அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 823

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالِ بْنِ أَبِي حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ ‏ ‏لَعَنَ اللَّهُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ قَالَتْ فَلَوْلَا ذَاكَ أُبْرِزَ قَبْرُهُ غَيْرَ أَنَّهُ خُشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏وَلَوْلَا ذَاكَ لَمْ يَذْكُرْ قَالَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து) போய்விட்டார்களோ அந்த நோயின்போது, “தங்களுடைய நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும்!” என்று கூறினார்கள்.
அந்த அறிவிப்பு (எச்சரிக்கை மட்டும்) இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத் தலம் திறந்தவெளியில் விடப்பட்டிருக்கும். ஏனெனில், அவர்களது அடக்கத் தலம் (பிற்பாடு) வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப்பட்டது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இப்னு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு குறிப்பிடாமல் (எச்சரிக்காமல்) இருந்திருந்தால் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 822

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ :‏

‏أَنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ ‏ ‏وَأُمَّ سَلَمَةَ ‏ ‏ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا ‏ ‏بِالْحَبَشَةِ ‏ ‏فِيهَا تَصَاوِيرُ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أُولَئِكِ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكِ الصُّوَرَ أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهُمْ تَذَاكَرُوا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي مَرَضِهِ فَذَكَرَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏وَأُمُّ حَبِيبَةَ ‏ ‏كَنِيسَةً ثُمَّ ‏ ‏ذَكَرَ نَحْوَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏ذَكَرْنَ أَزْوَاجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ ‏ ‏الْحَبَشَةِ ‏ ‏يُقَالُ لَهَا ‏ ‏مَارِيَةُ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمْ ‏

அன்னையர் உம்முஹைபீபா (ரலி), உம்முஸலமா (ரலி) ஆகிய இருவரும் (முதலாவது புலப்பெயர்வின்போது) அபிஸீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தங்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிட்டால், அவருடைய சமாதியின்மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி, அதில் உருவங்களையும் வரைந்து விடுவர். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகத் தீயவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) தம் தந்தை வழியாக அறிவிப்பதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உடல் நலிவுற்று (தம் இறுதிநாட்களில்) இருந்தபோது அவர்களிடம் மக்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உம்முஸலமா (ரலி) அவர்களும் உம்முஹபீபா (ரலி) அவர்களும் (தாங்கள் கண்ட) கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) தொடங்கியதாக இடம்பெற்றுள்ளது.

அபூ குரைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி மனைவியர் (இருவர்) அபிஸீனியாவில் தாங்கள் கண்ட ‘மாரியா’ என்று பெயர் வழங்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டனர் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) தொடங்கியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 821

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي نَحْوَ ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏فَنَزَلَتْ “‏قَدْ نَرَى ‏ ‏تَقَلُّبَ ‏ ‏وَجْهِكَ فِي السَّمَاءِ ‏ ‏فَلَنُوَلِّيَنَّكَ ‏ ‏قِبْلَةً تَرْضَاهَا ‏ ‏فَوَلِّ ‏ ‏وَجْهَكَ ‏ ‏شَطْرَ ‏ ‏الْمَسْجِدِ الْحَرَامِ” ‏فَمَرَّ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي سَلِمَةَ ‏ ‏وَهُمْ رُكُوعٌ فِي صَلَاةِ الْفَجْرِ وَقَدْ صَلَّوْا رَكْعَةً فَنَادَى أَلَا إِنَّ الْقِبْلَةَ قَدْ حُوِّلَتْ فَمَالُوا كَمَا هُمْ نَحْوَ الْقِبْلَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது, “(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் நோக்கித் திருப்புங்கள்” எனும் (2:144ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. பனூஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் (எங்களுடன் தொழுதுவிட்டுத்) தமது குலத்தாரிடம் சென்றார். அப்போது அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையின் முதல் ரக்அத்தைத் தொழுதுவிட்டு (இரண்டாவது ரக்அத்தின்) ருகூஉவில் இருந்தபோது, “அறிந்து கொள்ளுங்கள்! இந்தக் கிப்லா மாற்றப்பட்டுவிட்டது” என்று உரத்த குரலில் அவர் அறிவித்தார். உடனே அம்மக்கள் தொழுகையிலிருந்தவாறு அப்படியே (கஅபா எனும் தற்போதைய) இந்தக் கிப்லாவை நோக்கித் திரும்பிக் கொண்டனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 820

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏قَالَ :‏

بَيْنَمَا النَّاسُ فِي صَلَاةِ الصُّبْحِ ‏ ‏بِقُبَاءٍ ‏ ‏إِذْ جَاءَهُمْ ‏ ‏آتٍ ‏ ‏فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏فَاسْتَقْبَلُوهَا وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى ‏ ‏الشَّامِ ‏ ‏فَاسْتَدَارُوا إِلَى ‏ ‏الْكَعْبَةِ ‏


‏حَدَّثَنِي ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏وَعَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَمَا النَّاسُ فِي صَلَاةِ ‏ ‏الْغَدَاةِ ‏ ‏إِذْ جَاءَهُمْ رَجُلٌ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ

மக்கள் குபாவில் ஸுப்ஹுத் தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “நேற்றிரா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறைவசனம் அருளப்பெற்றுள்ளார்கள். (அதில் தொழுகைக்கு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுங்கள்” என்று அறிவித்தார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 819

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏يَقُولُ : ‏

صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏سِتَّةَ عَشَرَ شَهْرًا أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا ثُمَّ صُرِفْنَا نَحْوَ ‏ ‏الْكَعْبَةِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு/பதினேழு மாதங்கள் தொழுதோம். பிறகு நாங்கள் கஅபா திசை நோக்கித் திருப்பப்பட்டோம்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபூ இஸ்ஹாக் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 818

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ :‏

صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏سِتَّةَ عَشَرَ شَهْرًا حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي فِي ‏ ‏الْبَقَرَةِ ‏” ‏وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ ‏ ‏شَطْرَهُ “‏

‏فَنَزَلَتْ بَعْدَمَا صَلَّى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْطَلَقَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ الْقَوْمِ فَمَرَّ بِنَاسٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَهُمْ يُصَلُّونَ فَحَدَّثَهُمْ ‏ ‏فَوَلَّوْا ‏ ‏وُجُوهَهُمْ ‏ ‏قِبَلَ ‏ ‏الْبَيْتِ ‏

“நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது) உங்கள் முகங்களை  அந்த(க் கஅபா)ப் பக்கமே திருப்பிக்கொள்ளுங்கள்” எனும் அல்பகரா அத்தியாயத்திலுள்ள (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை, நபி (ஸல்) அவர்களுடன் நான் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதிருக்கின்றேன். நபி (ஸல்) (ஒரு) தொழுகையை முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப்பெற்றது. (எங்களுடன் தொழுத) மக்களில் ஒருவர், (பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அன்ஸாரிகளில் சிலரைக் கடந்து சென்று (தொழும் திசை மாற்றப்பட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக் கொண்டனர்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 02, ஹதீஸ் எண்: 817

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو التَّيَّاحِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي فِي ‏ ‏مَرَابِضِ ‏ ‏الْغَنَمِ قَبْلَ أَنْ ‏ ‏يُبْنَى الْمَسْجِدُ ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னர் ஆட்டுத் தொழுவங்களில் தொழுதிருக்கின்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக அபுத்தய்யாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 02, ஹதீஸ் எண்: 816

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَنَزَلَ فِي عُلْوِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فِي حَيٍّ يُقَالُ لَهُمْ ‏ ‏بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ ‏ ‏فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً ثُمَّ إِنَّهُ أَرْسَلَ إِلَى مَلَإِ ‏ ‏بَنِي النَّجَّارِ ‏ ‏فَجَاءُوا مُتَقَلِّدِينَ بِسُيُوفِهِمْ قَالَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏رِدْفُهُ ‏ ‏وَمَلَأُ ‏ ‏بَنِي النَّجَّارِ ‏ ‏حَوْلَهُ حَتَّى أَلْقَى ‏ ‏بِفِنَاءِ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ وَيُصَلِّي فِي ‏ ‏مَرَابِضِ ‏ ‏الْغَنَمِ ثُمَّ إِنَّهُ أَمَرَ بِالْمَسْجِدِ قَالَ فَأَرْسَلَ إِلَى مَلَإِ ‏ ‏بَنِي النَّجَّارِ ‏ ‏فَجَاءُوا فَقَالَ يَا ‏ ‏بَنِي النَّجَّارِ ‏ ‏ثَامِنُونِي ‏ ‏بِحَائِطِكُمْ ‏ ‏هَذَا قَالُوا لَا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏فَكَانَ فِيهِ مَا أَقُولُ كَانَ فِيهِ نَخْلٌ وَقُبُورُ الْمُشْرِكِينَ وَخِرَبٌ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالنَّخْلِ فَقُطِعَ وَبِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ وَبِالْخِرَبِ فَسُوِّيَتْ قَالَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةً وَجَعَلُوا ‏ ‏عِضَادَتَيْهِ ‏ ‏حِجَارَةً قَالَ فَكَانُوا ‏ ‏يَرْتَجِزُونَ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَعَهُمْ وَهُمْ يَقُولُونَ : ‏
اللَّهُمَّ إِنَّهُ لَا خَيْرَ إِلَّا خَيْرُ ‏ ‏الْآخِرَهْ ‏
‏فَانْصُرْ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏وَالْمُهَاجِرَهْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (புலம்பெயர்ந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப் பாங்கான பகுதியில், பனூஅம்ரு பின் அவ்ஃப் என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடையே பதிநான்கு நாள்கள் தங்கினார்கள். பிறகு பனூநஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தார் தம் வாட்களைக் கழுத்தில் தொங்கவிட்டபடி (நபியவர்களைக் கண்ணியப் படுத்தி) வந்து சேர்ந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகன(ஒட்டக)த்தில் அமர்ந்துவர, அவர்களுக்குப் பின்னால் அபூபக்ரு (ரலி) அமர்ந்திருக்க, பனூநஜ்ஜார் கூட்டத்தார் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் வந்த அந்தக் காட்சியை இப்போதும் நான் என் மனக்கண்ணால் காண்கின்றேன். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கிவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகை நேரம் வந்தடையும் இடத்திலேயே தொழுகையை நிறைவேற்றுவது வழக்கம் – அது, ஆட்டுத் தொழுவமாக இருந்தாலும். இந்நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டதும் பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்துவரச் சொல்லி) ஆளனுப்பியதும். அவர்கள் வந்து சேர்ந்தபோது, “பனூநஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்தை எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அக்கூட்டத்தார், “இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே வேண்டுவோம்” என்று கூறி(அத்தோட்டத்தை அளித்த)னர்.

நான் (உங்களிடம்) கூறவிருப்பவைதாம் அத்தோட்டத்தில் இருந்தன. சில பேரீச்ச மரங்களும் இணைவைப்பாளர்களின் சமாதிகளும் இடிபாடுகளும்தாம் அதில் இருந்தன. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பள்ளிவாசல் கட்டும்போது அங்கிருந்த) பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. இணைவைப்பாளர்களின் சமாதிகளைத் தோண்டி(அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட, அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றி)ச் சமப்படுத்தும்படி உத்தரவிட, அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன.

பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக (மக்கள்) நட்டனர்.

பள்ளிவாசலின் (நுழைவாயிலின்) இரு நிலைக்கால்களாகக் கல்லை (நட்டு) வைக்கும்போது,

“இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை என்பதில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்) அன்ஸார்களுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி செய்வாயாக!”
என்று ’ரஜ்ஸு’ எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டிருந்தனர்:

அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (பாடியபடி பணியில் ஈடுபட்டுக் கொண்டு) இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 815

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا :‏

وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُصِرْتُ بِالرُّعْبِ وَأُوتِيتُ ‏ ‏جَوَامِعَ الْكَلِمِ ‏

“நான் (எதிரிகளிடம் ஏற்படும்) அச்சத்தால் உதவியளிக்கப்பட்டுள்ளேன். செறிவான சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 814

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏نُصِرْتُ بِالرُّعْبِ عَلَى الْعَدُوِّ وَأُوتِيتُ ‏ ‏جَوَامِعَ الْكَلِمِ ‏ ‏وَبَيْنَمَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الْأَرْضِ فَوُضِعَتْ فِي يَدَيَّ ‏

“நான் எதிரிகளிடம் ஏற்படும் அச்சத்தால் உதவியளிக்கப்பட்டுள்ளேன். செறிவான சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். நான் (ஒரு முறை) உறங்கிக் கொண்டிருக்கும்போது பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என் கரங்களில் வைக்கப்பட்டன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)