அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 483

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏وَكَانَتْ تَحْتَ ‏ ‏الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ:‏

‏أَخْبَرَتْهَا أَنَّهَا كَانَتْ ‏ ‏تَغْتَسِلُ هِيَ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي إِنَاءٍ وَاحِدٍ يَسَعُ ثَلَاثَةَ ‏ ‏أَمْدَادٍ ‏ ‏أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ ‏

நானும் நபி (ஸல்) அவர்களும் ஏறத்தாழ மூன்று முத் அளவுள்ள பாத்திர நீரில் குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஹஃப்ஸா பின்த்தி அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 482

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏:‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏اغْتَسَلَ بَدَأَ بِيَمِينِهِ فَصَبَّ عَلَيْهَا مِنْ الْمَاءِ فَغَسَلَهَا ثُمَّ صَبَّ الْمَاءَ عَلَى ‏ ‏الْأَذَى ‏ ‏الَّذِي بِهِ بِيَمِينِهِ وَغَسَلَ عَنْهُ بِشِمَالِهِ حَتَّى إِذَا فَرَغَ مِنْ ذَلِكَ صَبَّ عَلَى رَأْسِهِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَنَحْنُ جُنُبَانِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குளிக்கும்போது முதலில் தம் (உடலின்) வலப்பக்கத்தில் தண்ணீர் ஊற்றிக் கழுவுவார்கள். பிறகு தம் இனஉறுப்பின் மீது வலக்கரத்தால் தண்ணீர் ஊற்றி, இடக்கரத்தால் அதை(த் தேய்த்து)க் கழுவுவார்கள். இவற்றைச் செய்து முடித்துவிட்ட பின்னரே தலைக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் போது ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 481

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ :‏ ‏

‏دَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَا وَأَخُوهَا مِنْ الرَّضَاعَةِ فَسَأَلَهَا عَنْ غُسْلِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْجَنَابَةِ ‏ ‏فَدَعَتْ بِإِنَاءٍ قَدْرِ الصَّاعِ فَاغْتَسَلَتْ وَبَيْنَنَا وَبَيْنَهَا سِتْرٌ وَأَفْرَغَتْ عَلَى رَأْسِهَا ثَلَاثًا قَالَ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ ‏ ‏كَالْوَفْرَةِ ‏

நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அன்னையின் பால்குடிச் சகோதரர், நபி (ஸல்) பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரையிட்ட நிலையில் ஆயிஷா (ரலி) ஒரு ‘ஸாஉ’ அளவுள்ள பாத்திரத்தில் நீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்துக் காட்டினார்கள். தமது தலை மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள் (சைகை மூலம் அது எங்களுக்குத் தெரிந்தது).

நபி (ஸல்) அவர்களின் துணைவியர், தலையிலிருந்து காதின் சோனை வரை தொங்கும் அளவிற்குத் தம் தலை முடியைக் குறைத்து(அமைத்து)க் கொள்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பாளர் : அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 480

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْتَسِلُ فِي الْقَدَحِ ‏ ‏وَهُوَ الْفَرَقُ ‏ ‏وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَهُوَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ ‏


‏وَفِي حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏ ‏مِنْ إِنَاءٍ وَاحِدٍ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏وَالْفَرَقُ ثَلَاثَةُ ‏ ‏آصُعٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு *‘ஃபரக்’ கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். நானும் அவர்களும் ஒரே பாத்திரத்தில் (நீரள்ளிக்) குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).


குறிப்புகள் :

ஸுப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒரே பாத்திரத்திலிருந்து (நீரள்ளிக்) குளிப்போம்” என்றும் “ஒரு *ஃபரக் என்பது மூன்று ஸாஉ கொள்ளளவாகும்” என்றும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

*ஒரு ஃபரக் என்பது என்பது ஏறத்தாழ 6.5 லிட்டர்.

முகத்தல் அளவை பற்றிய தோராயக் குறிப்புகள்:
1 முத் = 544 கிராம்
1 ஸாஉ = 4 முத்கள் * 544 = 2176 கிராம்
1 வஸக் = 60 ஸாஉகள் * 2176 = 130560 கிராம் (அ) 130கி. 560 கிராம்.

அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 479

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ هُوَ ‏ ‏الْفَرَقُ ‏ ‏مِنْ الْجَنَابَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்கிற்காக ஒரு *‘ஃபரக்’ கொள்ளளவு பாத்திரத்தில் குளிப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)


குறிப்பு :

*ஒரு ஃபரக் என்பது தற்கால அளவின்படி ஏறத்தாழ ஏழு லிட்டர் ஆகும்.

அத்தியாயம்: 3, பாடம்: 09, ஹதீஸ் எண்: 478

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ دَعَا بِشَيْءٍ نَحْوَ الْحِلَابِ فَأَخَذَ بِكَفِّهِ بَدَأَ بِشِقِّ رَأْسِهِ الْأَيْمَنِ ثُمَّ الْأَيْسَرِ ثُمَّ أَخَذَ بِكَفَّيْهِ فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்கிற்காகக் குளிப்பார்களானால் பால் கறக்கும் குவளை போன்ற ஒரு குவளையைக் கொண்டு வரச்சொல்லி, ஒரு கையால் தண்ணீர் அள்ளி முதலில் தமது தலையின் வலப்பக்கத்திலும் பிறகு இடப்பக்கத்திலும் ஊற்றுவார்கள். பின்னர் இரு கைகளால் தண்ணீரை அள்ளித் தமது தலையின் மீது ஊற்றுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 09, ஹதீஸ் எண்: 477

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُتِيَ بِمِنْدِيلٍ فَلَمْ يَمَسَّهُ وَجَعَلَ يَقُولُ بِالْمَاءِ هَكَذَا ‏ ‏يَعْنِي يَنْفُضُهُ ‏

நபி (ஸல்) அவர்களிடம் துவாலை தரப்பட்டது. ஆனால், அவர்கள் அதைத் தொடவில்லை. தண்ணீரைத் தமது கரத்தால் வழித்து உதறி விடலானார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி) வழியாக இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 09, ஹதீஸ் எண்: 476

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ حَدَّثَتْنِي ‏ ‏خَالَتِي ‏ ‏مَيْمُونَةُ ‏ ‏قَالَتْ ‏:‏

‏أَدْنَيْتُ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غُسْلَهُ مِنْ الْجَنَابَةِ ‏ ‏فَغَسَلَ كَفَّيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ ثُمَّ أَفْرَغَ بِهِ عَلَى فَرْجِهِ وَغَسَلَهُ بِشِمَالِهِ ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ الْأَرْضَ فَدَلَكَهَا دَلْكًا شَدِيدًا ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَفَنَاتٍ مِلْءَ كَفِّهِ ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ ثُمَّ تَنَحَّى عَنْ مَقَامِهِ ذَلِكَ فَغَسَلَ رِجْلَيْهِ ثُمَّ أَتَيْتُهُ بِالْمِنْدِيلِ فَرَدَّهُ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَالْأَشَجُّ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِهِمَا إِفْرَاغُ ثَلَاثِ حَفَنَاتٍ عَلَى الرَّأْسِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏وَصْفُ الْوُضُوءِ كُلِّهِ يَذْكُرُ الْمَضْمَضَةَ ‏ ‏وَالِاسْتِنْشَاقَ فِيهِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏ذِكْرُ الْمِنْدِيلِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்கிற்குக் குளிப்பதற்காக நீர் கொண்டு வந்து வைத்தேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டு வரை) இரண்டு/மூன்று தடவை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் கையை நுழைத்து (தண்ணீரை அள்ளி) இன உறுப்பின் மீது ஊற்றி, தமது இடக்கையால் கழுவினார்கள். பிறகு தமது இடைக்கையைத் தரையில் தேய்த்துக் கழுவிக் கொண்டார்கள். பின்னர் தொழுகைக்குச் செய்வதைப் போன்று உளூச் செய்தார்கள். பிறகு தம் கைகள் நிரம்ப மூன்று முறை தண்ணீர் அள்ளித் தமது தலையில் ஊற்றினார்கள். பின்னர் மேனி முழுவதையும் கழுவினார்கள். பிறகு அங்கிருந்து சற்று நகர்ந்து (நின்று) தம் கால்களைக் கழுவினார்கள். (துடைத்துக் கொள்வதற்கு) நான் அவர்களுக்காகத் துவாலையைக் கொண்டு வந்தேன். ஆனால், அவர்கள் அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி) வழியாக இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்புகளில் “மூன்று முறை கை நிரம்ப தலைக்குத் தண்ணீர் ஊற்றியது” பற்றிய சொற்கள் இடம் பெறவில்லை. வகீஉ (ரஹ்) அறிவிப்பில், வாய் கொப்பளித்தது, மூக்குக்கு நீர் செலுத்தியது உட்பட உளூச் செய்த முறை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. அபூ முஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், துவாலை பற்றிய குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 3, பாடம்: 09, ஹதீஸ் எண்: 475

و حَدَّثَنَاه ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا ‏ ‏اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَ يَدَهُ فِي الْإِنَاءِ ثُمَّ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِهِ لِلصَّلَاةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது தம் கைகளை பாத்திரத்திற்குள் இடுவதற்கு முன்னர் (மணிக்கட்டு வரை) கழுவிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பின்னர் தொழுகைக்காக செய்வதைப் போன்று உளூச் செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 09, ஹதீஸ் எண்: 474

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ يَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ ثُمَّ يُفْرِغُ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ فَيَغْسِلُ فَرْجَهُ ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ يَأْخُذُ الْمَاءَ فَيُدْخِلُ أَصَابِعَهُ فِي ‏ ‏أُصُولِ ‏ ‏الشَّعْرِ حَتَّى إِذَا رَأَى أَنْ قَدْ ‏ ‏اسْتَبْرَأَ ‏ ‏حَفَنَ ‏ ‏عَلَى رَأْسِهِ ثَلَاثَ ‏ ‏حَفَنَاتٍ ‏ ‏ثُمَّ ‏ ‏أَفَاضَ ‏ ‏عَلَى سَائِرِ جَسَدِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِهِمْ غَسْلُ الرِّجْلَيْنِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ فَبَدَأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ غَسْلَ الرِّجْلَيْنِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்கிற்கானக் குளியலை, முதலில் தம் கைகளை(மணிக்கட்டு வரை) கழுவித் தொடங்குவார்கள். பிறகு வலக்கையால் (தண்ணீர் அள்ளி) இடக்கையின் மீது ஊற்றி மறையுறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக செய்வதைப் போன்று உளூச் செய்வார்கள். அதன் பின்னர் தண்ணீரை அள்ளி அள்ளித் தலையின் மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழைத்துத் தேய்ப்பார்கள். தலைமுடி முழுவதும் நனைந்து விட்டது உறுதியானதும் இரு கைகளாலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளித் தலையில் ஊற்றுவார்கள். பிறகு உடல் முழுவதிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் கால்களைக் கழுவுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூ குரைப் (ரஹ்) அறிவிப்பில், கால்களைக் கழுவியது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்கிற்கானக் குளியலை, முதலில் தம் கைகளை(மணிக்கட்டு வரை) மூன்று முறை கழுவித் தொடங்குவார்கள் …” எனத் தடவைகள் குறிப்பிடப்படுகின்றது. இறுதியில் கால்களைக் கழுவியது பற்றிய குறிப்பு இதிலும் இடம் பெறவில்லை.