அத்தியாயம்: 3, பாடம்: 08, ஹதீஸ் எண்: 473

حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو تَوْبَةَ وَهُوَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدٍ ‏ ‏يَعْنِي أَخَاهُ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو أَسْمَاءَ الرَّحَبِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏:‏

‏كُنْتُ قَائِمًا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَجَاءَ ‏ ‏حِبْرٌ ‏ ‏مِنْ ‏ ‏أَحْبَارِ ‏ ‏الْيَهُودِ ‏ ‏فَقَالَ السَّلَامُ عَلَيْكَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏فَدَفَعْتُهُ دَفْعَةً كَادَ يُصْرَعُ مِنْهَا فَقَالَ لِمَ تَدْفَعُنِي فَقُلْتُ أَلَا تَقُولُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ الْيَهُودِيُّ إِنَّمَا نَدْعُوهُ بِاسْمِهِ الَّذِي سَمَّاهُ بِهِ أَهْلُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اسْمِي ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏الَّذِي سَمَّانِي بِهِ أَهْلِي فَقَالَ الْيَهُودِيُّ جِئْتُ أَسْأَلُكَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيَنْفَعُكَ شَيْءٌ إِنْ حَدَّثْتُكَ قَالَ أَسْمَعُ بِأُذُنَيَّ ‏ ‏فَنَكَتَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِعُودٍ مَعَهُ فَقَالَ سَلْ فَقَالَ الْيَهُودِيُّ أَيْنَ يَكُونُ النَّاسُ [ ‏‏يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَوَاتُ] ‏‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هُمْ فِي الظُّلْمَةِ دُونَ ‏ ‏الْجِسْرِ ‏ ‏قَالَ فَمَنْ أَوَّلُ النَّاسِ ‏ ‏إِجَازَةً ‏ ‏قَالَ فُقَرَاءُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏قَالَ الْيَهُودِيُّ فَمَا ‏ ‏تُحْفَتُهُمْ ‏ ‏حِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ قَالَ زِيَادَةُ كَبِدِ ‏ ‏النُّونِ ‏ ‏قَالَ فَمَا غِذَاؤُهُمْ عَلَى ‏ ‏إِثْرِهَا ‏ ‏قَالَ يُنْحَرُ لَهُمْ ثَوْرُ الْجَنَّةِ الَّذِي كَانَ يَأْكُلُ مِنْ أَطْرَافِهَا قَالَ فَمَا شَرَابُهُمْ عَلَيْهِ قَالَ مِنْ عَيْنٍ فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا قَالَ صَدَقْتَ قَالَ وَجِئْتُ أَسْأَلُكَ عَنْ شَيْءٍ لَا يَعْلَمُهُ أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ إِلَّا نَبِيٌّ أَوْ رَجُلٌ أَوْ رَجُلَانِ قَالَ يَنْفَعُكَ إِنْ حَدَّثْتُكَ قَالَ أَسْمَعُ بِأُذُنَيَّ قَالَ جِئْتُ أَسْأَلُكَ عَنْ الْوَلَدِ قَالَ مَاءُ الرَّجُلِ أَبْيَضُ وَمَاءُ الْمَرْأَةِ أَصْفَرُ فَإِذَا اجْتَمَعَا فَعَلَا مَنِيُّ الرَّجُلِ مَنِيَّ الْمَرْأَةِ أَذْكَرَا بِإِذْنِ اللَّهِ وَإِذَا عَلَا مَنِيُّ الْمَرْأَةِ مَنِيَّ الرَّجُلِ آنَثَا بِإِذْنِ اللَّهِ قَالَ الْيَهُودِيُّ لَقَدْ صَدَقْتَ وَإِنَّكَ لَنَبِيٌّ ثُمَّ انْصَرَفَ فَذَهَبَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَدْ سَأَلَنِي هَذَا عَنْ الَّذِي سَأَلَنِي عَنْهُ وَمَا لِي عِلْمٌ بِشَيْءٍ مِنْهُ حَتَّى ‏ ‏أَتَانِيَ اللَّهُ بِهِ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ كُنْتُ قَاعِدًا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ زَائِدَةُ كَبِدِ ‏ ‏النُّونِ ‏ ‏وَقَالَ أَذْكَرَ وَآنَثَ وَلَمْ يَقُلْ أَذْكَرَا وَآنَثَا ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் (ஒருநாள்) நின்று கொண்டிருந்தபோது யூத அறிஞர் ஒருவர் வந்து, “முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க!” என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்துத் தள்ளினேன். நிலை தடுமாறி விழப்போன அவர், “ஏன் என்னைத் தள்ளுகின்றாய்?” என்று கேட்டார். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்று நீர் விளிக்கக் கூடாதா(பெயர் கூறி அழைக்கின்றீரே)?” என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், “அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எனது பெயர் முஹம்மது என்பதுதான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்டப் பெயர்” என்று சொன்னார்கள். அந்த யூதர், “உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காக வந்தேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் கூறும் செய்தி உமக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார்கள். அவர், “நான் செவி மடுப்பேன்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்) “கேளுங்கள்!” என்றார்கள்.

அந்த யூதர், “இந்தப் பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் இருப்பார்கள்” என்று பதிலளித்தார்கள். அவர், “மக்களிலேயே முதன் முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யாவர்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஏழை முஹாஜிர்கள்” என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், “அவர்கள் சுவர்க்கத்துக்குள் நுழையும் போது அவர்களுக்கு வழங்கப்படும் உன்னத ஊண் என்ன?” என்று கேட்டார். அதற்கு, “மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித்துண்டு” என்று பதிலளித்தார்கள். “அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன?” என்று அவர் கேட்க, “சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாடு அவர்களுக்காக அறுக்கப்படும்” என்று பதிலளித்தார்கள். “அதற்குப் பின் அவர்கள் அருந்துவது என்னவாக இருக்கும்?” என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அங்குள்ள ‘ஸல்ஸபீல்’ என்ற பெயருடைய நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்)” என்று பதிலளிக்க, அவர் “நீர் கூறியது உண்மையே” என்று கூறினார்.

பிறகு, “பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் கூறும் செய்தி உமக்குப் பயன் தருமா?” என்று கேட்டார்கள். அவர், “நான் செவி மடுப்பேன்” என்றார். பிறகு அவர், “குழந்தை(யின் பிறப்பு) குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன்)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும் போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால், அல்லாஹ்வின் நாட்டப்படி ஆண் குழந்தையாகப் பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை(விந்து உயிரணுவை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நாட்டப்படி பெண்குழந்தையாகப் பிறக்கும்” என்று பதிலளித்தார்கள்.

அந்த யூதர், “நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர்தாம்” என்று கூறி விட்டுத் திரும்பிச் சென்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவர் என்னிடம் கேட்டவவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் ஹஸ்ஸான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் அமர்ந்திருந்தேன்” என்று ஸவ்பான் (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது. மேலும் ‘ஸியாதத்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘ஸாயிதத்’ எனும் சொல்லும் “அல்லாஹ்வின் நாட்டப்படி – ஆண் குழந்தை பிறக்கும்; பெண் குழந்தை பிறக்கும்” என்றும் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 472

حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ ‏ ‏وَسَهْلُ بْنُ عُثْمَانَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏سَهْلٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ شَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُسَافِعِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

‏أَنَّ امْرَأَةً قَالَتْ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ تَغْتَسِلُ الْمَرْأَةُ إِذَا احْتَلَمَتْ وَأَبْصَرَتْ الْمَاءَ فَقَالَ نَعَمْ فَقَالَتْ لَهَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَرِبَتْ يَدَاكِ ‏ ‏وَأُلَّتْ ‏ ‏قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعِيهَا وَهَلْ يَكُونُ الشَّبَهُ إِلَّا مِنْ قِبَلِ ذَلِكِ إِذَا عَلَا مَاؤُهَا مَاءَ الرَّجُلِ أَشْبَهَ الْوَلَدُ أَخْوَالَهُ وَإِذَا عَلَا مَاءُ الرَّجُلِ مَاءَهَا أَشْبَهَ أَعْمَامَهُ ‏

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டு, தன்மீது அவள் (மதன) நீரைக் கண்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது நான் அந்தப் பெண்ணிடம், “உன் கைகள் மண்ணைக் கவ்வட்டும்; காயமடையட்டும்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை விட்டு விடு! அதனால்தான் (தாயுக்கும் சேயுக்குமிடையே) சாயல் உண்டாகிறது. பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) மிகைத்து (முந்தி) விட்டால் குழந்தை, தன் தாயின் சகோதரர்களது (மாமன்) சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரை மிகைத்து விட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது (பெரியப்பன், சிற்றப்பன்) சாயலில் பிறக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 471

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

جَاءَتْ ‏ ‏أَمُّ سُلَيْمٍ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا ‏ ‏يَسْتَحْيِي مِنْ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ إِذَا رَأَتْ الْمَاءَ فَقَالَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ تَرِبَتْ يَدَاكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ مَعْنَاهُ وَزَادَ قَالَتْ قُلْتُ فَضَحْتِ النِّسَاءَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏أُمَّ بَنِي ‏ ‏أَبِي طَلْحَةَ ‏ ‏دَخَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏هِشَامٍ ‏ ‏غَيْرَ أَنَّ فِيهِ قَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ لَهَا أُفٍّ لَكِ أَتَرَى الْمَرْأَةُ ذَلِكِ ‏

உம்மு ஸுலைம் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உண்மையை எடுத்துக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்; அவள் (மதன) நீரைக் கண்டால் (அவள் மீது குளிப்பு, கடமைதான்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உனது கை மண்ணைக் கவ்வட்டும். பிறகு எப்படி அவளது சாயலில் குழந்தை பிறக்கிறது?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரலி)


குறிப்பு :

ஹிஷாம் பின் உர்வா (ரலி) வழி அறிவிப்பில், “(வெட்கமின்றி இதை வெளிப்படுத்தி) பெண்ணினத்தையே நீ கேவலப்படுத்தி விட்டாய்” என்று உம்மு ஸலமா (ரலி), உம்மு ஸுலைம்(ரலி) அவர்களிடம் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

உர்வா பின் அல்-ஸுபைர் (ரலி) வழி அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி), “சீச்சீ! பெண்ணும் அதைக் காண்பாளா?” என்று உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் கேட்டதாக அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 470

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏صَالِحُ بْنُ عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مَالِكٍ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏ ‏

‏سَأَلَتْ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْمَرْأَةِ ‏ ‏تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فِي مَنَامِهِ فَقَالَ ‏ ‏إِذَا كَانَ مِنْهَا مَا يَكُونُ مِنْ الرَّجُلِ فَلْتَغْتَسِلْ ‏

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஆண் உறக்கத்தில் காண்பதைப் போல் கண்ட பெண் (செய்ய வேண்டியதைப்) பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், “ஆணுக்கு ஏற்படுவதைப் போன்று பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவள் குளிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 469

حَدَّثَنَا ‏ ‏عَبَّاسُ بْنُ الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏حَدَّثَهُمْ أَنَّ ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏حَدَّثَتْ ‏:‏

‏أَنَّهَا سَأَلَتْ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْمَرْأَةِ ‏ ‏تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَأَتْ ذَلِكِ الْمَرْأَةُ فَلْتَغْتَسِلْ فَقَالَتْ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏وَاسْتَحْيَيْتُ مِنْ ذَلِكَ قَالَتْ وَهَلْ يَكُونُ هَذَا فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ إِنَّ مَاءَ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءَ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَمِنْ أَيِّهِمَا عَلَا أَوْ سَبَقَ يَكُونُ مِنْهُ الشَّبَهُ ‏

நான் நபி (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண், தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்(ணின் மீது குளியல் கடமையாகுமா? என்பது) பற்றி கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு அவள் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள். (அவ்வாறு கேட்டு) அதற்காக நான் வெட்கப்பட்டேன். மேலும், “இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்கலிதம்) ஏற்படுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (குழந்தையில்) ஏற்படுகிறது? ஆணின் நீர்(விந்து) வெள்ளை நிறமானதும் கெட்டியானதுமாகும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் மிகைத்து விடுவது அல்லது முந்தி விடுவதன் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது” என்று விளக்கினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஸுலைம் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 468

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏إِسْحَقُ بْنُ أَبِي طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

‏جَاءَتْ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏وَهِيَ جَدَّةُ ‏ ‏إِسْحَقَ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ لَهُ ‏ ‏وَعَائِشَةُ ‏ ‏عِنْدَهُ يَا رَسُولَ اللَّهِ الْمَرْأَةُ ‏ ‏تَرَى مَا يَرَى الرَّجُلُ فِي الْمَنَامِ فَتَرَى مِنْ نَفْسِهَا مَا يَرَى الرَّجُلُ مِنْ نَفْسِهِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏يَا ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏فَضَحْتِ النِّسَاءَ تَرِبَتْ يَمِينُكِ فَقَالَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏بَلْ أَنْتِ فَتَرِبَتْ يَمِينُكِ نَعَمْ فَلْتَغْتَسِلْ يَا ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏إِذَا رَأَتْ ذَاكِ ‏

இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்களின் பாட்டியான உம்மு ஸுலைம் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஆண்கள் உறக்கத்தில் காண்பதைப் போன்று பெண்ணும் (கனவு) கண்டு, ஆண்கள் தம் (உடை)மீது காண்பதைப் போன்றே தன் (உடை)மீது காணும் பெண்ணுக்குக் குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்த ஆயிஷா (ரலி), “உம்மு ஸுலைம்! உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும்! (கொஞ்சங்கூட வெட்கமின்றிக் கேட்டு) பெண்ணினத்தைக் கேவலப்படுத்தி விட்டாயே!” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஆயிஷா (ரலி) அவர்களிடம், “இல்லை; உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்; (அறிவு தேடுவதற்கு வெட்கப்படக் கூறி, பெண்ணினத்தைக் கேவலப்படுத்தியது) நீதான்” என்று கூறி விட்டு, உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம், “ஆம்! அவ்வாறு காணும் பெண், குளித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 467

و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مِسْكِينٌ يَعْنِي ابْنَ بُكَيْرٍ الْحَذَّاءَ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَطُوفُ عَلَى نِسَائِهِ بِغُسْلٍ وَاحِدٍ ‏

நபி (ஸல்) தம் மனைவியரிடம் (உடலுறவு கொள்ளச்) சென்றால் ஒருமுறை குளிக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 466

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ ‏


زَادَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فِي حَدِيثِهِ بَيْنَهُمَا وُضُوءًا وَقَالَ ثُمَّ أَرَادَ أَنْ يُعَاوِدَ ‏

“உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டுப் பின்னர் மீண்டும் (உறவு கொள்ள) விரும்பினால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவ்விரு தடவைகளுக்கும் இடையில் அவர் ஒருமுறை உளூச் செய்து கொள்ளட்டும்” என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 465

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏:‏

‏عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ الْحَدِيثَ قُلْتُ كَيْفَ كَانَ يَصْنَعُ فِي الْجَنَابَةِ أَكَانَ يَغْتَسِلُ قَبْلَ أَنْ يَنَامَ أَمْ يَنَامُ قَبْلَ أَنْ يَغْتَسِلَ قَالَتْ كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ ‏ ‏رُبَّمَا اغْتَسَلَ فَنَامَ وَرُبَّمَا تَوَضَّأَ فَنَامَ قُلْتُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

நான் (அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “பெருந்துடக்கான நிலையில் நபி (ஸல்) எப்படி நடந்து கொண்டார்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா? குளித்து விட்டு உறங்குவார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “இரண்டு முறைகளையும் கையாண்டு வந்தார்கள். சில நேரங்களில் குளித்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். சில நேரங்களில் (குளிக்காமல்)  உளூச் செய்து விட்டு உறங்கினார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “(மார்க்க) நடைமுறைகளில் தாராள நெகிழ்வை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்)


குறிப்பு :

“நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வித்ருத் தொழுகையைப் பற்றிக் கேட்டேன். அன்னை ஆயிஷா (ரலி) அது தொடர்பான ஹதீஸையும் அறிவித்து விட்டு, தொடர்ந்த எனது கேள்விகளுக்கு மேற்கண்டவாறு விளக்கமும் கூறினார்கள்” என்று அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) தமக்கு அறிவித்ததாக முஆவியா பின் ஸாலிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 464

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏:‏

‏ذَكَرَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ تُصِيبُهُ جَنَابَةٌ مِنْ اللَّيْلِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ ‏

(என் தந்தை) உமர் பின் அல் கத்தாப் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு விடுவது பற்றிக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உளூச் செய்து கொள்ளுங்கள்; ஆணுறுப்பைக் கழுவிக் கொண்டு, பின்னர் உறங்குங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)