அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 833

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ :‏

رَكَعْتُ فَقُلْتُ بِيَدَيَّ هَكَذَا ‏ ‏يَعْنِي ‏ ‏طَبَّقَ ‏ ‏بِهِمَا وَوَضَعَهُمَا بَيْنَ فَخِذَيْهِ فَقَالَ ‏ ‏أَبِي ‏ ‏قَدْ ‏ ‏كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا بِالرُّكَبِ

நான் (தொழுகையில்) இவ்வாறு கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு ருகூஉச் செய்தபோது, என் தந்தை, “நாங்கள் (உன்போல்) இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அப் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 832

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يَعْفُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ :‏‏

‏صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي قَالَ وَجَعَلْتُ يَدَيَّ بَيْنَ رُكْبَتَيَّ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏أَبِي ‏ ‏اضْرِبْ بِكَفَّيْكَ عَلَى رُكْبَتَيْكَ قَالَ ثُمَّ فَعَلْتُ ذَلِكَ مَرَّةً أُخْرَى فَضَرَبَ يَدَيَّ وَقَالَ إِنَّا نُهِينَا عَنْ هَذَا وَأُمِرْنَا أَنْ نَضْرِبَ بِالْأَكُفِّ عَلَى الرُّكَبِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يَعْفُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ إِلَى قَوْلِهِ ‏ ‏فَنُهِينَا عَنْهُ وَلَمْ يَذْكُرَا مَا بَعْدَهُ

நான் என் தந்தையின் விலாப் புறத்தில் (நின்று) தொழுதேன். அப்போது நான் (ருகூஉவில்) என்னிரு கைகளையும் (கோத்து) என் இரு முழங்கால்களுக்கு நடுவே வைத்துக் கொள்ளலானேன். உடனே என் தந்தை, “உன் உள்ளங்கைகளை முழங்கால்கள் மீதுவை” என்று சொன்னார்கள். நான் மீண்டும் (முன்னர் செய்த) அவ்வாறே செய்தேன். அவர்கள் என் கைகள் மீது அடித்துவிட்டு, “இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கைகளை முழங்கால்கள்மீது வைக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அப் (ரஹ்)


குறிப்புகள் :

1. ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது” என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது.

2. தொடக்கக்காலத்தில், தொழுகையின் இடையிடையே ஒருவருக்கொருவர் கட்டாயங் கருதி பேசிக் கொண்டதாக அறிய முடிகிறது.

அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 831

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏إِسْرَائِيلَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏وَالْأَسْوَدِ ‏:‏

‏أَنَّهُمَا دَخَلَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَصَلَّى مَنْ خَلْفَكُمْ قَالَ نَعَمْ فَقَامَ بَيْنَهُمَا وَجَعَلَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ ثُمَّ رَكَعْنَا فَوَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا فَضَرَبَ أَيْدِيَنَا ثُمَّ ‏ ‏طَبَّقَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ ثُمَّ جَعَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ فَلَمَّا صَلَّى قَالَ هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

நாங்கள் இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “உங்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். நாங்கள் இருவரும், “ஆம்” என்றோம். அவர்கள் எங்கள் இருவருக்குமிடையே (தொழுவதற்காக) நின்றார்கள். எங்களில் ஒருவரைத் தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தினார்கள். பிறகு நாங்கள் ருகூஉச் செய்தபோது எங்கள் (உள்ளங்)கைகளை எங்களுடைய முழங்கால்மீது நாங்கள் வைத்தோம். உடனே அவர்கள் எங்கள் கைகளில் அடித்தார்கள். பிறகு தம்மிரு கைகளைக் கோத்துக் கொண்டு அவ்விரண்டையும் தம் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டார்கள். தொழுது முடித்ததும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) & அல்கமா (ரஹ்)


குறிப்பு :

ஹதீஸ் எண் 830இன் இரண்டாவது குறிப்பைக் காண்க.

அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 830

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ أَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَعَلْقَمَةَ ‏ ‏قَالَا ‏ ‏أَتَيْنَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ‏ ‏فِي دَارِهِ فَقَالَ :‏

أَصَلَّى هَؤُلَاءِ خَلْفَكُمْ فَقُلْنَا لَا قَالَ فَقُومُوا فَصَلُّوا فَلَمْ يَأْمُرْنَا بِأَذَانٍ وَلَا إِقَامَةٍ ‏قَالَ وَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ فَأَخَذَ بِأَيْدِينَا فَجَعَلَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ قَالَ فَلَمَّا رَكَعَ وَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا قَالَ فَضَرَبَ أَيْدِيَنَا وَطَبَّقَ بَيْنَ كَفَّيْهِ ثُمَّ أَدْخَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ قَالَ فَلَمَّا صَلَّى قَالَ ‏ ‏إِنَّهُ سَتَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مِيقَاتِهَا ‏ ‏وَيَخْنُقُونَهَا ‏ ‏إِلَى ‏ ‏شَرَقِ الْمَوْتَى ‏ ‏فَإِذَا رَأَيْتُمُوهُمْ قَدْ فَعَلُوا ذَلِكَ فَصَلُّوا الصَّلَاةَ لِمِيقَاتِهَا وَاجْعَلُوا صَلَاتَكُمْ مَعَهُمْ ‏ ‏سُبْحَةً ‏ ‏وَإِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَصَلُّوا جَمِيعًا وَإِذَا كُنْتُمْ أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ وَإِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيُفْرِشْ ذِرَاعَيْهِ عَلَى فَخِذَيْهِ ‏ ‏وَلْيَجْنَأْ ‏ ‏وَلْيُطَبِّقْ ‏ ‏بَيْنَ كَفَّيْهِ فَلَكَأَنِّي أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرَاهُمْ ‏


و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُفَضَّلٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏وَالْأَسْوَدِ ‏ ‏أَنَّهُمَا دَخَلَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏وَجَرِيرٍ ‏ ‏فَلَكَأَنِّي أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ رَاكِعٌ

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லத்திற்குச் சென்றபோது, “உங்களுக்குப் பின்நின்று (உரிய நேரத்தில் ஆளும் வர்க்கத்தினரான) அவர்கள் தொழுகின்றனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை” என்று பதிலளித்தோம். அவர்கள், “நீங்கள் (இருவரும்) எழுந்து (என்னைப் பின்பற்றித்) தொழுங்கள்” என்று கூறினார்கள். (பாங்கு சொல்லப்பட்டுவிட்டதால்) அவர்கள் பாங்கு சொல்லும்படியோ இகாமத் சொல்லும்படியோ எங்களிடம் கூறவில்லை. நாங்கள் (இருவரும்) அவர்களுக்குப் பின்னால் நிற்கப்போனோம். உடனே அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து எங்களில் ஒருவரைத் தமது வலப்பக்கத்திலும் மற்றொருவரை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்கள்.

அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்கள் எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைத்(து ருகூஉச் செய்)தோம். உடனே அவர்கள் எங்கள் கைகள் மீது அடித்துவிட்டு தம்மிரு உள்ளங்கைகளையும் ஒட்டி, தம் தொடைகளின் நடுவே நுழைத்துக் கொண்டார்கள்.

தொழுது முடித்ததும், “விரைவில் உங்களுக்குத் தலைவர்களாகச் சிலர் வருவார்கள். அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தி, கடைசி நேரத்தில் நிறைவேற்றுவார்கள். அவ்வாறு செய்பவர்களை நீங்கள் காணும்போது, உரிய நேரத்தில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிடுங்கள். அவர்களுடன் (மீண்டும்) தொழுவதைக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேர் இருந்தால் (ஒரே அணியில்) இணைந்து தொழுங்கள். அதைவிட அதிகம் பேர் இருந்தால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். உங்களில் ஒருவர் ருகூஉச் செய்யும்போது தம் முழங்கைகளைத் தொடைகளின் மீது சாத்திக் கொண்டு குனிந்து நிற்கட்டும். அவர் தம் உள்ளங்கைகளைச் சேர்த்து, இரு தொடைகளுக்கு இடையே வைத்துக் கொள்ளட்டும். ஏனெனில், (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழும்போது ருகூஉவில்) தம் விரல்களை ஒன்றோடொன்று ஒட்டி வைத்தது இப்போதும் என் கண்முன்னே நிற்கிறது” என்று கூறிவிட்டு அவ்வாறு ஒட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) & அல்கமா (ரஹ்)


குறிப்புகள் :

1. இப்னு முஸ்ஹிர்(ரஹ்), ஜரீர் (ரஹ்) ஆகிய இருவரது அறிவிப்புகளில், “…ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ருகூஉச் செய்து கொண்டிருந்தபோது அவர்களுடைய விரல்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தது இப்போதும் என் கண் முன்னே நிற்கிறது” என்று இப்னு மஸ்ஊது (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

2. ருகூஉவில் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும் முறை தொழுகையின் தொடக்கத்தில் இருந்திருக்கிறது. பின்னர் அம்முறை மாற்றப்பட்டு, (இப்போது வழக்கிலுள்ள) முழங்காலில் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. மேற்காணும் நிகழ்வு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது தெளிவாகத் தெரிகின்றது. ருகூஉவில் உள்ளங்கைகளை முழங்காலில் வைக்கும் முறை, நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரல்) அவர்களுக்கு மேற்காணும் நிகழ்வுவரை எத்தி வைக்கப்படாமல் இருந்திருப்பது புலனாகிறது.

அத்தியாயம்: 5, பாடம்: 05, ஹதீஸ் எண்: 829

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏مَحْمُودِ بْنِ لَبِيد : دٍ

‏أَنَّ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏أَرَادَ بِنَاءَ الْمَسْجِدِ فَكَرِهَ النَّاسُ ذَلِكَ فَأَحَبُّوا أَنْ يَدَعَهُ عَلَى هَيْئَتِهِ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ بَنَى اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ ‏

உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி), (தம் ஆட்சியின்போது) மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலை(விரிவு படுத்தி)க் கட்டத் திட்டமிட்டபோது அதை மக்கள் வெறுத்தனர்; இருக்கும் அமைப்பிலேயே விட்டுவிட வேண்டும் என்று விரும்பினர். அப்போது உஸ்மான் (ரலி), “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக மஹ்மூது பின் லபீத் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 05, ஹதீஸ் எண்: 828

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏بُكَيْرًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عُبَيْدَ اللَّهِ الْخَوْلَانِيَّ : ‏

‏يَذْكُرُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى ‏ ‏مَسْجِدَ الرَّسُولِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّكُمْ قَدْ أَكْثَرْتُمْ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ تَعَالَى ‏ ‏قَالَ ‏ ‏بُكَيْرٌ ‏ ‏حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ ‏ ‏بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ‏


‏ابْنُ عِيسَى ‏ ‏فِي رِوَايَتِهِ مِثْلَهُ فِي الْجَنَّةِ

உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி), (தம் ஆட்சியின்போது) மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலை(விரிவு படுத்தி)க் கட்டத் திட்டமிட்டபோது அதற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்துப் பலவாறு பேசினர். அப்போது அம்மக்களிடம் உஸ்மான் (ரலி), “நீங்கள் அதிகம் பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வுக்காக – அல்லாஹ்வின் உவப்பைநாடி – பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுபவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் அல்ஹவ்லானீ (ரஹ்)


குறிப்பு :

அஹ்மத் பின் ஈஸா (ரஹ்) வழி அறிவிப்பில், “… அதைப் போன்ற ஒன்றை, சொர்க்கத்தில் அல்லாஹ் அவருக்காகக் கட்டுகின்றான்” என்று நபி (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 827

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ النَّجْرَانِيِّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏جُنْدَبٌ ‏قَالَ :  ‏

سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ وَهُوَ يَقُولُ ‏ ‏إِنِّي أَبْرَأُ إِلَى اللَّهِ أَنْ يَكُونَ لِي ‏ ‏مِنْكُمْ ‏ ‏خَلِيلٌ ‏ ‏فَإِنَّ اللَّهَ تَعَالَى قَدْ اتَّخَذَنِي ‏ ‏خَلِيلًا ‏ ‏كَمَا اتَّخَذَ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏خَلِيلًا ‏ ‏وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي ‏ ‏خَلِيلًا ‏ ‏لَاتَّخَذْتُ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏خَلِيلًا ‏ ‏أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ إِنِّي ‏ ‏أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ

நபி (ஸல்) இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “உங்களில் ஒருவர் என் அணுக்கத் தோழராகத் திகழ்வதிலிருந்து நான் (இப்போது) விலகி, அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) அணுக்கத் தோழராக ஆக்கிக் கொண்டதைப் போன்று என்னையும் (தன்) அணுக்கத் தோழனாக ஆக்கிக் கொண்டான். என் சமுதாயத்தவருள் ஒருவரை என் உற்ற தோழராக நான் ஆக்கிக் கொள்வதாக இருப்பின் அவர் அபூபக்ருதான். எச்சரிக்கை! உங்களுக்கு முன்னிருந்த(சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள், நற்குணங் கொண்டோரின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்துவிட வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 826

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏قَالَا :‏ 

‏لَمَّا نُزِلَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏طَفِقَ ‏ ‏يَطْرَحُ ‏ ‏خَمِيصَةً ‏ ‏لَهُ عَلَى وَجْهِهِ فَإِذَا ‏ ‏اغْتَمَّ ‏ ‏كَشَفَهَا عَنْ وَجْهِهِ فَقَالَ وَهُوَ كَذَلِكَ ‏ ‏لَعْنَةُ اللَّهِ عَلَى ‏ ‏الْيَهُودِ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مِثْلَ مَا صَنَعُوا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அந்த நிலையிலும், “தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” என்று அவர்கள் செய்த(பாவத்)தைக் குறித்து (முஸ்லிம்களை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) & இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 825

و حَدَّثَنِي ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَزَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَصَمِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ الْأَصَمِّ أَبِو هُرَيْرَةَ قَالَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَعَنَ اللَّهُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ

“தங்களுடைய நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 824

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏وَمَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَاتَلَ اللَّهُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ

“தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி