அத்தியாயம்: 40, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4173

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، كِلاَهُمَا عَنِ الْمُقْرِئِ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلاَ يَرُدُّهُ فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمِلِ طَيِّبُ الرِّيحِ ‏”‏ ‏

“ஒருவரிடம் வாசனைத் திரவியம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம். ஏனெனில், அது எடுத்துச் செல்ல எளிதானதும் சிறந்த நறுமணமும் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4172

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ شُعْبَةَ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، وَالْمُسْتَمِرِّ، قَالاَ سَمِعْنَا أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ حَشَتْ خَاتَمَهَا مِسْكًا وَالْمِسْكُ أَطْيَبُ الطِّيبِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறியபோது, “அவள் தனது மோதிரத்தி(ன் நடுக்குழியி)ல் கஸ்தூரியை இட்டு நிரப்பியிருந்தாள். நறுமணப் பொருட்களிலேயே கஸ்தூரி மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4171

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي خُلَيْدُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ كَانَتِ امْرَأَةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ قَصِيرَةٌ تَمْشِي مَعَ امْرَأَتَيْنِ طَوِيلَتَيْنِ فَاتَّخَذَتْ رِجْلَيْنِ مِنْ خَشَبٍ وَخَاتَمًا مِنْ ذَهَبٍ مُغْلَقٍ مُطْبَقٍ ثُمَّ حَشَتْهُ مِسْكًا وَهُوَ أَطْيَبُ الطِّيبِ فَمَرَّتْ بَيْنَ الْمَرْأَتَيْنِ فَلَمْ يَعْرِفُوهَا فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا ‏”‏ ‏.‏ وَنَفَضَ شُعْبَةُ يَدَهُ ‏

“பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் குட்டையான பெண்ணொருத்தி இருந்தாள். அவள் உயரமான இரு பெண்களுடன் நடந்து செல்வாள். (அவளைப் பார்த்து மக்கள் பரிகசிப்பார்கள் ஆகவே,) அவள் மரக்கட்டையாலான கால்களை(ப் பொருத்தி உயரமான அவ்விரு பெண்களுக்குச் சமமாகத் தன்னை) ஆக்கிக் கொண்டாள்.

மேலும், தங்க மோதிரம் ஒன்றையும் அவள் அணிந்துகொண்டாள். அது (ஒரு உட்குழி கொண்டு) மூடப்பட்டதாக இருந்தது. அவள் அக்குழிக்குள் நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியை இட்டு நிரப்பினாள். பின்னர் அவள் அவ்விரு பெண்களுக்கிடையே நடந்து சென்றாள். அவளை மக்கள் (அடையாளம்) அறிந்து கொள்ளவில்லை. அப்போது அவள் (மோதிரத்திலிருந்து கஸ்தூரியை கமழச் செய்வதற்காக) தமது கையை இவ்வாறு அசைத்து சைகை செய்தாள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

இதை அறிவிக்கும்போது, இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) தமது கையை உதறிக் காட்டினார்கள்.

அத்தியாயம்: 40, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4170

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ  :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَقُلْ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي ‏.‏ وَلْيَقُلْ لَقِسَتْ نَفْسِي ‏”‏

“உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் (என் மனம் அசுத்தமாகிவிட்டது எனும் பொருள் தரும்) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். (என் மனம் கனத்துவிட்டது எனும் பொருள் கொண்ட) ‘லகிஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே கூறட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4169

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كِلاَهُمَا عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي ‏.‏ وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي ‏”‏ ‏.‏ هَذَا حَدِيثُ أَبِي كُرَيْبٍ وَقَالَ أَبُو بَكْرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ وَلَمْ يَذْكُرْ ‏”‏ لَكِنْ ‏”‏


وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، بِهَذَا الإِسْنَادِ ‏

“உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் (என் மனம் அசுத்தமாகிவிட்டது எனும் பொருளில்) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (என் மனம் கனத்துவிட்டது எனும் பொருள் கொண்ட) ‘லகிஸத் நஃப்சீ’ எனும் சொல்லைக் கூறட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “மாறாக” எனும் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 40, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4168

 وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ :‏

هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ أَطْعِمْ رَبَّكَ وَضِّئْ رَبَّكَ ‏.‏ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ رَبِّي ‏.‏ وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي ‏.‏ وَلْيَقُلْ فَتَاىَ فَتَاتِي غُلاَمِي ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: உங்களில் யாரும் (ஓர் அடிமையிடம்) “உன் ரப்புக்கு (அதிபதிக்கு) பருக நீர் கொடு, உன் ரப்புக்கு உணவு கொடு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு” என்றெல்லாம் கூற வேண்டாம். உங்களில் யாரும் (தம் உரிமையாளரை) ‘ரப்பீ’ என்று கூற வேண்டாம். மாறாக, ‘ஸய்யிதீ’, ‘மவ்லாய’ என்று கூறட்டும். உங்களில் யாரும் (என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூற) அப்தீ, அமத்தீ என்று கூற வேண் டாம். மாறாக, ஃபத்தாய (என் பணியாள்) ஃபத்தாத்தீ (என் பணிப்பெண்) என்று கூறட்டும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 40, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4167

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي ‏.‏ فَكُلُّكُمْ عَبِيدُ اللَّهِ وَلَكِنْ لِيَقُلْ فَتَاىَ ‏.‏ وَلاَ يَقُلِ الْعَبْدُ رَبِّي ‏.‏ وَلَكِنْ لِيَقُلْ سَيِّدِي ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِهِمَا ‏”‏ وَلاَ يَقُلِ الْعَبْدُ لِسَيِّدِهِ مَوْلاَىَ ‏”‏ ‏.‏ وَزَادَ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ ‏”‏ فَإِنَّ مَوْلاَكُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏”‏ ‏

“உங்களில் யாரும் (தம் அடிமையை) ‘அப்தீ’ என்று அழைக்க வேண்டாம். உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அடிமை(அப்து)களே! எனவே, ‘ஃபத்தாய’ (என் பணியாளரே!) என்று அழைக்கட்டும். அடிமை, தன் (உரிமையாளரை) ‘ரப்பீ‘ (என் அதிபதியே!) என்று அழைக்க வேண்டாம். மாறாக, ‘ஸய்யிதீ’ (என் தலைவரே!) என்று அழைக்கட்டும்” என்று . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்), அஃமஷ் (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்புகளில், “அடிமை, தன் உரிமையாளரை ‘மவ்லாய’ (எசமானே!) என்று அழைக்க வேண்டாம்” என்று காணப்படுகிறது.

அபூமுஆவியா (ரஹ்) வழி தனித்த அறிவிப்பில், “ஏனெனில், அல்லாஹ்வே உங்கள் ‘மவ்லா’ (எசமான்) ஆவான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 40, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4166

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي وَأَمَتِي ‏.‏ كُلُّكُمْ عَبِيدُ اللَّهِ وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللَّهِ وَلَكِنْ لِيَقُلْ غُلاَمِي وَجَارِيَتِي وَفَتَاىَ وَفَتَاتِي ‏”‏

“உங்களில் யாரும் (தன் ஆண் அடிமையை) ‘அப்தீ’ என்றோ, (அடிமைப் பெண்ணை) ‘அமத்தீ’ என்றோ அழைக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒவ்வொரு ஆணும் அல்லாஹ்வின் அடிமை(அப்து)களே; உங்களில் ஒவ்வொரு பெண்ணும் அல்லாஹ்வின் அடிமை(அமத்)களே. எனவே, ஃகுலாமீ(என் பணியாளனே!), ஜாரியத்தீ(என் பணிப்பெண்ணே!), ஃபத்தாய(என் சின்னப் பையா!), ஃபத்தாத்தீ(என் சின்னப் பெண்ணே!) ஆகிய (அழகிய) சொற்களால் அழைக்கட்டும்” என்று . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4165

وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَقُولُوا الْكَرْمُ ‏.‏ وَلَكِنْ قُولُوا الْعِنَبُ وَالْحَبَلَةُ”‏ ‏

“அல்கர்மு என்று (திராட்சையைக்) கூறாதீர்கள். மாறாக, ‘அல்இனப்’ என்றோ ‘அல்ஹப்லா’ என்றோ சொல்லுங்கள்” என்று  நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4164

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، – يَعْنِي ابْنَ يُونُسَ – عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَقُولُوا الْكَرْمُ ‏.‏ وَلَكِنْ قُولُوا الْحَبَلَةُ ‏”‏ ‏‏ يَعْنِي الْعِنَبَ ‏

“அல்கர்மு என்று (திராட்சையைக்) கூறாதீர்கள். மாறாக ‘அல்ஹப்லா’ என்று சொல்லுங்கள்” என்று  நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி)