அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2143

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ :‏

‏قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏مُنِيخٌ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏أَحَجَجْتَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ قُلْتُ لَبَّيْكَ ‏ ‏بِإِهْلَالٍ ‏ ‏كَإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَقَدْ أَحْسَنْتَ طُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَأَحِلَّ قَالَ فَطُفْتُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ ‏ ‏بَنِي قَيْسٍ ‏ ‏فَفَلَتْ رَأْسِي ثُمَّ ‏ ‏أَهْلَلْتُ ‏ ‏بِالْحَجِّ قَالَ فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ حَتَّى كَانَ فِي خِلَافَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ يَا ‏ ‏أَبَا مُوسَى ‏ ‏أَوْ يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ‏ ‏رُوَيْدَكَ بَعْضَ فُتْيَاكَ فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي ‏ ‏النُّسُكِ ‏ ‏بَعْدَكَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ فُتْيَا ‏ ‏فَلْيَتَّئِدْ ‏ ‏فَإِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَبِهِ فَأْتَمُّوا قَالَ فَقَدِمَ ‏ ‏عُمَرُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّ كِتَابَ اللَّهِ يَأْمُرُ بِالتَّمَامِ وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَحِلَّهُ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம், “ஹஜ் செய்வதற்காகவா வந்துள்ளீர்?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “நீர் எதற்காக இஹ்ராம் பூண்டீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் பூண்டேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நன்றே செய்தீர். நீர் (சென்று) இறையில்லம் கஅபாவை (தவாஃப்) சுற்றி, ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி(தொங்கோட்டம் ஓடி)விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க!” என்றார்கள்.

அவ்வாறே நான் (சென்று) இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவுக்கிடையேயும் சுற்றிவிட்டுப் பின்னர் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் சென்றேன். அவர் எனது தலையில் பேன் பார்த்து விட்டார். பின்னர் (துல்ஹஜ் எட்டாவது நாளில்) நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னேன். இவ்வாறு (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான் மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கி வந்தேன்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒருவர் வந்து, “அபூமூஸா! (அல்லது) அப்துல்லாஹ் பின் கைஸ்! உங்களது தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) ஹஜ்ஜின் செயல்முறைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறினார்.

அதன் பின்னர் நான், “மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செயல்படுத்துவதை) அவர் நிறுத்தி வைக்கட்டும். ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்” என்று கூறினேன்.

உமர் (ரலி) வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) “நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டளையிடுகிறது. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பலிப் பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2142

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏سَمِعَ ‏ ‏مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏قَالَ :‏

‏أَضْلَلْتُ بَعِيرًا لِي فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاقِفًا مَعَ النَّاسِ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَقُلْتُ وَاللَّهِ إِنَّ هَذَا لَمِنْ ‏ ‏الْحُمْسِ ‏ ‏فَمَا شَأْنُهُ هَاهُنَا وَكَانَتْ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏تُعَدُّ مِنْ ‏ ‏الْحُمْسِ

நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒருமுறை) எனது ஒட்டகம் ஒன்றைத் தொலைத்துவிட்டேன். அரஃபா நாளன்று நான் எனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாப் பெருவெளியில் மக்களுடன் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (முஸ்தலிஃபாவில் தங்கும்) ‘ஹும்ஸு'(க் குறைஷி)களுள் ஒருவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எண்ணிக் கொண்டேன். குறைஷியர், (கடினமான சமயப் பற்றுடைய) ஹும்ஸுகளாகவே கருதப்பட்டனர்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2141

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ : ‏

‏كَانَتْ ‏ ‏الْعَرَبُ ‏ ‏تَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏عُرَاةً إِلَّا ‏ ‏الْحُمْسَ ‏ ‏وَالْحُمْسُ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏وَمَا وَلَدَتْ كَانُوا يَطُوفُونَ عُرَاةً إِلَّا أَنْ تُعْطِيَهُمْ الْحُمْسُ ثِيَابًا فَيُعْطِي الرِّجَالُ الرِّجَالَ وَالنِّسَاءُ النِّسَاءَ وَكَانَتْ ‏ ‏الْحُمْسُ ‏ ‏لَا يَخْرُجُونَ مِنْ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏وَكَانَ النَّاسُ كُلُّهُمْ يَبْلُغُونَ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏فَحَدَّثَنِي أَبِي عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏الْحُمْسُ هُمْ الَّذِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِمْ …” ‏ثُمَّ ‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“ ‏

قَالَتْ كَانَ النَّاسُ ‏ ‏يُفِيضُونَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏وَكَانَ ‏ ‏الْحُمْسُ ‏ ‏يُفِيضُونَ ‏ ‏مِنْ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏يَقُولُونَ لَا ‏ ‏نُفِيضُ ‏ ‏إِلَّا مِنْ الْحَرَمِ فَلَمَّا نَزَلَتْ ‏ …” ‏‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“ ‏رَجَعُوا إِلَى ‏ ‏عَرَفَاتٍ

இறையில்லம் கஅபாவை (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) அரபியர் நிர்வாணமாகவே சுற்றிவருவார்கள் – (சமயப் பற்றில்) கடும்போக்குள்ள) ‘ஹும்ஸு’களைத் தவிர! ‘ஹும்ஸு’ என்போர் குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர். ஹும்ஸுகள் ஏதேனும் ஆடை வழங்கினால் தவிர, அரபியர் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றிவருவார்கள். ஆண்கள் ஆண்களுக்கும், பெண்கள் பெண்களுக்கும் ஆடை வழங்குவர். கடினமான சமயப் பற்றுடைய ஹும்ஸுகள் (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) முஸ்தலிஃபாவிலிருந்து வெளியேறமாட்டார்கள். மற்ற அரபுகள் அனைவரும் அரஃபா சென்றடை(ந்து அங்குத் தங்கு)வார்கள்.

“வல்லமையும் மாண்புமுள்ள அல்லாஹ் ‘…பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்‘ என்று கூறியது ‘ஹும்ஸுகளைப் பற்றித்தான்” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள். (அரபு) மக்கள் அனைவரும் அரஃபாவிலிருந்தே திரும்பிச்செல்வார்கள். ஹும்ஸுகள் மட்டும் முஸ்தலிஃபாவிலிருந்து திரும்பிச்செல்வார்கள். அவர்கள், “நாங்கள் ‘ஹரம்’ (புனித) எல்லையிலிருந்தே திரும்பிச்செல்வோம்” என்று கூறுவார்கள். பின்னர் இந்த (2:199) வசனம் அருளப்பட்டதும் அரஃபாவிலிருந்தே அவர்களும் திரும்பிச்சென்றனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2140

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ : ‏

‏كَانَ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏وَمَنْ ‏ ‏دَانَ ‏ ‏دِينَهَا يَقِفُونَ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏ ‏وَكَانُوا يُسَمَّوْنَ ‏ ‏الْحُمْسَ ‏ ‏وَكَانَ سَائِرُ ‏ ‏الْعَرَبِ ‏ ‏يَقِفُونَ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ نَبِيَّهُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَأْتِيَ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَيَقِفَ بِهَا ثُمَّ ‏ ‏يُفِيضَ ‏ ‏مِنْهَا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ …” ‏ثُمَّ ‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ

குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (அறியாமைக் கால ஹஜ்ஜின்போது, தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். அவர்கள் ‘(சமயப் பற்றில்) கடும்போக்குள்ள (ஹும்ஸு) குழுவினர்’ எனப் பெயர் பெற்றவர்கள். மற்ற எல்லா அரபியரும் அரஃபாப் பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) ‘அரஃபா’வுக்குச் சென்று, அங்குத் தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான்: “… பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.20, ஹதீஸ் எண்: 2139

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَتَى الْحَجَرَ ‏ ‏فَاسْتَلَمَهُ ‏ ‏ثُمَّ مَشَى عَلَى يَمِينِهِ فَرَمَلَ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் ‘ஹஜருல் அஸ்வது’க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்து சென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் இயல்பாக நடந்தும் சுற்றினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.20, ஹதீஸ் எண்: 2138

حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏فِي حَدِيثِهِ ذَلِكَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏نَحَرْتُ هَاهُنَا ‏ ‏وَمِنًى ‏ ‏كُلُّهَا مَنْحَرٌ فَانْحَرُوا فِي ‏ ‏رِحَالِكُمْ ‏ ‏وَوَقَفْتُ هَاهُنَا ‏ ‏وَعَرَفَةُ ‏ ‏كُلُّهَا مَوْقِفٌ وَوَقَفْتُ هَاهُنَا ‏ ‏وَجَمْعٌ ‏ ‏كُلُّهَا مَوْقِفٌ

“நான் (மினாவில் மஸ்ஜிதுல் கைஃப் அருகிலுள்ள) இந்த இடத்தில்தான் அறுத்துப் பலியிட்டேன். ஆனால், மினா முழுவதும் பலியிடும் இடமே. எனவே, (மினாவில்) நீங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பலியிட்டுக் கொள்ளுங்கள். நான் (அரஃபா நடுவிலுள்ள ‘ஜபலுர் ரஹ்மத்’ மலைக்குக் கீழேயுள்ள) இந்த இடத்தில் தங்கினேன். ஆனால், அரஃபா முழுவதும் தங்குமிடம்தான். நான் முஸ்தலிஃபாவில் (‘மஷ்அருல் ஹராம்’ குன்றின் அருகிலுள்ள) இந்த இடத்தில் தங்கினேன். ஆனால், முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடம்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.19, ஹதீஸ் எண்: 2137

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَاتِمٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ الْمَدَنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ : ‏

‏دَخَلْنَا عَلَى ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏فَسَأَلَ عَنْ الْقَوْمِ حَتَّى انْتَهَى إِلَيَّ فَقُلْتُ أَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏فَأَهْوَى بِيَدِهِ إِلَى رَأْسِي فَنَزَعَ زِرِّي الْأَعْلَى ثُمَّ نَزَعَ زِرِّي الْأَسْفَلَ ثُمَّ وَضَعَ كَفَّهُ بَيْنَ ثَدْيَيَّ وَأَنَا يَوْمَئِذٍ غُلَامٌ شَابٌّ فَقَالَ مَرْحَبًا بِكَ يَا ابْنَ أَخِي سَلْ عَمَّا شِئْتَ فَسَأَلْتُهُ وَهُوَ أَعْمَى وَحَضَرَ وَقْتُ الصَّلَاةِ فَقَامَ فِي ‏ ‏نِسَاجَةٍ ‏ ‏مُلْتَحِفًا بِهَا كُلَّمَا وَضَعَهَا عَلَى ‏ ‏مَنْكِبِهِ ‏ ‏رَجَعَ طَرَفَاهَا إِلَيْهِ مِنْ صِغَرِهَا وَرِدَاؤُهُ إِلَى جَنْبِهِ عَلَى ‏ ‏الْمِشْجَبِ ‏ ‏فَصَلَّى بِنَا فَقُلْتُ أَخْبِرْنِي عَنْ حَجَّةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ بِيَدِهِ فَعَقَدَ تِسْعًا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَكَثَ تِسْعَ سِنِينَ لَمْ يَحُجَّ ثُمَّ ‏ ‏أَذَّنَ فِي النَّاسِ ‏ ‏فِي الْعَاشِرَةِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَاجٌّ فَقَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏بَشَرٌ كَثِيرٌ كُلُّهُمْ يَلْتَمِسُ أَنْ يَأْتَمَّ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيَعْمَلَ مِثْلَ عَمَلِهِ فَخَرَجْنَا مَعَهُ حَتَّى أَتَيْنَا ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏فَوَلَدَتْ ‏ ‏أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ ‏ ‏مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ أَصْنَعُ قَالَ ‏ ‏اغْتَسِلِي ‏ ‏وَاسْتَثْفِرِي ‏ ‏بِثَوْبٍ وَأَحْرِمِي فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمَسْجِدِ ثُمَّ رَكِبَ الْقَصْوَاءَ حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ نَاقَتُهُ عَلَى ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏نَظَرْتُ إِلَى مَدِّ بَصَرِي بَيْنَ يَدَيْهِ مِنْ رَاكِبٍ وَمَاشٍ وَعَنْ يَمِينِهِ مِثْلَ ذَلِكَ وَعَنْ يَسَارِهِ مِثْلَ ذَلِكَ وَمِنْ خَلْفِهِ مِثْلَ ذَلِكَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ أَظْهُرِنَا وَعَلَيْهِ يَنْزِلُ الْقُرْآنُ وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ وَمَا عَمِلَ بِهِ مِنْ شَيْءٍ عَمِلْنَا بِهِ ‏ ‏فَأَهَلَّ ‏ ‏بِالتَّوْحِيدِ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ ‏ ‏وَأَهَلَّ ‏ ‏النَّاسُ بِهَذَا الَّذِي ‏ ‏يُهِلُّونَ بِهِ ‏ ‏فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهِمْ شَيْئًا مِنْهُ ‏ ‏وَلَزِمَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَلْبِيَتَهُ قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏لَسْنَا ‏ ‏نَنْوِي إِلَّا الْحَجَّ لَسْنَا نَعْرِفُ الْعُمْرَةَ حَتَّى إِذَا أَتَيْنَا ‏ ‏الْبَيْتَ ‏ ‏مَعَهُ ‏ ‏اسْتَلَمَ ‏ ‏الرُّكْنَ ‏ ‏فَرَمَلَ ‏ ‏ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا ثُمَّ نَفَذَ إِلَى مَقَامِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَقَرَأَ ‏…” وَاتَّخِذُوا مِنْ مَقَامِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏مُصَلًّى“ ‏فَجَعَلَ الْمَقَامَ بَيْنَهُ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏فَكَانَ أَبِي يَقُولُ وَلَا أَعْلَمُهُ ذَكَرَهُ إِلَّا عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ ‏ ‏قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ‏ ‏وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ‏ ‏ثُمَّ رَجَعَ إِلَى الرُّكْنِ ‏ ‏فَاسْتَلَمَهُ ‏ ‏ثُمَّ خَرَجَ مِنْ ‏ ‏الْبَابِ ‏ ‏إِلَى ‏ ‏الصَّفَا ‏ ‏فَلَمَّا دَنَا مِنْ ‏ ‏الصَّفَا ‏ ‏قَرَأَ ” ‏…إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏والْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ ‏ “… ‏

أَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ فَبَدَأَ ‏ ‏بِالصَّفَا ‏ ‏فَرَقِيَ عَلَيْهِ حَتَّى رَأَى ‏ ‏الْبَيْتَ ‏ ‏فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَوَحَّدَ اللَّهَ وَكَبَّرَهُ وَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ ثُمَّ دَعَا بَيْنَ ذَلِكَ قَالَ مِثْلَ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ نَزَلَ إِلَى ‏ ‏الْمَرْوَةِ ‏ ‏حَتَّى إِذَا ‏ ‏انْصَبَّتْ ‏ ‏قَدَمَاهُ فِي بَطْنِ الْوَادِي سَعَى حَتَّى إِذَا ‏ ‏صَعِدَتَا ‏ ‏مَشَى حَتَّى أَتَى ‏ ‏الْمَرْوَةَ ‏ ‏فَفَعَلَ عَلَى ‏ ‏الْمَرْوَةِ ‏ ‏كَمَا فَعَلَ عَلَى ‏ ‏الصَّفَا ‏ ‏حَتَّى إِذَا كَانَ آخِرُ طَوَافِهِ عَلَى ‏ ‏الْمَرْوَةِ ‏ ‏فَقَالَ لَوْ أَنِّي ‏ ‏اسْتَقْبَلْتُ ‏ ‏مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ لَمْ أَسُقْ ‏ ‏الْهَدْيَ ‏ ‏وَجَعَلْتُهَا عُمْرَةً فَمَنْ كَانَ مِنْكُمْ لَيْسَ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلْيَحِلَّ وَلْيَجْعَلْهَا عُمْرَةً فَقَامَ ‏ ‏سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلِعَامِنَا هَذَا أَمْ لِأَبَدٍ فَشَبَّكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَصَابِعَهُ وَاحِدَةً فِي الْأُخْرَى وَقَالَ دَخَلَتْ الْعُمْرَةُ فِي الْحَجِّ مَرَّتَيْنِ لَا بَلْ لِأَبَدٍ أَبَدٍ وَقَدِمَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏مِنْ ‏ ‏الْيَمَنِ ‏ ‏بِبُدْنِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوَجَدَ ‏ ‏فَاطِمَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏مِمَّنْ حَلَّ وَلَبِسَتْ ثِيَابًا صَبِيغًا وَاكْتَحَلَتْ فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهَا فَقَالَتْ إِنَّ أَبِي أَمَرَنِي بِهَذَا قَالَ فَكَانَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏يَقُولُ ‏ ‏بِالْعِرَاقِ ‏ ‏فَذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُحَرِّشًا ‏ ‏عَلَى ‏ ‏فَاطِمَةَ ‏ ‏لِلَّذِي صَنَعَتْ مُسْتَفْتِيًا لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيمَا ذَكَرَتْ عَنْهُ فَأَخْبَرْتُهُ أَنِّي أَنْكَرْتُ ذَلِكَ عَلَيْهَا فَقَالَ صَدَقَتْ صَدَقَتْ مَاذَا قُلْتَ حِينَ ‏ ‏فَرَضْتَ الْحَجَّ ‏ ‏قَالَ قُلْتُ اللَّهُمَّ إِنِّي ‏ ‏أُهِلُّ ‏ ‏بِمَا ‏ ‏أَهَلَّ ‏ ‏بِهِ رَسُولُكَ قَالَ فَإِنَّ ‏ ‏مَعِيَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏فَلَا تَحِلُّ قَالَ فَكَانَ جَمَاعَةُ ‏ ‏الْهَدْيِ ‏ ‏الَّذِي قَدِمَ بِهِ ‏ ‏عَلِيٌّ ‏ ‏مِنْ ‏ ‏الْيَمَنِ ‏ ‏وَالَّذِي أَتَى بِهِ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِائَةً قَالَ فَحَلَّ النَّاسُ كُلُّهُمْ وَقَصَّرُوا إِلَّا النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَمَنْ كَانَ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلَمَّا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏تَوَجَّهُوا إِلَى ‏ ‏مِنًى ‏ ‏فَأَهَلُّوا ‏ ‏بِالْحَجِّ وَرَكِبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَصَلَّى بِهَا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالْفَجْرَ ثُمَّ مَكَثَ قَلِيلًا حَتَّى طَلَعَتْ الشَّمْسُ وَأَمَرَ ‏ ‏بِقُبَّةٍ ‏ ‏مِنْ شَعَرٍ ‏ ‏تُضْرَبُ ‏ ‏لَهُ بِنَمِرَةَ فَسَارَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا تَشُكُّ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏إِلَّا أَنَّهُ وَاقِفٌ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ كَمَا كَانَتْ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏تَصْنَعُ فِي الْجَاهِلِيَّةِ فَأَجَازَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى أَتَى ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَوَجَدَ ‏ ‏الْقُبَّةَ ‏ ‏قَدْ ‏ ‏ضُرِبَتْ ‏ ‏لَهُ بِنَمِرَةَ فَنَزَلَ بِهَا حَتَّى إِذَا ‏ ‏زَاغَتْ الشَّمْسُ ‏ ‏أَمَرَ بِالْقَصْوَاءِ ‏ ‏فَرُحِلَتْ ‏ ‏لَهُ فَأَتَى بَطْنَ الْوَادِي فَخَطَبَ النَّاسَ وَقَالَ إِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ ‏ ‏مَوْضُوعٌ ‏ ‏وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ ‏ ‏مَوْضُوعَةٌ ‏ ‏وَإِنَّ أَوَّلَ دَمٍ ‏ ‏أَضَعُ ‏ ‏مِنْ دِمَائِنَا دَمُ ‏ ‏ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ‏ ‏كَانَ مُسْتَرْضِعًا فِي ‏ ‏بَنِي سَعْدٍ ‏ ‏فَقَتَلَتْهُ ‏ ‏هُذَيْلٌ ‏ ‏وَرِبَا الْجَاهِلِيَّةِ ‏ ‏مَوْضُوعٌ ‏ ‏وَأَوَّلُ رِبًا ‏ ‏أَضَعُ ‏ ‏رِبَانَا رِبَا ‏ ‏عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَإِنَّهُ ‏ ‏مَوْضُوعٌ ‏ ‏كُلُّهُ فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ ‏ ‏لَا يُوطِئْنَ فُرُشَكُمْ ‏ ‏أَحَدًا تَكْرَهُونَهُ فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ ‏ ‏مُبَرِّحٍ ‏ ‏وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ وَقَدْ تَرَكْتُ فِيكُمْ مَا لَنْ تَضِلُّوا بَعْدَهُ إِنْ اعْتَصَمْتُمْ بِهِ كِتَابُ اللَّهِ وَأَنْتُمْ تُسْأَلُونَ عَنِّي فَمَا أَنْتُمْ قَائِلُونَ قَالُوا نَشْهَدُ أَنَّكَ قَدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ فَقَالَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ يَرْفَعُهَا إِلَى السَّمَاءِ ‏ ‏وَيَنْكُتُهَا ‏ ‏إِلَى النَّاسِ اللَّهُمَّ ‏ ‏اشْهَدْ ‏ ‏اللَّهُمَّ اشْهَدْ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَذَّنَ ثُمَّ أَقَامَ فَصَلَّى الظُّهْرَ ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعَصْرَ وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى أَتَى الْمَوْقِفَ فَجَعَلَ بَطْنَ نَاقَتِهِ الْقَصْوَاءِ إِلَى الصَّخَرَاتِ وَجَعَلَ ‏ ‏حَبْلَ الْمُشَاةِ ‏ ‏بَيْنَ يَدَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَلَمْ يَزَلْ وَاقِفًا حَتَّى غَرَبَتْ الشَّمْسُ وَذَهَبَتْ الصُّفْرَةُ قَلِيلًا حَتَّى غَابَ الْقُرْصُ ‏ ‏وَأَرْدَفَ ‏ ‏أُسَامَةَ ‏ ‏خَلْفَهُ وَدَفَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَدْ ‏ ‏شَنَقَ ‏ ‏لِلْقَصْوَاءِ الزِّمَامَ حَتَّى إِنَّ رَأْسَهَا لَيُصِيبُ ‏ ‏مَوْرِكَ ‏ ‏رَحْلِهِ وَيَقُولُ بِيَدِهِ الْيُمْنَى أَيُّهَا النَّاسُ السَّكِينَةَ السَّكِينَةَ كُلَّمَا أَتَى ‏ ‏حَبْلًا ‏ ‏مِنْ ‏ ‏الْحِبَالِ ‏ ‏أَرْخَى لَهَا قَلِيلًا حَتَّى تَصْعَدَ حَتَّى أَتَى ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ وَلَمْ ‏ ‏يُسَبِّحْ ‏ ‏بَيْنَهُمَا شَيْئًا ثُمَّ اضْطَجَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى طَلَعَ الْفَجْرُ وَصَلَّى الْفَجْرَ حِينَ تَبَيَّنَ لَهُ الصُّبْحُ بِأَذَانٍ وَإِقَامَةٍ ثُمَّ رَكِبَ الْقَصْوَاءَ حَتَّى أَتَى ‏ ‏الْمَشْعَرَ الْحَرَامَ ‏ ‏فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَدَعَاهُ وَكَبَّرَهُ ‏ ‏وَهَلَّلَهُ ‏ ‏وَوَحَّدَهُ فَلَمْ يَزَلْ وَاقِفًا حَتَّى ‏ ‏أَسْفَرَ ‏ ‏جِدًّا ‏ ‏فَدَفَعَ ‏ ‏قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ ‏ ‏وَأَرْدَفَ ‏ ‏الْفَضْلَ بْنَ عَبَّاسٍ ‏ ‏وَكَانَ رَجُلًا حَسَنَ الشَّعْرِ أَبْيَضَ وَسِيمًا فَلَمَّا ‏ ‏دَفَعَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّتْ بِهِ ‏ ‏ظُعُنٌ ‏ ‏يَجْرِينَ ‏ ‏فَطَفِقَ ‏ ‏الْفَضْلُ ‏ ‏يَنْظُرُ إِلَيْهِنَّ فَوَضَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدَهُ عَلَى وَجْهِ ‏ ‏الْفَضْلِ ‏ ‏فَحَوَّلَ ‏ ‏الْفَضْلُ ‏ ‏وَجْهَهُ إِلَى الشِّقِّ الْآخَرِ يَنْظُرُ فَحَوَّلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدَهُ مِنْ الشِّقِّ الْآخَرِ عَلَى وَجْهِ ‏ ‏الْفَضْلِ ‏ ‏يَصْرِفُ وَجْهَهُ مِنْ الشِّقِّ الْآخَرِ يَنْظُرُ حَتَّى أَتَى ‏ ‏بَطْنَ مُحَسِّرٍ ‏ ‏فَحَرَّكَ قَلِيلًا ثُمَّ سَلَكَ الطَّرِيقَ الْوُسْطَى الَّتِي تَخْرُجُ عَلَى ‏ ‏الْجَمْرَةِ الْكُبْرَى ‏ ‏حَتَّى أَتَى ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏الَّتِي عِنْدَ الشَّجَرَةِ فَرَمَاهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ مِنْهَا مِثْلِ ‏ ‏حَصَى الْخَذْفِ ‏ ‏رَمَى مِنْ بَطْنِ الْوَادِي ثُمَّ انْصَرَفَ إِلَى الْمَنْحَرِ فَنَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ بِيَدِهِ ثُمَّ أَعْطَى ‏ ‏عَلِيًّا ‏ ‏فَنَحَرَ مَا ‏ ‏غَبَرَ ‏ ‏وَأَشْرَكَهُ فِي ‏ ‏هَدْيِهِ ‏ ‏ثُمَّ أَمَرَ مِنْ كُلِّ ‏ ‏بَدَنَةٍ ‏ ‏بِبَضْعَةٍ ‏ ‏فَجُعِلَتْ فِي قِدْرٍ فَطُبِخَتْ فَأَكَلَا مِنْ لَحْمِهَا وَشَرِبَا مِنْ مَرَقِهَا ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَفَاضَ إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏فَصَلَّى ‏ ‏بِمَكَّةَ ‏ ‏الظُّهْرَ فَأَتَى ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏يَسْقُونَ عَلَى ‏ ‏زَمْزَمَ ‏ ‏فَقَالَ ‏ ‏انْزِعُوا ‏ ‏بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَلَوْلَا أَنْ يَغْلِبَكُمْ النَّاسُ عَلَى سِقَايَتِكُمْ ‏ ‏لَنَزَعْتُ ‏ ‏مَعَكُمْ فَنَاوَلُوهُ دَلْوًا فَشَرِبَ مِنْهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَ ‏ ‏أَتَيْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ حَجَّةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏حَاتِمِ بْنِ إِسْمَعِيلَ ‏ ‏وَزَادَ فِي الْحَدِيثِ وَكَانَتْ ‏ ‏الْعَرَبُ ‏ ‏يَدْفَعُ بِهِمْ ‏ ‏أَبُو سَيَّارَةَ ‏ ‏عَلَى حِمَارٍ ‏ ‏عُرْيٍ ‏ ‏فَلَمَّا ‏ ‏أَجَازَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏بِالْمَشْعَرِ الْحَرَامِ لَمْ تَشُكَّ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏أَنَّهُ سَيَقْتَصِرُ عَلَيْهِ وَيَكُونُ مَنْزِلُهُ ثَمَّ فَأَجَازَ وَلَمْ يَعْرِضْ لَهُ حَتَّى أَتَى ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَنَزَلَ

நாங்கள் (ஒரு முறை) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஜாபிர் (ரலி), (என்னுடன் வந்த) மக்களைப் பற்றி விசாரித்துவிட்டு இறுதியில் என்னைப் பற்றி விசாரித்தார்கள்.

“நான் ஹுஸைன் பின் அலீ (ரலி) அவர்களின் பேரன் முஹம்மது பின் அலீ” என்று (என்னை) அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது நான் இளவயதுச் சிறுவனாக இருந்தேன்; ஜாபிர் (ரலி) கண்பார்வையற்ற(முதிய)வராய் இருந்தார்கள். அவர்கள் (அன்பொழுகத்) தமது கையை எனது தலையை நோக்கி நீட்டி, (பிறகு கையைக் கீழே கொண்டு சென்று) எனது அங்கியின் மேல் பொத்தானையும், அடுத்து கீழ்ப் பொத்தானையும் கழற்றி, எனது நெஞ்சில் கையை வைத்தார்கள்.

மேலும், “என் சகோதரர் மகனே, வருக! நீர் விரும்பியதைப் பற்றி என்னிடம் கேள்” என்றார்கள். அவர்களிடம் சில விளக்கங்களைக் கேட்டேன். தொழுகை நேரம் வந்ததும் அவர்கள் தமது மேல் துண்டைப் போர்த்திக் கொண்டு எழுந்தார்கள். அவர்கள் அதைத் தமது தோள்மீது போடப் போட, அது சிறியதாக இருந்ததால் தோளில் உட்காராமல் அதன் இரு ஓரங்களும் கீழே சரிந்து கொண்டிருந்தன. அப்போது அவர்களது மேல்சட்டை அருகிலிருந்த ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருந்தது. பிறகு அவர்கள் (மேல்சட்டை அணியாமலேயே மேல்துண்டுடன்) எங்களுக்குத் தொழுவித்தார்கள்.

பிறகு அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த ஹஜ்ஜைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒன்பது’ எனத் தமது விரலால் சைகை செய்து காட்டிவிட்டுக் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவிற்கு வந்த பின்) ஒன்பது ஆண்டுகள் ஹஜ் (கடமையாகாததால் அதை) நிறைவேற்றாமலேயே தங்கியிருந்தார்கள். பத்தாவது ஆண்டில் மக்களிடையே “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இந்த ஆண்டில்) ஹஜ் செய்யப்போகிறார்கள்” என அறிவிப்புச் செய்ய வைத்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே தாமும் (ஹஜ்) கடமையை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஏராளமான மக்கள் மதீனாவிற்கு(த் திரண்டு) வந்தனர்.

பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்திற்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, (அபூபக்ரு (ரலி) அவர்களின் மனைவி) அஸ்மா பின்த்து உமைஸ் (ரலி) அவர்களுக்கு முஹம்மது பின் அபீபக்ரு (ரலி) பிறந்தார். எனவே அஸ்மா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்ரு (ரலி) அவர்களை அனுப்பி) “நான் எப்படி (ஹஜ்) செய்வது?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, இஹ்ராம் பூண்டுகொள்” என்று கூறியனுப்பினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கிருந்த துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதுவிட்டு, கஸ்வா எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) ‘அல்பைதாஉ’ எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் பயணத்திற்குத் தயாரானது. அப்போது எனது பார்வையெட்டும் தூரத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும், (ஏராளமான) மக்கள் வாகனத்திலும் கால்நடையாகவும் வந்து குழுமியிருப்பதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு நடுவில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. அவற்றின் விளக்கத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாங்களும் அப்படியே செய்தோம்.

அவர்கள், “லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக வல்முல்க்; லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்துவிட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணை இல்லை)” என்று ஏகத்துவ உறுதிமொழியுடன் தல்பியாச் சொன்னார்கள். மக்கள், தாம் கூறிவருகின்ற முறையில் (சற்றுக் கூடுதல் குறைவு வாசகங்களுடன்) தல்பியா கூறினர். ஆனால், அதில் எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆட்சேபிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொடர்ந்து தமது தல்பியாவையே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஹஜ்ஜைத் தவிர வேறெதுவும் எங்கள் சிந்தையில் இல்லை. (ஹஜ் காலத்தில் செய்யும்) அந்த உம்ராவை நாங்கள் அறிந்திருக்கவுமில்லை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கஅபாவில் ‘ஹஜருல் அஸ்வது’ உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். (தம் தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாக மூன்று முறையும், (இயல்பாக) நடந்தவாறு நான்கு முறையும் சுற்றிவந்தார்கள்.

பிறகு மகாமு இப்ராஹீமை முன்னோக்கிச் சென்று, “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” (2:125) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது மகாமு இப்ராஹீம் தமக்கும் கஅபாவிற்கும் இடையே இருக்குமாறு நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ‘குல் ஹுவல்லாஹு அஹது’, ‘குல் யாஅய்யுஹல் காஃபிரூன்’ ஆகிய இரு அத்தியாயங்களை அவ்விரு ரக்அத்களிலும் ஓதினார்கள்.

(இவ்விரு அத்தியாயங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தொழுகையில் ஓதினார்கள் என்றே ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து என் தந்தை முஹம்மது பின் அலீ பின் ஹுஸைன் (ரஹ்) கூறினார்கள் என நான் அறிவேன் என்று அறிவிப்பாளர் ஜஅஃபர் பின் முஹம்மது பின் அலீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்).

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஹஜருல் அஸ்வது’ அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக ‘ஸஃபா’ மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் “ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்” எனும் (2:158ஆவது) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, “அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கின்றேன்” என்று சொன்னார்கள். அவ்வாறே, முதலில் ‘ஸஃபா’ மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறையில்லம் கஅபா தென்பட்டது. உடனே “லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழியும் தக்பீரும் சொன்னார்கள்.

மேலும், “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்தான். கூட்டணிக் குலங்கள் அனைத்தையும் தான் ஒருவனே தோற்கடித்தான்)” என்றும் கூறினார்கள்.

பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்துவிட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள்.

பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (இயல்பாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.

மர்வாவில் அவர்கள் தமது இறுதிச் சுற்றை முடித்ததும், “நான் (ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ராச் செய்யலாம் எனப்) பின்னர் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், பலிப் பிராணிகளை என்னுடன் கொண்டுவந்திருக்கமாட்டேன்; இதை உம்ராவாக மாற்றியிருப்பேன். எனவே, பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராதவர்கள் (ஹஜ்ஜுடைய) இஹ்ராமிலிருந்து நீங்கிவிட்டு, தமது இஹ்ராமை உம்ராவுக்காக ஆக்கிக்கொள்ளட்டும்!” என்று சொன்னார்கள்.

அப்போது ஸுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) எழுந்து(வந்து), “அல்லாஹ்வின் தூதரே! இ(ச்சலுகையான)து, இந்த ஆண்டிற்கு மட்டுமா? எல்லா ஆண்டுக்குமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் விரல்களில் ஒன்றை மற்றொன்றுடன் கோத்துக்கொண்டு, “ஹஜ்ஜுக்குள் உம்ரா நுழைந்துகொண்டது” என்று இரண்டு முறை கூறினார்கள். பிறகு (ஸுராக்கா (ரலி) அவர்களுக்கு), “எல்லா ஆண்டுக்கும்தான் (இச்சலுகை); எல்லா ஆண்டுக்கும்தான் (இச்சலுகை)” என்று விடையளித்தார்கள்.

அலீ (ரலி) யமன் நாட்டிலிருந்து (அந்த ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களுக்காகக் குர்பானி ஒட்டகங்களுடன் வந்தார்கள். அப்போது (அலீயின் மனைவி) ஃபாத்திமா (ரலி), சாயமிடப்பட்ட ஆடையணிந்து, கண்களுக்கு அஞ்சனம் தீட்டி, இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பவர்களில் ஒருவராகக் காட்சியளித்தார்கள். அதை அலீ (ரலி) ஆட்சேபித்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி), “என் தந்தை (நபி)தாம் இப்படிச் செய்யுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்” என்றார்கள்.

((பிந்திய காலத்தில் அலீ (ரலி) இராக்கிலிருந்தபோது, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா செய்தது குறித்துப் புகார் செய்வதற்காகவும், ஃபாத்திமா கூறியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் அவ்வாறு செய்யச் சொன்னார்களா என்று கேட்டறிவதற்காகவும் சென்றேன். ஃபாத்திமா மீதான எனது ஆட்சேபத்தை அவர்களிடம் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எனது குற்றச்சாட்டைக் கேட்டுவிட்டு), ‘அவர் (ஃபாத்திமா) சொன்னது உண்மையே; அவர் சொன்னது உண்மையே’ என்றார்கள். பிறகு, ‘நீர் இஹ்ராம் பூண்டு, ஹஜ் செய்ய முடிவு செய்தபோது என்ன (தல்பியா) சொன்னீர்?’ என்று கேட்டார்கள். அதற்கு ‘இறைவா! உன் தூதர் எதற்காக இஹ்ராம் பூண்டார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் பூணுகின்றேன் என்று (தல்பியா) சொன்னேன்’ என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘என்னுடன் பலிப் பிராணிகள் உள்ளன. எனவே, (என்னைப் போன்றே எனக் கூறி நீரும் இஹ்ராம் பூண்டுள்ளதால்) இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டாம்’ என்றார்கள்”)).

தொடர்ந்து முஹம்மது பின் அலீ (ரஹ்) கூறுவதாவது:

அலீ (ரலி) யமனிலிருந்து கொண்டுவந்த பலிப் பிராணிகளோடு நபி (ஸல்) (மதீனாவிலிருந்து) கொண்டுவந்த பலிப் பிராணிகளையும் சேர்த்து மொத்தம் நூறு பலிப் பிராணிகள் இருந்தன.

பிறகு நபி (ஸல்) அவர்களையும், தம்முடன் பலிப் பிராணிகளைக் கொண்டுவந்திருந்த மக்களையும் தவிர மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தலைமுடியைக் குறைத்துக் கொண்டனர்; துல்ஹஜ் எட்டாவது நாள் வந்தபோது, மக்கள் மினாவை நோக்கிச் சென்றனர். அப்போது ஹஜ்ஜுக்காக ‘தல்பியா’ கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ரு, அஸ்ரு, மஃக்ரிப், இஷா, ஃபஜ்ரு ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ருத் தொழுதுவிட்டு, சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். பிறகு (அரஃபா அருகிலுள்ள) ‘நமிரா’ எனுமிடத்தில் தமக்காகக் கூடாரம் ஒன்று அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் (முஸ்தலிஃபாவிலுள்ள) ‘மஷ்அருல் ஹராம்’ எனும் மேட்டுக்கு அருகில் தங்குவார்கள் எனக் குறைஷியர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்தனர். அறியாமைக் காலத்தில் குறைஷியர் அங்குத் தங்குவது வழக்கம். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதைக் கடந்து அரஃபாவிற்குச் சென்றுவிட்டார்கள். அங்கு ‘நமிரா’வில் தமக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் கண்டு அதில் தங்கினார்கள்.

சூரியன் உச்சி சாய்ந்ததும் கஸ்வா எனும் தமது ஒட்டகத்திற்காக (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பட்டதும் (‘உரனா’) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்:

“உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். அறிக! அறியாமைக் காலத்தின் வழிகேடுகள் அனைத்தும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டுவிட்டன. அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க் கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதையுண்டுவிட்டன. முதற்கட்டமாக, நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கின்றேன். அவன் பனூ ஸஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபுக்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கின்றேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மனைவியர் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்)பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் இருக்கையில் (அமர) அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில், முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.

உங்களிடையே நான் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொண்டால் ஒருபோதும் வழிதவறவேமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்” என்று கூறிவிட்டு, “உங்களிடம் என்னைப் பற்றி (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் (இறைச்செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்துவிட்டீர்கள்; (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்தார் மீது) அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, “இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள்.

பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ருத் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ருத் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (‘ஜபலுர் ரஹ்மத்’ மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது கஸ்வா எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்துவந்த மக்கள் திரளைத் தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.

சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்ட பிறகு உஸாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்பட்டார்கள். கஸ்வா எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும்போது) கால் வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து, “மக்களே! நிதானம்! நிதானம்! (மெதுவாகச் செல்லுங்கள்)” என்றார்கள். ஒவ்வொரு மணல் மேட்டை அடையும்போதும், ஒட்டகம் மேட்டில் ஏறும்வரை கடிவாளத்தைச் சற்றுத் தளர்த்தினார்கள். இவ்வாறு முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு தொழுகை அறிவிப்பும் இரு இகாமத்களும் சொல்லி மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருக்களித்துப் படுத்திருந்துவிட்டு, ஃபஜ்ரு உதயமானதும் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லி ஃபஜ்ருத் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. பிறகு கஸ்வா ஒட்டகத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு (‘குஸஹ்’ மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன் என்று(தக்பீரு)ம், லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று(தஹ்லீலு)ம், ‘அவன் தனித்தவன்’ என்று(ஓரிறை உறுதிமொழியு)ம் கூறினார்கள். நன்கு விடியும்வரை அங்கேயே தங்கியிருந்தார்கள்.

பிறகு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து புறப்பட்டார்கள். அப்போது ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு சென்றார்கள். -ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அழகிய முடியும் தோற்றமும் வெள்ளை நிறமும் உடைய வசீகரமான ஆண்மகனாக இருந்தார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்பட்டபோது, அவர்களைக் கடந்து பெண்கள் சிலர் சென்றனர். அப்பெண்களை ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) கூர்ந்து பார்க்கலானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஃபள்லு (ரலி) அவர்களின் முகத்தின் மீது தமது கையை வைத்(து மறைத்)தார்கள். உடனே ஃபள்லு (ரலி) தமது முகத்தை வேறு பக்கம் திருப்பி(அப்பெண்களை)ப் பார்க்கலானார்கள். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கையை மறு பக்கமும் கொண்டுசென்று, ஃபள்லு (ரலி) அவர்களின் முகத்தின் மீது வைத்து, அப்பெண்களைப் பார்க்கவிடாமல் திருப்பினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முஸ்தலிஃபாவிற்கும் மினாவிற்கும் இடையிலுள்ள) ‘பத்னு முஹஸ்ஸிர்’ எனும் இடத்துக்கு வந்தபோது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாகச் செலுத்தினார்கள். பின்னர் ‘ஜம்ரத்துல் அகபா’ செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்து, அந்த மரத்திற்கு அருகிலுள்ள ‘ஜம்ரத்துல் அகபா’விற்குச் சென்று, சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். அந்தப் பள்ளத்தாக்கின் நடுவே நின்று கற்களை எறிந்தார்கள்.

பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் இறைச்சித் துண்டு ஒன்று கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாகனத்தில் ஏறி, (‘தவாஃபுல் இஃபாளா’ செய்வதற்காக) இறையில்லம் கஅபாவை நோக்கிச் சென்றார்கள். மக்காவிலேயே லுஹ்ருத் தொழுதுவிட்டு, அப்துல் முத்தலிப் மக்களிடம் சென்றார்கள். அப்போது அம்மக்கள் ‘ஸம்ஸம்’ கிணற்றிலிருந்து நீரிறைத்துத் பங்கிட்டுக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்துல் முத்தலிபின் மக்களே! நீரிறைத்துப் பங்கிடுங்கள். ‘ஸம்ஸம்’ கிணற்றில் நீரிறை(த்துப் பங்கிடும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்துவிடுவார்கள்@ என்று (அச்சம்) இல்லாவிட்டால், உங்களுடன் நானும் நீரிறைப்பேன்” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக முஹம்மது பின் அலீ பின் அல் ஹுஸைன் (ரஹ்)


குறிப்புகள் :

ஹஃப்ஸிப்னு கியாஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றிக் கேட்டேன் …” என்று தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. மேலும் அதில், “அபூ ஸய்யாரா என்பவர் (அறியாமைக் காலத்தில்) தமது சேணம் பூட்டப்படாத கழுதையில் அரபியரை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அழைத்துச் செல்பவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘மஷ்அருல் ஹராமை’த் தாண்டிச் சென்றபோது, ‘அந்த இடத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயணத்தைச் சுருக்கிக்கொள்வார்கள்; அதுதான் அவர்கள் தங்கும் இடமாக அமையும் என்பதில் குறைஷியர் உறுதியோடு இருந்தனர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அ(ங்கு தங்குவ)தற்கு முன்வரவில்லை. நேராக அரஃபாவை நோக்கிச் சென்று (அதன் அருகிலுள்ள ‘நமிரா’வில்தான்) தங்கினார்கள்” என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.

@ஸம்ஸம் கிணற்றிலிருந்து நீர் இறைத்துப் பங்கிடும் சேவை, அப்துல் முத்தலின் குடும்பத்தாருக்கு மட்டுமே உரித்தானதாக இருந்துவந்தது. அப்துல் முத்தலிபின் பேரரான நபி (ஸல்) ஸம்ஸல் நீர் இறைப்பில் பங்கு கொண்டால், ‘ஸம்ஸம் கிணற்றிலிருந்து நீர் இறைத்துப் பங்கிடுவது ஹஜ்ஜின் கடமைச் செயல்களுள் ஒன்று’ என்று (தவறாக) எண்ணிக்கொண்டு ஸம்ஸம் நீர் பங்கீட்டில் போட்டி போட்டுக்கொண்டு நீரிறைக்க மக்களனைவரும் முன்வந்து, நீர் பங்கீட்டுக்கு பங்கம் வந்துவிடுமோ என்றெண்ணி நபி (ஸல்) அதிலிருந்து தவிர்ந்து கொண்டார்கள்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.18, ஹதீஸ் எண்: 2136

و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادٍ ‏ ‏قَالَ ‏ ‏خَلَفٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ نَقُولُ ‏ ‏لَبَّيْكَ بِالْحَجِّ فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَجْعَلَهَا عُمْرَةً

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘லப்பைக்க பில்ஹஜ்’ என (ஹஜ்ஜுக்காக) தல்பியாச் சொன்னவர்களாகச் சென்றோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கு வந்ததும்) அந்தத் தல்பிய்யாவை உம்ராவாக மாற்றிக்கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.18, ஹதீஸ் எண்: 2135

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَأْمُرُ ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏وَكَانَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَنْهَى عَنْهَا قَالَ فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏فَقَالَ عَلَى يَدَيَّ دَارَ الْحَدِيثُ ‏ ‏تَمَتَّعْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا قَامَ ‏ ‏عُمَرُ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ كَانَ يُحِلُّ لِرَسُولِهِ مَا شَاءَ بِمَا شَاءَ وَإِنَّ الْقُرْآنَ قَدْ نَزَلَ مَنَازِلَهُ فَ ”أَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ‏“ ‏‏كَمَا أَمَرَكُمْ اللَّهُ وَأَبِتُّوا نِكَاحَ هَذِهِ النِّسَاءِ فَلَنْ أُوتَى بِرَجُلٍ نَكَحَ امْرَأَةً إِلَى أَجَلٍ إِلَّا رَجَمْتُهُ بِالْحِجَارَةِ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ ‏ ‏فَافْصِلُوا حَجَّكُمْ مِنْ عُمْرَتِكُمْ فَإِنَّهُ أَتَمُّ لِحَجِّكُمْ وَأَتَمُّ لِعُمْرَتِكُمْ

இப்னு அப்பாஸ் (ரலி) ஹஜ்ஜுத் தமத்துஉ செய்யுமாறு உத்தரவு இடுபவர்களாகவும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அதற்குத் தடை விதிப்பவர்களாகவும் இருந்தனர்.

எனவே, நான் இதைப் பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கூறி(தீர்ப்புக் கோரி)னேன். அதற்கு ஜாபிர் (ரலி), “சரியான ஆளிடம்தான் இந்த விஷயம் வந்துள்ளது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுத் தமத்துஉ செய்துள்ளோம். பின்னர் உமர் (ரலி) (ஆட்சிக்கு) வந்தபோது, ‘அல்லாஹ், தன் தூதருக்கு, தான் நாடியதை, தான் நாடிய ஒரு காரணத்திற்காக அனுமதித்துவந்தான். ஆனால், குர்ஆன் அதற்குரிய உயர் நிலையில் உள்ளது. ஆகவே, ‘அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் அவன் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளபடி முழுமையாக்குங்கள்’ (2:196).

பெண்களின் (முறையான) திருமணத்தை உத்தரவாதப்படுத்துங்கள். இனிமேல், தவணை முறையில் (குறிப்பிட்ட காலம்வரைக்கும் என்று) ஒரு பெண்ணை மணமுடித்தவர் (என்னிடம்) கொண்டுவரப்பட்டால், அவரைக் கல்லால் அடித்துக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று உமர் (ரலி) அறிவிப்புச் செய்தார்கள்” என்பதாக ஜாபிர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்)


குறிப்பு  :

ஹம்மாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “…எனவே, உங்களது உம்ராவிலிருந்து ஹஜ்ஜைத் தனியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் ஹஜ்ஜையும் முழுமையாக்கும்; உங்கள் உம்ராவையும் முழுமையாக்கும்” என உமர் (ரலி) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2134

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مَعْمَرِ بْنِ رِبْعِيٍّ الْقَيْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هِشَامٍ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَجْعَلَهَا عُمْرَةً وَنَحِلَّ قَالَ وَكَانَ مَعَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً

நாங்கள் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமானவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவுக்கு) வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக் கொண்டு, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு உத்தரவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பலிப் பிராணி இருந்ததால் தமது இஹ்ராமை உம்ரா(தமத்து)வாக ஆக்கிக் கொள்ள அவர்களால் இயலவில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)