அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 463

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏ ‏

‏أَنَّ ‏ ‏عُمَرَ ‏ ‏اسْتَفْتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏هَلْ يَنَامُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ قَالَ نَعَمْ لِيَتَوَضَّأْ ثُمَّ لِيَنَمْ حَتَّى يَغْتَسِلَ إِذَا شَاءَ ‏

“எங்களில் ஒருவர் பெருந்துடக்காளி ஆகி (குளிக்காமல்) உறங்கலாமா?” என்று (என் தந்தை) உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்), “ஆம், அவர் உளூச் செய்து விட்டுப் பின்னர் உறங்கட்டும். விரும்பும்போது குளித்துக் கொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு:

பெருந்துடக்காளி, தொழுகைக்கு முன்னர் குளித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். “விரும்பும்போது குளித்துக் கொள்ளட்டும்” என்ற அனுமதி, உடலுறவு முடிந்த அல்லது உறக்கத்தில் விந்து வெளியேறிய உடனடியாகக் குளித்தாக வேண்டியது கட்டாயமில்லை என்பதை உள்ளடக்கியதாகும்.

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 462

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏:‏

‏أَنَّ ‏ ‏عُمَرَ ‏ ‏قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ قَالَ ‏ ‏نَعَمْ إِذَا تَوَضَّأَ ‏

“அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் பெருந்துடக்காளி ஆகி (குளிக்காமல்) உறங்கலாமா?” என்று (என் தந்தை) உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம், அவர் உளூச் செய்து கொண்ட பின்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 461

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏وَغُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏كَانَ جُنُبًا فَأَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏يُحَدِّثُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்காளியான நிலையில் உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் (அதற்குமுன்) தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று உளூச் செய்து கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 06, ஹதீஸ் எண்: 460

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ قَبْلَ أَنْ يَنَامَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெருந்துடக்காளியாகிய நிலையில் உறங்க விரும்பினால் அதற்குமுன் தொழுகைக்காக உளூச் செய்வதைப் போன்று உளூச் செய்து கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 05, ஹதீஸ் எண்: 459

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ مِنْ اللَّيْلِ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ نَامَ ‏

நபி (ஸல்) இரவில் விழித்தெழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு முகத்தையும் கைகளையும் கழுவி விட்டு வந்து பின்னர் (மீண்டும்) உறங்கினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறிய தாயாரும் நபியவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் அறிவிப்பாளர் ஓரிரவு தங்கியிருந்தபோது கண்டதை மேற்கண்டவாறு அறிவிக்கின்றார்.

அத்தியாயம்: 3, பாடம்: 04, ஹதீஸ் எண்: 458

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏:‏

‏أَرْسَلْنَا ‏ ‏الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ عَنْ ‏ ‏الْمَذْيِ ‏ ‏يَخْرُجُ مِنْ الْإِنْسَانِ كَيْفَ يَفْعَلُ بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأْ ‏ ‏وَانْضَحْ ‏ ‏فَرْجَكَ ‏

“மனிதனிலிருந்து வெளியாகும் இச்சை நீர் (மதீ) குறித்து, அது கசிந்தால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்பதற்காக மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தோம். அதற்கு, “உளூச் செய்து கொள்ளுங்கள்; ஆணுறுப்பில் தண்ணீர் ஊற்றி(க் கழுவி)விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 04, ஹதீஸ் எண்: 457

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُنْذِرًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

‏اسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمَذْيِ ‏ ‏مِنْ أَجْلِ ‏ ‏فَاطِمَةَ ‏ ‏فَأَمَرْتُ ‏ ‏الْمِقْدَادَ ‏ ‏فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏مِنْهُ الْوُضُوءُ ‏

நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா என் மனைவியாதலால் இச்சை நீர் (மதீ) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப் பட்டேன். எனவே, நான் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (இது பற்றிக் கேட்கச்) சொன்னேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “உளூச் செய்தல் வேண்டும் (குளிக்கத் தேவையில்லை)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 04, ஹதீஸ் எண்: 456

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَهُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُنْذِرِ بْنِ يَعْلَى وَيُكْنَى أَبَا يَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْحَنَفِيَّةِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ :‏ ‏

‏كُنْتُ رَجُلًا مَذَّاءً وَكُنْتُ ‏ ‏أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ ‏ ‏الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ ‏ ‏فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ ‏

அடிக்கடி இச்சை நீர் (மதீ) வெளிப்படுபவனாக நானிருந்தேன். நபி (ஸல்) அவர்களின் மகள் என் மனைவியாதலால் இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டதால் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இதைக் குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்), “ஆணுறுப்பைக் கழுவிக் கொண்டு உளூச் செய்து கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 455

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏:‏

‏أَنَّ ‏ ‏الْيَهُودَ ‏ ‏كَانُوا إِذَا حَاضَتْ الْمَرْأَةُ فِيهِمْ لَمْ يُؤَاكِلُوهَا وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ فَسَأَلَ ‏ ‏أَصْحَابُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى [‏وَيَسْأَلُونَكَ عَنْ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ] ‏إِلَى آخِرِ الْآيَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ فَبَلَغَ ذَلِكَ ‏ ‏الْيَهُودَ ‏ ‏فَقَالُوا مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئًا إِلَّا خَالَفَنَا فِيهِ فَجَاءَ ‏ ‏أُسَيْدُ بْنُ حُضَيْرٍ ‏ ‏وَعَبَّادُ بْنُ بِشْرٍ ‏ ‏فَقَالَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏الْيَهُودَ ‏ ‏تَقُولُ كَذَا وَكَذَا فَلَا نُجَامِعُهُنَّ فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى ظَنَنَّا أَنْ قَدْ ‏ ‏وَجَدَ ‏ ‏عَلَيْهِمَا فَخَرَجَا فَاسْتَقْبَلَهُمَا هَدِيَّةٌ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرْسَلَ فِي آثَارِهِمَا فَسَقَاهُمَا فَعَرَفَا أَنْ لَمْ ‏ ‏يَجِدْ ‏ ‏عَلَيْهِمَا ‏

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, “(நபியே) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிடாயின்போது பெண்களை (உடலுறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்….” என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எல்லாவற்றையும் செய்து கொள்ளுங்கள் – உடலுறவைத் தவிர” என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, “நம்முடைய செயல்கள் ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பமாக இருக்கிறது” என்று கூறினர். எனவே உஸைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ரு (ரலி) ஆகியோர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?” என்று கேட்டனர்.

(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டு விட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் சென்ற பின்னர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் கடந்து வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஆளனுப்பி அவ்விருவரையும் பின்தொடர்ந்து சென்று அழைத்து வரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும் பாலைப்) பருகக் கொடுத்தார்கள். தங்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்து கொண்டனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 454

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَكِّيُّ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَّكِئُ فِي ‏ ‏حِجْرِي ‏ ‏وَأَنَا حَائِضٌ فَيَقْرَأُ الْقُرْآنَ ‏

நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு குர்ஆன் ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)