அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 903

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ قُسَيْطٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ ‏:‏

أَنَّهُ سَأَلَ ‏ ‏زَيْدَ بْنَ ثَابِتٍ ‏ ‏عَنْ الْقِرَاءَةِ مَعَ الْإِمَامِ فَقَالَ لَا قِرَاءَةَ مَعَ الْإِمَامِ فِي شَيْءٍ وَزَعَمَ ‏ ‏أَنَّهُ قَرَأَ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالنَّجْمِ إِذَا هَوَى ‏ ‏فَلَمْ يَسْجُدْ

நான் ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் கிராஅத் ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “இமாமைப் பின்பற்றித் தொழுபவருக்கு ஓதுதல் (கிராஅத்) ஏதும் கிடையாது” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் கூறும்போது, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘வந்நஜ்மி இதா ஹவா’ (எனத் தொடங்கும் 53ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அதற்காக அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் தாபித் (ரலி) வழியாக அதாஉ பின் யஸார் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 902

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْأَسْوَدَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَرَأَ ‏ ‏وَالنَّجْمِ ‏ ‏فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ كَانَ مَعَهُ غَيْرَ أَنَّ ‏ ‏شَيْخًا ‏ ‏أَخَذَ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ وَقَالَ يَكْفِينِي هَذَا ‏


قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا

நபி (ஸல்) அந்நஜ்மு எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதியபின் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள்) அனைவரும் (நிலத்தில்) ஸஜ்தாச் செய்தனர். அங்கிருந்த ஒரு வயோதின் மட்டும் ஒரு கையளவு கூழாங்கற்களை/மண்ணை அள்ளித் தனது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, ‘இது எனக்குப் போதும்’ என்று (ஸஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு அ(க்கிழ)வன் இறைமறுப்பாளனாகவே (பத்ருப் போரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 901

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏:‏

عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏رُبَّمَا قَرَأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْقُرْآنَ فَيَمُرُّ بِالسَّجْدَةِ فَيَسْجُدُ بِنَا حَتَّى ازْدَحَمْنَا عِنْدَهُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَكَانًا لِيَسْجُدَ فِيهِ فِي غَيْرِ صَلَاةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சில நேரங்களில் குர்ஆன் ஓதி ஸஜ்தா வசனத்தைக் கடந்து செல்கையில் எங்களுடன் சேர்ந்து ஸஜ்தாச் செய்வார்கள். அப்போது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருசிலருக்கு ஸஜ்தாச் செய்யக்கூட இடம் கிடைக்காது. தொழுகை அல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 21, ஹதீஸ் எண்: 900

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى الْقَطَّانِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ الْقُرْآنَ فَيَقْرَأُ سُورَةً فِيهَا سَجْدَةٌ فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ حَتَّى مَا يَجِدُ بَعْضُنَا مَوْضِعًا لِمَكَانِ جَبْهَتِهِ

நபி (ஸல்) குர்ஆனை ஓதுவார்கள். ஸஜ்தா வசனமுள்ள அத்தியாயத்தை (எங்களுக்கு) ஓதிக் காட்டும்போது அவர்கள் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வார்கள். உடனே நாங்களும் சிரவணக்கம் செய்வோம். அப்போது (ஏற்படும் இட நெருக்கடியால்) எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கக்கூட இடம் கிடைக்காது.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 899

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ وَهُوَ الْحَذَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏قَالَ :‏

‏سَلَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ثَلَاثِ رَكَعَاتٍ مِنْ الْعَصْرِ ثُمَّ قَامَ فَدَخَلَ الْحُجْرَةَ فَقَامَ رَجُلٌ بَسِيطُ الْيَدَيْنِ فَقَالَ أَقُصِرَتْ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ فَخَرَجَ مُغْضَبًا فَصَلَّى الرَّكْعَةَ الَّتِي كَانَ تَرَكَ ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓர்) அஸ்ருத் தொழுகையில் மூன்று ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு எழுந்து (பள்ளியை ஒட்டியிருந்த) தமது அறைக்குள் சென்று விட்டார்கள். உடனே நீளமான கைகளை உடைய ஒருவர் (துல்யதைன்) எழுந்து, “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கோபத்தோடு வெளியே வந்தார்கள். விடுபட்ட ரக்அத்தைத் தொழுவித்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்கான) இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு (மீண்டும்) ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 898

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الْعَصْرَ فَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ ‏ ‏الْخِرْبَاقُ ‏ ‏وَكَانَ فِي يَدَيْهِ طُولٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَذَكَرَ لَهُ صَنِيعَهُ وَخَرَجَ غَضْبَانَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى انْتَهَى إِلَى النَّاسِ فَقَالَ أَصَدَقَ هَذَا قَالُوا نَعَمْ ‏ ‏فَصَلَّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓர்) அஸ்ருத் தொழுகையில் மூன்றாவது ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டு(ப் பள்ளியை ஒட்டியிருந்த) தமது இல்லத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். உடனே கிர்பாக் எனும் பெயருடைய, கைகள் நீளமான ஒருவர் (துல்யதைன்) எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! …” என்றழைத்து அவர்கள் செய்ததை நினைவூட்டினார். அப்போது கோபத்தோடு தமது மேல்துண்டை தரையில் இழுத்தபடி வெளியேறி வந்து சேர்ந்தார்கள். பிறகு “இவர் சொல்வது உண்மைதானா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். உடனே அவர்கள் இன்னொரு ரக்அத் தொழுவித்து ஸலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்காக) இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பிறகு (மீண்டும்) ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 897

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ أَبِي أَحْمَدَ ‏ ‏أَنَّهُ قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏‏

‏صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الْعَصْرِ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ فَقَامَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالَ أَقُصِرَتْ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ فَقَالَ قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى النَّاسِ فَقَالَ أَصَدَقَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَتَمَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا بَقِيَ مِنْ الصَّلَاةِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ التَّسْلِيمِ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ إِسْمَعِيلَ الْخَزَّازُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيٌّ وَهُوَ ابْنُ الْمُبَارَكِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى رَكْعَتَيْنِ مِنْ صَلَاةِ الظُّهْرِ ثُمَّ سَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقُصِرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ وَسَاقَ الْحَدِيثَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الظُّهْرِ سَلَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الرَّكْعَتَيْنِ فَقَامَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு அஸ்ருத் தொழுகையைத் தொழுவித்தபோது இரண்டு ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்து விட்டார்கள். உடனே துல்யதைன் (கிர்பாக் பின் அம்ரு – ரலி) என்பார் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத் ஏதேனும்) குறைக்கப்பட்டுவிட்டதா? நீங்கள்தாம் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவற்றில் எதுவுமே நடக்கவில்லை” என்று கூறினார்கள். துல்யதைன், “(இல்லை) இதில் ஏதோ ஒன்று நிகழ்ந்தது அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எஞ்சிய ரக்அத்களையும் தொழு(வித்)துவிட்டு அந்த இருப்பிலேயே ஸலாம் கொடுத்தபின் இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூஸலமா (ரலி) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ருத் தொழுகையின் இரண்டு ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். அப்போது பனூஸுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்) குறைக்கப்பட்டு விட்டதா? நீங்கள் மறந்துவிட்டீர்களா?’ என்று கேட்டார் …” என்று இடம்பெற்றுள்ளது.

உபைதுல்லாஹ் பின் மன்ஸூர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ருத் தொழுகை தொழுது கொண்டிருந்தேன். அவர்கள் இரண்டாவது ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். உடனே பனூஸுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) எழுந்தார் …” என்று அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 896

‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ سِيرِينَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِحْدَى صَلَاتَيْ ‏ ‏الْعَشِيِّ ‏ ‏إِمَّا الظُّهْرَ وَإِمَّا الْعَصْرَ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ ثُمَّ أَتَى ‏ ‏جِذْعًا ‏ ‏فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَاسْتَنَدَ إِلَيْهَا مُغْضَبًا وَفِي الْقَوْمِ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏فَهَابَا أَنْ يَتَكَلَّمَا وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ قُصِرَتْ الصَّلَاةُ فَقَامَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقُصِرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ فَنَظَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمِينًا وَشِمَالًا فَقَالَ مَا يَقُولُ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏قَالُوا صَدَقَ لَمْ تُصَلِّ إِلَّا رَكْعَتَيْنِ ‏ ‏فَصَلَّى رَكْعَتَيْنِ وَسَلَّمَ ثُمَّ كَبَّرَ ثُمَّ سَجَدَ ثُمَّ كَبَّرَ فَرَفَعَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ ثُمَّ كَبَّرَ وَرَفَعَ


‏قَالَ ‏ ‏وَأُخْبِرْتُ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏وَسَلَّمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِحْدَى صَلَاتَيْ ‏ ‏الْعَشِيِّ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றான லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஓர் ஈச்சமரக் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ரு (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல்பவர்கள் தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது என்று (சொல்லிக்கொண்டு) புறப்பட்டுச் சென்றும்விட்டனர்.

இந்நிலையில் துல்யதைன் (கிர்பாக் பின் அம்ரு) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? நீங்கள் மறந்துவிட்டீர்களா” என்று கேட்டார். உடனே நபி (ஸல்) வலப்பக்கமும் இடப்பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு, “துல்யதைன் என்ன சொல்கின்றார்?” என்று கேட்டார்கள். மக்கள், “(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். நீங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி மற்றொரு ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி) வழி அறிவிப்பில், “(இறுதியில்) ஸலாம் கொடுத்தார்கள்” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 895

‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏

‏صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِمَّا ‏ ‏زَادَ أَوْ نَقَصَ قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَايْمُ اللَّهِ مَا جَاءَ ذَاكَ إِلَّا مِنْ قِبَلِي ‏ ‏قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ فَقَالَ لَا قَالَ فَقُلْنَا لَهُ الَّذِي صَنَعَ فَقَالَ ‏ ‏إِذَا زَادَ الرَّجُلُ أَوْ نَقَصَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ قَالَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதோம். அப்போது அவர்கள் (ரக்அத்தைக்) கூட்டிவிட்டார்கள் அல்லது குறைத்துவிட்டார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதேனும் வந்துவிட்டதா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர்களிடம் அவர்கள் செய்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “ஒருவர் (தமது தொழுகையில்) கூட்டிவிட்டாலோ குறைத்துவிட்டாலோ அவர் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று சொல்லிவிட்டுப் பிறகு (தாம் மறந்துவிட்டதற்காக) இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு:

“அல்லாஹ்வின் மீதாணையாக! கூட்டினார்களா குறைத்தார்களா என்ற ஐயப்பாடு எனது தரப்பிலிருந்து ஏற்பட்டதேயாகும்” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்) கூறியுள்ளார்.

அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 894

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ بَعْدَ السَّلَامِ وَالْكَلَامِ

நபி (ஸல்) (தொழுது) ஸலாம் கொடுத்து (மக்களிடம்) பேசியபின் மறதிக்கான இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)