அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2844

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بُشَيْرُ بْنُ يَسَارٍ ‏ ‏مَوْلَى ‏ ‏بَنِي حَارِثَةَ ‏ ‏أَنَّ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏وَسَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ ‏ ‏حَدَّثَاهُ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏الثَّمَرِ بِالتَّمْرِ إِلَّا أَصْحَابَ ‏ ‏الْعَرَايَا ‏ ‏فَإِنَّهُ قَدْ أَذِنَ لَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பேரீச்ச மரத்திலுள்ள செங்கனிகளை (மரத்திலிருந்து பறிக்கப்பட்ட) உலர்ந்த கனிகளுக்குப் பதிலாக விற்பனை செய்யும் முறையான ‘முஸாபனா’வைத் தடை செய்தார்கள் – ‘அராயா’க்காரர்களைத் தவிர்த்து. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அராயா’க்காரர்களுக்கு மட்டும் (முஸாபனா வியாபாரம் செய்துகொள்ள) அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) & ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2843

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏بُشَيْرِ بْنِ يَسَارٍ : ‏

عَنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُمْ قَالُوا ‏ ‏رَخَّصَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْعِ ‏ ‏الْعَرِيَّةِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏بُشَيْرُ بْنُ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏بَعْضِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ أَهْلِ دَارِهِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏إِسْحَقَ ‏ ‏وَابْنَ الْمُثَنَّى ‏ ‏جَعَلَا مَكَانَ الرِّبَا الزَّبْنَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏الرِّبَا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏بُشَيْرِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அராயா’வில் (மட்டும் பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைக் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள் என நபித்தோழர்கள் கூறினர்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) வழியாக புஷைர் பின் யஸார் (ரஹ்)


குறிப்பு :

ஹதீஸ் எண் 2842இல் இடம் பெறும் ‘வட்டி’ என்பதற்குப் பதிலாக இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘பண்டமாற்று’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இப்னு அபீஉமர் (ரஹ்) வழி அறிவிப்பில் ‘வட்டி’ என்றே காணப்படுகிறது.

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2842

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏بُشَيْرِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏بَعْضِ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏مِنْ أَهْلِ دَارِهِمْ مِنْهُمْ ‏ ‏سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ وَقَالَ ذَلِكَ الرِّبَا تِلْكَ ‏ ‏الْمُزَابَنَةُ ‏ ‏إِلَّا أَنَّهُ رَخَّصَ فِي بَيْعِ ‏ ‏الْعَرِيَّةِ ‏ ‏النَّخْلَةِ وَالنَّخْلَتَيْنِ يَأْخُذُهَا أَهْلُ الْبَيْتِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا يَأْكُلُونَهَا رُطَبًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்குத் தடை விதித்தார்கள். மேலும், ‘அது வட்டியாகும்; அதுவே ‘முஸாபனா’ ஆகும்’ என்றும் கூறினார்கள். ஆயினும், ‘அராயா’வில் மட்டும் அதற்கு அனுமதியளித்தார்கள்.

‘அராயா’ என்பது, (ஏழைகளுக்குக் கொடையளிக்கப்பட்ட) ஓரிரு பேரீச்ச மரங்களிலுள்ள செங்கனிகளை தோட்ட உரிமையாளர்கள் தோராயமாகக் கணக்கிட்டு எடுத்துக்கொண்டு, (ஈடாக) உலர்ந்த பழங்களை (ஏழைகளுக்குக்) கொடுத்துவிட்டு, மரத்திலுள்ள செங்கனிகளை(ப் பறித்து) உண்பதாகும்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை புஷைர் பின் யஸார் (ரஹ்), தமது தெருவில் வசித்த (பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த) சில நபித்தோழர்களிடமிருந்து பெற்று அறிவித்தார்கள். ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் அவர்களில் ஒருவர் ஆவார்கள்.

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2841

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ ثَابِتٍ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي ‏ ‏الْعَرَايَا ‏ ‏أَنْ تُبَاعَ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏كَيْلًا ‏


و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏أَنْ تُؤْخَذَ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي بَيْعِ ‏ ‏الْعَرَايَا ‏ ‏بِخَرْصِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அராயா’வில் (மட்டும் பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைக் தோராயமாகக் கணக்கிட்டு, அவற்றுக்குப் பதிலாக உலர்ந்த கனிகளை அளந்து பண்டமாற்றி / விற்றுக்கொள்ள அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


குறிப்புகள் :

யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘ … தோராயமாகக் கணக்கிட்டு எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்’ என இடம்பெற்றுள்ளது.

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்),‘அராயா’ வியாபாரத்தில் (மட்டும் பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைத் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2840

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي بَيْعِ الْعَرِيَّةِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا


قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏الْعَرِيَّةُ ‏ ‏أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ ثَمَرَ النَّخَلَاتِ لِطَعَامِ أَهْلِهِ رُطَبًا ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (பேரீச்ச மரத்திலுள்ள) கனிகளைத் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதற்கு ‘அராயா’வினருக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


குறிப்பு :

‘அரிய்யா’ என்பது, ஒருவர் தம் வீட்டாரின் உணவுக்காக பேரீச்ச மரத்திலுள்ள செங்காய்களைத் தோராயமாகக் கணக்கிட்டு, உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு மாற்றிக்கொள்வதாகும் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2839

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏يُحَدِّثُ أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ ثَابِتٍ ‏ ‏حَدَّثَهُ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي ‏ ‏الْعَرِيَّةِ ‏ ‏يَأْخُذُهَا أَهْلُ الْبَيْتِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا يَأْكُلُونَهَا رُطَبًا ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ وَالْعَرِيَّةُ النَّخْلَةُ تُجْعَلُ لِلْقَوْمِ فَيَبِيعُونَهَا ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அராயா’வில் (மட்டும் பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைக் தோராயமாகக் கணக்கிட்டு, தோட்ட உரிமையாளர்கள் எடுத்துக்கொள்ளவும், அவை செங்காய்களாக இருந்தபோதும் உண்ணவும் அனுமதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


குறிப்பு :

ஹுஷைம் (ரஹ்) வழி அறிவிப்பில், (‘அராயா’வின் ஒருமையான) ‘அரிய்யா’ என்பது, (ஏழை) மக்களுக்காக கொடையளிக்கப்பட்ட பேரீச்ச மரங்களாகும். அவற்றிலுள்ள கனிகளை அவர்கள் தோராயமாகக் கணக்கிட்டு விற்றுக்கொள்வார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2838

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ ثَابِتٍ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ لِصَاحِبِ ‏ ‏الْعَرِيَّةِ ‏ ‏أَنْ يَبِيعَهَا ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏مِنْ التَّمْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைத் தோராயமாகக் கணக்கிட்டு, உலர்ந்த பேரீச்சங்கனிகளுக்கு மாற்றிக்கொள்வதற்கு ‘அராயா’க்காரர்களுக்கு மட்டும் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2837

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏


وَالْمُزَابَنَةُ ‏ ‏أَنْ يُبَاعَ ثَمَرُ النَّخْلِ بِالتَّمْرِ وَالْمُحَاقَلَةُ أَنْ يُبَاعَ الزَّرْعُ بِالْقَمْحِ ‏ ‏وَاسْتِكْرَاءُ ‏ ‏الْأَرْضِ بِالْقَمْحِ ‏ ‏قَالَ وَأَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لَا تَبْتَاعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏وَلَا تَبْتَاعُوا الثَّمَرَ بِالتَّمْرِ ‏ ‏و قَالَ ‏ ‏سَالِمٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ ثَابِتٍ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ رَخَّصَ بَعْدَ ذَلِكَ فِي ‏ ‏بَيْعِ الْعَرِيَّةِ ‏ ‏بِالرُّطَبِ أَوْ بِالتَّمْرِ وَلَمْ يُرَخِّصْ فِي غَيْرِ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஸாபனா’&  மற்றும் ‘முஹாகலா’# ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸயீத் பின் அல் முஸய்யப்


குறிப்புகள் :

விலக்குப் பெற்றது:
அராயா$ : ஹதீஸ் 2835இன் அடிக்குறிப்பில் காண்க.

தடுக்கப்பட்டது:
‘முஸாபனா’& = பேரீச்ச மரத்திலுள்ள செங்கனிகளை, மரத்திலிருந்து பறிக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சங்கனிகளுக்குப் பதிலாக பண்டமாற்றி / விற்றுக் கொள்வது.

தடுக்கப்பட்டது:
‘முஹாகலா’# = அளவு அறியப்படாத – கோதுமைக் கதிரிலுள்ள தானியத்தை, அறுவடை செய்யப்பட்ட கோதுமைக்கு விற்பதும் அறுவடை செய்யப்பட்ட கோதுமைக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதும்.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘செங்கனிகள் முற்றிப் பழுக்காத வரை அவற்றை விற்காதீர்கள்; உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளை விற்காதீர்கள்’ என்று சொன்னார்கள்’ என ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்கள்.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பேரீச்ச மரத்திலுள்ள) செங்காய்களுக்குப் பதிலாக உலர்ந்த அல்லது கொய்யப்பட்ட செங்கனியான பேரீச்சங்கனிகளை மாற்றிக் கொள்வதற்கு ‘அராயா’வில் (மட்டும்) அனுமதியளித்தார்கள்; ‘அராயா’ அல்லாதவற்றில் அனுமதியளிக்கவில்லை’ என்று ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்), (தம் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள் என அறிவித்தார்கள்.

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2836

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِحَرْمَلَةَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَبْتَاعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏وَلَا تَبْتَاعُوا الثَّمَرَ بِالتَّمْرِ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ سَوَاءً

“உண்ணும் பக்குவ நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள். (பறிக்கப்பட்ட) உலர்ந்த பழங்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழங்களை விற்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா (ரலி) & அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 13, ஹதீஸ் எண்: 2835

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ وَعَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ ‏


قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏وَحَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي ‏ ‏بَيْعِ الْعَرَايَا ‏ ‏زَادَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ أَنْ تُبَاعَ

நபி (ஸல்), உண்ணும் பக்குவம் அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக (உலராத) பச்சைப் பழத்தை விற்பதற்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அராயா$ வியாபாரத்தில் அ(வ்வாறு விற்ப)தற்கு அனுமதியளித்தார்கள்” என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள்.

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில் “அராயா வியாபாரத்தில் (அவ்வாறு) விற்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

$அராயா
கொடையுள்ளம் கொண்ட தோட்ட உரிமையாளர், தன் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தின் பழங்களை ஓர் ஏழைக்கு அல்லது ஏழைக் குடும்பத்திற்கு அன்பளிப்பாக வழங்கி, அந்த மரத்தின் பழங்கள் பழுத்து, பறிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றை அந்த ஏழை, தன் தேவை கருதி ஏற்கனவே பறிக்கப்பட்ட உலர்ந்த பழங்களுக்குப் பண்டமாற்றுச் செய்துகொள்வார். இவ்வகைப் பண்டமாற்றுக்கு ‘அராயா’ என்று பெயர்.