அத்தியாயம்: 4, பாடம்: 14, ஹதீஸ் எண்: 607

حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُخْتَارِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ : ‏ ‏

‏بَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا إِذْ أَغْفَى إِغْفَاءَةً ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسِّمًا فَقُلْنَا مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏أُنْزِلَتْ عَلَيَّ ‏ ‏آنِفًا ‏ ‏سُورَةٌ فَقَرَأَ ‏ ‏بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏ ‏إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ ‏ ‏شَانِئَكَ ‏ ‏هُوَ ‏ ‏الْأَبْتَرُ ‏‏ثُمَّ قَالَ أَتَدْرُونَ مَا الْكَوْثَرُ فَقُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ عَلَيْهِ خَيْرٌ كَثِيرٌ هُوَ حَوْضٌ تَرِدُ عَلَيْهِ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ ‏ ‏فَيُخْتَلَجُ ‏ ‏الْعَبْدُ مِنْهُمْ فَأَقُولُ رَبِّ إِنَّهُ مِنْ أُمَّتِي فَيَقُولُ مَا تَدْرِي مَا أَحْدَثَتْ بَعْدَكَ ‏


‏زَادَ ‏ ‏ابْنُ حُجْرٍ ‏ ‏فِي حَدِيثِهِ بَيْنَ أَظْهُرِنَا فِي الْمَسْجِدِ وَقَالَ مَا أَحْدَثَ بَعْدَكَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏مُخْتَارِ بْنِ فُلْفُلٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُا ‏ ‏أَغْفَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِغْفَاءَةً بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ فِي الْجَنَّةِ عَلَيْهِ حَوْضٌ وَلَمْ يَذْكُرْ آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ ‏

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடையே இருந்தபோது (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் சிரிக்கக் காரணம் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “சற்றுமுன் ஓர் அத்தியாயம் எனக்காக அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) அந்த அத்தியாயத்தை(ப் பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!).

இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர் (நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸரை வழங்கியுள்ளோம்!).

ஃபஸல்லி லிரப்பிக்க வன்ஹர் (எனவே, தொழுகையையும் பலியிடுவதையும் உம்முடைய இறைவனுக்காகவே நிறைவேற்றுவீராக!).

இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர் (உம் பகைவன்தான் சந்ததியற்றவன்).

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்கவ்ஸர் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்” என்று பதிலளித்தோம். அவர்கள், “அது ஒரு (சொர்க்க) நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அளவிடமுடியாத நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர்த் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் அதனிடம் வருவர். அதன் குவளைகளின் எண்ணிக்கை, நட்சத்திரங்களை ஒத்திருக்கும். அவர்களில் ஓர் அடியார் (அதிலிருந்து அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பிறகு உருவாக்கிய (பொல்லாப்) புதுமைகளைப் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

இப்னு ஹுஜ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடையே இருந்தார்கள்” என்றில்லாமல் “எங்களிடையே பள்ளிவாசலில் இருந்தார்கள்” என்று இடம் குறிப்பிடப் படுகிறது. “உங்கள் சமுதாயம்” என்ற பன்மைக்குப் பதிலாக “இவர் உங்களுக்குப் பிறகு உருவாக்கிய (பொல்லாப்) புதுமைகளை …” என்று ஒருமைக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

இபுனு ஃபுளைல் (ரஹ்) வழி அறிவிப்பில், “அது ஒரு நதி. என்னுடைய இறைவன் சொர்க்கத்தில் அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான் …” என்று (நபி (ஸல்) கூறியதெல்லாம் இடம்பெற்ற போதிலும் “அதன் குவளைகளின் எண்ணிக்கை, நட்சத்திரங்களை ஒத்திருக்கும்” எனும் உவமைக் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 4, பாடம்: 13, ஹதீஸ் எண்: 606

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏كَانَ يَجْهَرُ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ يَقُولُ : ‏

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرُكَ ‏ ‏وَعَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏أَنَّهُ كَتَبَ إِلَيْهِ يُخْبِرُهُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ ‏‏قَالَ صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَعُثْمَانَ ‏ ‏فَكَانُوا يَسْتَفْتِحُونَ ‏ ‏ب‏الْحَمْد لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏لَا يَذْكُرُونَ ‏ ‏بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏ ‏فِي أَوَّلِ قِرَاءَةٍ وَلَا فِي آخِرِهَا


‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَذْكُرُ ذَلِكَ

நபி (ஸல்) , அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருக்குப் பின்னால் (நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்கள் (அனைவரும்) “அல்ஹம்து … ” ஓதியே (தொழுகையைத்) தொடங்குவார்கள். அல்ஹம்துக்கு முன்னோ பின்னோ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் பின் அபீ தல்ஹா (ரஹ்) வழி அறிவிப்பில், “இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றேன்” எனக் கூறியுள்ளது பதிவாகியுள்ளது.

அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) வழி அறிவிப்பில், “உமர் பின் அல்கத்தாப் (ரலி)  (தொழுகையின் தொடக்க தக்பீருக்குப்பின்) சுப்ஹானக்கல்லாஹும்ம வபி ஹம்திக்க, தபாரக்கஸ்முக்க, வதஆலா ஜத்துக்க, வலா இலாஹ ஃகைருக்க [இறைவா! உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். உனது பெயர் வளம் வாய்ந்தது; உனது பெருமை உயர்வானது. உன்னைத் தவிர வேறு இறைவனில்லை] என்று உரத்துக் கூறுவார்கள்” என்பதாக இடம்பெற்றுள்ளது. ஆனால், “உமர் (ரலி) அவர்களிடமிருந்து அப்தா (ரஹ்) எதையுமே செவியுற்றவரல்லர்” என்று அபூஅலீ கஸ்ஸானீ (ரஹ்) கூறியிருப்பதை இமாம் நவவீ (ரஹ்) பதிவு செய்திருக்கின்றார்.

அத்தியாயம்: 4, பாடம்: 13, ஹதீஸ் எண்: 605

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏: ‏

‏صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَعُثْمَانَ ‏ ‏فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَقْرَأُ ‏ ‏بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِقَتَادَةَ ‏ ‏أَسَمِعْتَهُ مِنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏نَعَمْ وَنَحْنُ سَأَلْنَاهُ عَنْهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் (அவர்களுக்குப் பின்னால் நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்களில் யாருமே ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதை (உரத்து) ஓதி நான் கேட்டதில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்)


குறிப்பு :

அபூதாவூத் (ரஹ்) வழி அறிவிப்பில், “நீங்கள் இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுற்றீர்களா?” என்று ஷுஃபா (ரஹ்), கத்தாதா (ரஹ்) அவர்களிடம் கேட்டதாகவும் அதற்கு கத்தாதா (ரஹ்), “ஆம். அது குறித்து நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்(டுத் தெரிந்துகொண்)டோம்” என்று பதிலளித்ததாகவும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 12, ஹதீஸ் எண்: 604

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏زُرَارَةَ بْنَ أَوْفَى ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الظُّهْرَ فَجَعَلَ رَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ ‏ ‏بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏ ‏أَيُّكُمْ قَرَأَ ‏ ‏أَوْ أَيُّكُمْ الْقَارِئُ ‏ ‏فَقَالَ رَجُلٌ أَنَا فَقَالَ قَدْ ظَنَنْتُ أَنَّ بَعْضَكُمْ ‏ ‏خَالَجَنِيهَا ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الظُّهْرَ وَقَالَ قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ ‏ ‏خَالَجَنِيهَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) லுஹ்ருத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டிருந்த) ஒருவர் “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா” அத்தியாயத்தை (உரத்து) ஓதலானார். தொழுகையை முடித்துத் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் (எனக்குப் பின்னால் நின்று உரத்து) ஓதியவர்/ஓதிக்கொண்டிருந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒருவர், “நான்தான் (ஓதினேன்)” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் சிலர் (அவ்வாறு உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதாக எண்ணுகின்றேன். (எனக்குப் பின்னால் நின்று தொழுபவர் எவரும் உரத்து ஓத வேண்டாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


குறிப்பு :

இபுனு அபீஉரூபா (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) லுஹ்ருத் தொழுவித்துவிட்டு, “உங்களில் சிலர் (உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதை அறிகின்றேன்” எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 12, ஹதீஸ் எண்: 603

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏قَالَ : ‏ ‏

‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الظُّهْرِ ‏ ‏أَوْ الْعَصْرِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّكُمْ قَرَأَ خَلْفِي ‏ ‏بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏فَقَالَ رَجُلٌ أَنَا وَلَمْ أُرِدْ بِهَا إِلَّا الْخَيْرَ قَالَ قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ ‏ ‏خَالَجَنِيهَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) எங்களுக்கு லுஹ்ரு அல்லது அஸ்ருத் தொழுகை தொழுவித்தார்கள். (தொழுது முடித்ததும்) அவர்கள், “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா அத்தியாயத்தை எனக்குப் பின்னால் (நின்று உரத்து) ஓதியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒருவர், “நன்மை (கிடைக்கும் என) நாடி அவ்வாறு ஓதியவன் நான்தான்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் சிலர் (உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதை அறிகின்றேன். (எனக்குப் பின்னால் நின்று தொழுபவர் எவரும் உரத்து ஓத வேண்டாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 602

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَدَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السَّلَامَ قَالَ ‏ ‏ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ الرَّجُلُ فَصَلَّى كَمَا كَانَ صَلَّى ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَلَيْكَ السَّلَامُ ثُمَّ قَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ فَقَالَ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَ هَذَا عَلِّمْنِي قَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنْ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي نَاحِيَةٍ وَسَاقَا الْحَدِيثَ بِمِثْلِ هَذِهِ الْقِصَّةِ وَزَادَا فِيهِ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ ‏ ‏فَأَسْبِغْ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ اسْتَقْبِلْ الْقِبْلَةَ فَكَبِّرْ ‏

நபி (ஸல்) (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்து (அவசர அவசரமாக) தொழலானார். (தொழுது முடித்ததும்) அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதில் ஸலாம் சொல்லிவிட்டு, “நீர் திரும்பச் சென்று தொழுவீராக. ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று சொன்னார்கள்.

அவர் திரும்பிப் போய் முன்பு தொழுததைப் போன்றே மீண்டும் தொழுது விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதில் ஸலாம் சொல்லி விட்டு, “நீர் (முறையாகத்) தொழவில்லை. எனவே, திரும்பச் சென்று தொழுவீராக” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அவர், “சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! இதைவிடச் சிறந்த முறையில் எனக்குத் தொழத் தெரியாது. எனவே, எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் தொழுகைக்கு நின்றதும் (‘அல்லாஹு அக்பர்’ என்று) தக்பீர் கூறுவீராக! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதிக் கொள்வீராக! பிறகு (குனிந்து) ருகூஉச் செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலை கொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி நேராக நிற்பீராக. பிறகு சிரவணக்கம் (ஸஜ்தாச்) செய்வீராக! அதில் சற்று நேரம் நிலை கொள்வீராக! பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பிறகு இதே (நடை)முறையை உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூ உஸாமா (ரஹ்), அப்துல்லாஹ் இபுனு நுமைர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், மேற்காணும் நிகழ்வின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளியின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள் என்றும் “நீர் தொழ வேண்டும்போது, உளூச் செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கித் தக்பீர் கூறுவீராக!” என்று அவரிடம் கூறியதாகவும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 601

َدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ الْمُعَلِّمِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ : ‏ ‏

‏فِي كُلِّ صَلَاةٍ قِرَاءَةٌ فَمَا أَسْمَعَنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى مِنَّا أَخْفَيْنَاهُ مِنْكُمْ وَمَنْ قَرَأَ ‏ ‏بِأُمِّ الْكِتَابِ ‏ ‏فَقَدْ أَجْزَأَتْ عَنْهُ وَمَنْ زَادَ فَهُوَ أَفْضَلُ ‏

“தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசங்களை ஓத வேண்டும். நபி (ஸல்)  எங்களுக்குச் செவியுறுமாறு ஓதிய( ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறும்படி ஓதுகின்றோம். அவர்கள் எங்களுக்குச் செவியுறாதவாறு ஓதிய( ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறாத வண்ணம் ஓதுகின்றோம். ஒருவர் (தம் தொழுகையில்) குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை மட்டும் ஓதுவது அவருக்குப் போதுமானதாகும். அதைவிட அதிகமாக ஓதுவது சிறப்பிற்குரியதாகும்”.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 600

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ :‏‏

‏فِي كُلِّ الصَّلَاةِ يَقْرَأُ فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى مِنَّا أَخْفَيْنَا مِنْكُمْ ‏
‏فَقَالَ لَهُ رَجُلٌ إِنْ لَمْ أَزِدْ عَلَى ‏ ‏أُمِّ الْقُرْآنِ ‏ ‏فَقَالَ إِنْ زِدْتَ عَلَيْهَا فَهُوَ خَيْرٌ وَإِنْ انْتَهَيْتَ إِلَيْهَا أَجْزَأَتْ عَنْكَ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். அவர்கள் எங்களுக்குக் கேட்கும்படி ஒலியுயர்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குக் கேட்கும்படி ஒலியுயர்த்தி ஓதுகின்றோம். நாங்கள் செவியுறவியலா வண்ணம் அவர்கள் ஒலிதாழ்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறவியலா வண்ணம் அமைதியாக ஓதுகின்றோம்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அப்போது ஒருவர், “குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தைவிடக் கூடுதலாக (எதையும்) நான் ஓதாவிட்டால்?” என்று வினவினார். அதற்கு அபூஹுரைரா (ரலி), “அதைவிட அதிகமாக ஓதினால் அது உமக்குச் சிறந்ததாகும். அத்துடன் முடித்துக் கொண்டால், அது உமக்குப் போதுமானதாகிவிடும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 599

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ الشَّهِيدِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةٍ ‏
‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَمَا أَعْلَنَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَعْلَنَّاهُ لَكُمْ وَمَا أَخْفَاهُ أَخْفَيْنَاهُ لَكُمْ ‏

“(குர்ஆனின் வசனங்களை) ஓதாமல் தொழுகை என்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒலியுயர்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாம் உங்களுக்கு ஒலியுயர்த்தியும் அவர்கள் ஒலிதாழ்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாமும் உங்களுக்கு ஒலிதாழ்த்தி ஓதுகின்றோம்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 598

و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا ‏ ‏بِأُمِّ الْقُرْآنِ ‏ ‏فَهِيَ ‏ ‏خِدَاجٌ ‏ ‏ثَلَاثًا غَيْرُ تَمَامٍ فَقِيلَ ‏ ‏لِأَبِي هُرَيْرَةَ ‏ ‏إِنَّا نَكُونُ وَرَاءَ الْإِمَامِ فَقَالَ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ قَالَ اللَّهُ تَعَالَى ‏ ‏قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ الْعَبْدُ

‏الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏ ‏قَالَ اللَّهُ تَعَالَى حَمِدَنِي عَبْدِي وَإِذَا قَالَ ‏
‏الرَّحْمَنِ الرَّحِيمِ ‏‏قَالَ اللَّهُ تَعَالَى أَثْنَى عَلَيَّ عَبْدِي وَإِذَا قَالَ ‏
‏مَالِكِ يَوْمِ الدِّينِ ‏‏قَالَ مَجَّدَنِي عَبْدِي وَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَيَّ عَبْدِي فَإِذَا قَالَ ‏
‏إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ‏‏قَالَ هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ ‏
‏اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ‏‏قَالَ هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏


‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بِهِ ‏ ‏الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ ‏ ‏دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ مَرِيضٌ فِي بَيْتِهِ فَسَأَلْتُهُ أَنَا عَنْهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا السَّائِبِ ‏ ‏مَوْلَى ‏ ‏هِشَامِ بْنِ زُهْرَةَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا السَّائِبِ ‏ ‏مَوْلَى بَنِي ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ هِشَامِ بْنِ زُهْرَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ صَلَّى صَلَاةً فَلَمْ يَقْرَأْ فِيهَا ‏ ‏بِأُمِّ الْقُرْآنِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏ ‏وَفِي حَدِيثِهِمَا قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُوَيْسٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏قَالَ سَمِعْتُ مِنْ ‏ ‏أَبِي ‏ ‏وَمِنْ ‏ ‏أَبِي السَّائِبِ ‏ ‏وَكَانَا جَلِيسَيْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَا قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ ‏ ‏فَهِيَ ‏ ‏خِدَاجٌ ‏ ‏يَقُولُهَا ثَلَاثًا بِمِثْلِ حَدِيثِهِمْ ‏

அபூஹுரைரா (ரலி), “குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை, குறைபாடு உடையதும் நிறைவு பெறாததுமாகும் என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்” என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “நாங்கள் இமாமுக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதும் ஓத வேண்டுமா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “அதை உங்களுடைய மனதுக்குள் ஓதிக் கொள்ளுங்கள். ஏனெனில்…”,

“தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா)ப் பிரார்த்தனையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (எல்லாப் புகழும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், மிக்குயர்ந்தோன் அல்லாஹ், ‘என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்’ என்று கூறுவான். அடியான், ‘அர்ரஹ்மானிர்ரஹீம்’ (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்குயர்ந்தோன் அல்லாஹ், ‘என் அடியான் என்னைத் துதித்து விட்டான்’ என்று கூறுவான். அடியான், ‘மாலிக்கி யவ்மித்தீன்’ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், ‘என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான் / என்னைச் சார்ந்து விட்டான்’ என்று கூறுவான்.

மேலும், அடியான் ‘இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்த்தயீன்’ (உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம்) என்று சொன்னால், அல்லாஹ், ‘இது எனக்கும் என் அடியானுக்கும் இடைப்பட்ட சிறப்புத் தொடர்பாகும். என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்’ என்று கூறுவான். அடியான், ‘இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத்தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ (எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி, நீ அருள் புரிந்தோரின் வழி. உன்னுடைய கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல; வழி தவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் ‘இது என் அடியானுக்கு உரிய(நேர்வழியான)து; என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்’ என்று கூறுவான்” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறியிருக்கின்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழியாக அறிவிக்கப்படும்போது, “அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஃகூப் (ரஹ்) நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க அவர் இல்லத்துக்கு நான் சென்றிருந்தவேளை, இந்த ஹதீஸைப் பற்றி அன்னாரிடம் கேட்டேன். அப்போது, இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸாயிப் (ரஹ்) செவியுற்றுத் தமக்கு அறிவித்ததாகக் அலாஉ (ரஹ்) கூறினார்” என்று ஸுஃப்யான் (ரஹ்) கூறிய தகவல் இடம்பெற்றுள்ளது.

இபுனு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை …” எனத் தொடங்குவதோடு ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பை ஒத்தமைந்துள்ளது. இவ்விரு அறிவிப்புகளிலும் “தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா)ப் பிரார்த்தனையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். அவ்விரண்டில் ஒரு பகுதி எனக்கும் மற்றொரு பகுதி என் அடியானுக்கும் உரியதாகும் என்று அல்லாஹ் கூறினான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

“குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை குறைபாடு உடையதாகும் என நபி (ஸல்) மும்முறை கூறினார்கள்” எனும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை, அன்னாரின் இரு அணுக்கத் தோழர்களான என் தந்தையும் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களும் அறிவிக்க நான் செவியுற்றிருக்கிறேன் என்று அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) தனது அறிவிப்பில் கூறுகின்றார்.