அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2153

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْجُرَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ لِي ‏ ‏عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏إِنِّي لَأُحَدِّثُكَ بِالْحَدِيثِ الْيَوْمَ يَنْفَعُكَ اللَّهُ بِهِ بَعْدَ الْيَوْمِ وَاعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ ‏ ‏أَعْمَرَ ‏ ‏طَائِفَةً مِنْ أَهْلِهِ فِي الْعَشْرِ فَلَمْ تَنْزِلْ آيَةٌ ‏ ‏تَنْسَخُ ‏ ‏ذَلِكَ وَلَمْ يَنْهَ عَنْهُ حَتَّى ‏ ‏مَضَى لِوَجْهِهِ ‏ ‏ارْتَأَى كُلُّ امْرِئٍ بَعْدُ مَا شَاءَ أَنْ يَرْتَئِيَ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ارْتَأَى رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ ‏ ‏يَعْنِي ‏ ‏عُمَرَ

என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), “நான் இன்றைய தினம் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிப்பேன்; அதன் மூலம் உமக்கு அல்லாஹ் இதற்குப் பின்னாலும் பயனளிப்பான். அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் வீட்டாரில் சிலரை, (ஹஜ் மாதத்தின்) பத்தாவது நாளில் உம்ராவிற்கு இஹ்ராம் பூண அனுமதித்தார்கள். அந்த நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப்பெறவில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யாமலேயே இறந்துவிட்டார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்)


குறிப்பு :

முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) வழி அறிவிப்பில் “…பின்னர் ஒருவர் – அதாவது உமர் (ரலி) – தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2152

و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْفَزَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ التَّيْمِيُّ ‏ ‏عَنْ ‏ ‏غُنَيْمِ بْنِ قَيْسٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏فَعَلْنَاهَا وَهَذَا يَوْمَئِذٍ كَافِرٌ بِالْعُرُشِ ‏ ‏يَعْنِي بُيُوتَ ‏ ‏مَكَّةَ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فِي رِوَايَتِهِ ‏ ‏يَعْنِي ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِهِمَا ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏فِي الْحَجِّ

நான் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ முறையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “(நபித்தோழர்களாகிய) நாங்கள் அவ்வாறு செய்துள்ளோம். அப்போது இதோ இவர் (முஆவியா) ‘உருஷில்’ அதாவது மக்காவில் (இருந்த வீட்டில்) இறைமறுப்பாளராக இருந்தார்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸ அத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக ஃகுனைம் பின் கைஸ் (ரஹ்)

குறிப்புகள் : அபூ பக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பிலும் “‘இதோ இவர் -அதாவது முஆவியா (ரலி)…” எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில் “ஹஜ் காலத்தில் உம்ராச் செய்வது (தமத்துஉ)” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2151

:حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ بَيَانٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الشَّعْثَاءِ قَالَ أَتَيْتُ إِبْرَاهِيمَ النَّخَعِيَّ وَإِبْرَاهِيمَ التَّيْمِيَّ فَقُلْتُ

إِنِّي أَهُمُّ أَنْ أَجْمَعَ الْعُمْرَةَ وَالْحَجَّ الْعَامَ فَقَالَ إِبْرَاهِيمُ النَّخَعِيُّ لَكِنْ أَبُوكَ لَمْ يَكُنْ لِيَهُمَّ بِذَلِكَ قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ بَيَانٍ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ مَرَّ بِأَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالرَّبَذَةِ فَذَكَرَ لَهُ ذَلِكَ فَقَالَ إِنَّمَا كَانَتْ لَنَا خَاصَّةً دُونَكُمْ

நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) ஆகியோரிடம் சென்று, “நான் இவ்வருடம் ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்துச் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்றேன்.

அதற்கு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்), “ஆனால், உங்கள் தந்தை (அபுஷ் ஷஅஸா) அவ்வாறு செய்பவராக இருக்கவில்லை” என்றார்கள்.

இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) கூறினார்கள்:

என் தந்தை யஸீத் பின் ஷரீக் (ரஹ்) (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘அர்ரபதா’ எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றி வினவியபோது அபூதர் (ரலி), “அது, (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது; உங்களுக்கு உரியதன்று” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் அபிஷ்ஷஅஸா (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2150

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏زُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

‏قَالَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏لَا تَصْلُحُ الْمُتْعَتَانِ إِلَّا لَنَا خَاصَّةً ‏ ‏يَعْنِي ‏ ‏مُتْعَةَ النِّسَاءِ ‏ ‏وَمُتْعَةَ الْحَجِّ

இடைக்கால(முத்ஆ)த் திருமணம் செய்வது, ஹஜ் காலத்தில் ‘தமத்துஉ’ செய்வது ஆகிய இரு ‘முத்ஆ’க்களும் (அந்தக் காலத்தில்) எங்களுக்கான சிறப்புச் சலுகைகளாக இருந்தன.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2149

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَيَّاشٍ الْعَامِرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ: ‏

‏كَانَتْ لَنَا رُخْصَةً ‏ ‏يَعْنِي ‏ ‏الْمُتْعَةَ ‏ ‏فِي الْحَجِّ

ஹஜ்ஜில் ‘தமத்துஉ’ செய்வது- (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.

அறிவிப்பாளர் :அபூதர் (ரலி)


குறிப்பு :

‘தமத்துஉ’ : பார்க்க ஹதீஸ் 2145இன் குறிப்பு

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2148

و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏كَانَتْ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏فِي الْحَجِّ لِأَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَاصَّةً

‘தமத்துஉ’ முறையில் ஹஜ் செய்வதானது, முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)


குறிப்பு :

பார்க்க ஹதீஸ் எண் 2136

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2147

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏قَالَ :‏

‏اجْتَمَعَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏وَعُثْمَانُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏بِعُسْفَانَ ‏ ‏فَكَانَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏أَوْ الْعُمْرَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏مَا تُرِيدُ إِلَى أَمْرٍ فَعَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَنْهَى عَنْهُ فَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏دَعْنَا مِنْكَ فَقَالَ إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ أَدَعَكَ فَلَمَّا أَنْ رَأَى ‏ ‏عَلِيٌّ ‏ ‏ذَلِكَ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِهِمَا جَمِيعًا

‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்டனர். உஸ்மான் (ரலி) ‘தமத்துஉ’ செய்வதற்கு, அல்லது (ஹஜ் பருவத்தில்) உம்ராச் செய்வதற்குத் தடை விதித்திருந்த காலம் அது. எனவே, அவர்களிடம் அலீ (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த ஒரு செயலில் நீங்கள் என்ன (மாற்றத்தை) விரும்புகின்றீர்கள்? அதற்கு நீங்கள் தடை விதிக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி), “நீங்கள் (இந்த முடிவில்) எம்மை விட்டுவிடுங்கள்!” என்று கூற, அதற்கு அலீ (ரலி) “என்னால் உங்களை அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது” என்று சொன்னார்கள். எனினும், தமது நிலையில் உஸ்மான் (ரலி) (உறுதியாக) இருப்பதைக் கண்ட அலீ (ரலி), ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து (கிரான்) தல்பியாச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)


குறிப்பு :

‘உஸ்ஃபான்’ எனும் ஊர் மதீனாவிலிருந்து மக்காவுக்குச் செல்லும் வழியில் உள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2146

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ :‏

‏كَانَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏وَكَانَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏يَأْمُرُ بِهَا فَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏لِعَلِيٍّ ‏ ‏كَلِمَةً ثُمَّ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏لَقَدْ عَلِمْتَ أَنَّا قَدْ ‏ ‏تَمَتَّعْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَجَلْ وَلَكِنَّا كُنَّا خَائِفِينَ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

உஸ்மான் (ரலி) ‘தமத்துஉ’ (ஹஜ்) செய்ய வேண்டாம் எனத் தடை விதித்திருந்தார்கள். (இதற்கு மாறாக) அலீ (ரலி) ‘தமத்துஉ’ செய்யுமாறு உத்தரவிட்டார்கள். இதையொட்டி உஸ்மான் (ரலி), அலீ (ரலி) அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பின்னர் அலீ (ரலி), “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘தமத்துஉ’ செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று வினவினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி), “ஆம்; ஆயினும் அப்போது நாம் அச்சத்திலிருந்தோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)


குறிப்பு :

“நாம் அச்சத்திலிருந்தோம்” என்று உஸ்மான் (ரலி) கூறியது, “தமத்துஉ முறை ஹஜ்ஜில் குறை உண்டாகுமோ என்ற ஐயத்திலிருந்தோம்” எனும் பொருள் கொள்வதற்கு இடம்பாடுள்ள சொற்றொடராகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2145

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى :‏

‏أَنَّهُ كَانَ يُفْتِي ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ رُوَيْدَكَ بِبَعْضِ فُتْيَاكَ فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي ‏ ‏النُّسُكِ ‏ ‏بَعْدُ حَتَّى لَقِيَهُ بَعْدُ فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏قَدْ عَلِمْتُ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ فَعَلَهُ وَأَصْحَابُهُ وَلَكِنْ كَرِهْتُ أَنْ يَظَلُّوا ‏ ‏مُعْرِسِينَ بِهِنَّ ‏ ‏فِي الْأَرَاكِ ثُمَّ يَرُوحُونَ فِي الْحَجِّ تَقْطُرُ رُءُوسُهُمْ

“தமத்துஉ ஹஜ் செல்லும்” என நான் மார்க்கத் தீர்ப்பு வழங்கிவந்தேன். இந்நிலையில் என்னிடம் ஒருவர் (வந்து), “நீங்கள் உங்களது தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர் -ரலி) ஹஜ்ஜின் செயல்முறைகளில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார். பிறகு நான் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி),

“நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்துள்ளனர் என நான் அறிந்துள்ளேன். ஆயினும், ஹாஜிகள் தம் மனைவியருடன் (அரஃபாவில் உள்ள) ‘அராக்’ பகுதியில் கூடி மகிழ்ந்து(குளித்து)விட்டு, தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க (அரஃபா நோக்கிச்) செல்வது எனக்கு வெறுப்பாயிருந்தது. (ஆகவேதான், ஹஜ் பருவத்தின்போது உம்ராச் செய்ய வேண்டாம் என நான் ஆணையிட்டேன்)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

ஹஜ் பருவத்தில் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டு, அதை நிறைவேற்றிவிட்டு. ஹஜ்ஜுக்கு இடைப்பட்ட நாட்களில் மனைவியருடன் கூடி மகிழ்ந்துவிட்டு, பிறகு துல்ஹஜ் எட்டாவது நாள் ஹஜ்ஜுக்குத் தனியாக இஹ்ராம் பூண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவது ‘தமத்துஉ’ முறை ஹஜ் ஆகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2144

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏مُنِيخٌ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏فَقَالَ ‏ ‏بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏أَهْلَلْتُ ‏ ‏بِإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ هَلْ سُقْتَ مِنْ ‏ ‏هَدْيٍ ‏ ‏قُلْتُ لَا قَالَ فَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ حِلَّ فَطُفْتُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ قَوْمِي فَمَشَطَتْنِي وَغَسَلَتْ رَأْسِي فَكُنْتُ أُفْتِي النَّاسَ بِذَلِكَ فِي إِمَارَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَإِمَارَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏فَإِنِّي لَقَائِمٌ بِالْمَوْسِمِ إِذْ جَاءَنِي رَجُلٌ فَقَالَ إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي شَأْنِ ‏ ‏النُّسُكِ ‏ ‏فَقُلْتُ أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ بِشَيْءٍ ‏ ‏فَلْيَتَّئِدْ ‏ ‏فَهَذَا أَمِيرُ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَبِهِ فَأْتَمُّوا فَلَمَّا قَدِمَ قُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا هَذَا الَّذِي أَحْدَثْتَ فِي شَأْنِ ‏ ‏النُّسُكِ ‏ ‏قَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ ‏”‏وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ “‏

وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ نَبِيِّنَا عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَام فَإِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَحِلَّ حَتَّى نَحَرَ ‏ ‏الْهَدْيَ


‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ عَوْنٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عُمَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَنِي إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏قَالَ فَوَافَقْتُهُ فِي الْعَامِ الَّذِي حَجَّ فِيهِ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا مُوسَى ‏ ‏كَيْفَ قُلْتَ حِينَ أَحْرَمْتَ قَالَ قُلْتُ لَبَّيْكَ ‏ ‏إِهْلَالًا ‏ ‏كَإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هَلْ سُقْتَ ‏ ‏هَدْيًا ‏ ‏فَقُلْتُ لَا قَالَ فَانْطَلِقْ فَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَحِلَّ ثُمَّ ‏ ‏سَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏وَسُفْيَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் என்னிடம், “நீர் எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் பூண்டுள்ளேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் உம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்துள்ளீரா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அதற்கவர்கள், “அவ்வாறாயின் நீர் இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றிவந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்வீராக!” என்று கூறினார்கள். அவ்வாறே நான் இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி விட்டுப் பின்னர் என் கூட்டத்தைச் சேர்ந்த (நெருங்கிய உறவுக்காரப்) பெண் ஒருவரிடம் சென்றேன். அவர் எனக்குத் தலை கழுவி, தலை வாரிவிட்டார்.

நான் இவ்வாறு (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக் கொள்ளலாம் என்றே) அபூபக்ரு (ரலி) ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) ஆட்சியி(ன் ஆரம்பக் காலத்தி)லும் மக்களுக்குத் தீர்ப்பளித்துவந்தேன். நான் ஹஜ் காலத்தில் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது, என்னிடம் ஒருவர் வந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்) ஹஜ்ஜின் செயல்முறைகளில் ஏற்படுத்திய புதிய நடைமுறையை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொன்னார். உடனே நான் “மக்களே! நாம் யாருக்கேனும் ஏதேனும் மார்க்கத் தீர்ப்பு அளித்திருந்தால் அவர்கள் (அதைச் செயல்படுத்தி விடாமல்) நிறுத்தி வைக்கட்டும்! இதோ! இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வரப்போகிறார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்” என்று கூறினேன். உமர் (ரலி) வந்தபோது அவர்களிடம் நான், ”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஹஜ்ஜின் செயல்முறைகளில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி), “நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயல்படுவதெனில், வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், ‘அல்லாஹ்விற்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்குங்கள்’ (2:196) என்று கூறுகின்றான். நாம் நம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயல்படுவதெனில், நபி (ஸல்) குர்பானிப் பிராணிகளைப் பலியிடாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடுவதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

அபூஉமைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு பணி நிமித்தம்) என்னை யமன் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்கள். நான் சரியாக அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூமூஸா! நீர் இஹ்ராமின்போது எவ்வாறு (தல்பியா) சொன்னீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளார்களோ அதற்காகவே நான் இஹ்ராம் பூணுகின்றேன் என்று (தல்பியா) சொன்னேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “நீர் (உம்முடன்) ஏதேனும் பலிப் பிராணி கொண்டு வந்துள்ளீரா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். “அவ்வாறாயின், நீர் சென்று இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்க!” என்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.