல்வத்தை அவர்கள் தம்மிடையே (முறையோடு) பங்கிட வேண்டும்; அவர்களுடைய விவகாரங்களில் சிக்கல் எழும்போது அதை என் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் (என்றும் கூறி அனுப்பினேன்.)

மக்களே! நீங்கள் இரு செடிகளிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிடுகின்றீர்கள். அவ்விரண்டையும் நான் அருவறுப்பானவையாகக் கருதுகிறேன் – வெங்காயமும் வெள்ளைப் பூண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசலில் இருக்கும்போது ஒருவரிடமிருந்து அவற்றின் துர்நாற்றம் வருவதைக் கண்டால் அவரை அல்பகீஉ (பொதுமையவாடிக்குக்) கொண்டுபோய் விட்டுவிட்டு வருமாறு கூறுவார்கள். எனவே, அதைச் சாப்பிட விரும்புகிறவர் அதைச் சமைத்து அதன் வாடையை நீக்கிக் கொள்ளட்டும்”.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்)