அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 453

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏وَسُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏كُنْتُ ‏ ‏أَشْرَبُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ ‏ ‏فِيَّ فَيَشْرَبُ ‏ ‏وَأَتَعَرَّقُ ‏ ‏الْعَرْقَ ‏ ‏وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ ‏ ‏فِيَّ ‏


وَلَمْ يَذْكُرْ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏فَيَشْرَبُ ‏

நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும்போது (ஏதேனும் பானத்தைப் பகுதி) அருந்தி விட்டு மீதியை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். நான் மாதவிடாய்காரிக்காரியாக இருக்கும்போது இறைச்சியுள்ள எலும்புத் துண்டை(ப் பகுதி)க் கடித்து விட்டு நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில் “அவர்கள் அருந்துவார்கள்” எனும் வாசகம் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 452

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏بَيْنَمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمَسْجِدِ فَقَالَ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏نَاوِلِينِي الثَّوْبَ فَقَالَتْ إِنِّي حَائِضٌ فَقَالَ إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ فَنَاوَلَتْهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்து கொண்டிருக்கும்போது, “ஆயிஷா! அந்த உடையை எடுத்துத் தா” என்று கேட்டார்கள். ஆயிஷா (ரலி), “நான் மாதவிடாய்க்காரி” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மாதவிடாய் (ஏற்பட்டது) உனது கையில் அல்ல” என்று சொன்னார்கள். எனவே, (கேட்ட) உடையை ஆயிஷா (ரலி) எடுத்துக் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 451

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏حَجَّاجٍ ‏ ‏وَابْنِ أَبِي غَنِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏أَمَرَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ أُنَاوِلَهُ ‏ ‏الْخُمْرَةَ ‏ ‏مِنْ الْمَسْجِدِ فَقُلْتُ إِنِّي حَائِضٌ فَقَالَ ‏ ‏تَنَاوَلِيهَا فَإِنَّ الْحَيْضَةَ لَيْسَتْ فِي يَدِكِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்து கொண்டு (வீட்டிலுள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், “நான் மாதவிடாய்க்காரி” என்றேன். அப்போது அவர்கள், “அதை எடுத்து வா! மாதவிடாய் (ஏற்பட்டது) உனது கையில் அல்ல” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 450

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَاوِلِينِي ‏ ‏الْخُمْرَةَ ‏ ‏مِنْ الْمَسْجِدِ قَالَتْ فَقُلْتُ إِنِّي حَائِضٌ فَقَالَ إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்து கொண்டு, “(அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடுத்துத் தா” என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “நான் மாதவிடாய்க்காரி” என்றேன். அப்போது அவர்கள், “உனது மாதவிடாய் உன் கையில் அல்ல” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 449

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

كُنْتُ أَغْسِلُ رَأْسَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا حَائِضٌ ‏

நான் மாதவிடாய்க்காரியாக இருந்து கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலையைக் கழுவி விடுவதுண்டு.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 448

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُرْوَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ :‏ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُدْنِي إِلَيَّ رَأْسَهُ وَأَنَا فِي حُجْرَتِي فَأُرَجِّلُ رَأْسَهُ وَأَنَا حَائِضٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இஃதிகாஃபில் இருக்கும்போது) அறையிலிருக்கும் என் பக்கம் தமது தலையை நீட்டுவார்கள். மாதவிடாய்க்காரியாக இருந்தாலும் நான் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 447

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُخْرِجُ إِلَيَّ رَأْسَهُ مِنْ الْمَسْجِدِ وَهُوَ مُجَاوِرٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஃதிகாஃபில் இருக்கும்போது பள்ளிவாசலிலிருந்து தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். மாதவிடாய்க்காரியாக இருந்தாலும் நான் அவர்களது தலையைக் கழுவி விடுவேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 446

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ :‏ ‏

إِنْ كُنْتُ لَأَدْخُلُ الْبَيْتَ لِلْحَاجَةِ وَالْمَرِيضُ فِيهِ فَمَا أَسْأَلُ عَنْهُ إِلَّا وَأَنَا مَارَّةٌ وَإِنْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ فَأُرَجِّلُهُ وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةٍ إِذَا كَانَ مُعْتَكِفًا ‏


‏و قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏إِذَا كَانُوا مُعْتَكِفِينَ ‏

நான் (இஃதிகாஃப் இருக்கும் போது) இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குப் போவேன். வீட்டில் நோயுற்றவர்கள் இருப்பின், போகிற போக்கில் அப்படியே நலம் விசாரித்துக் கொள்வேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இஃதிகாஃபில் இருந்தால்) பள்ளிவாசலில் இருந்து கொண்டு தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன். அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது, இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்கு வருவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில் “… (மக்கள்) இஃதிகாஃபில் இருக்கும் போது, இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குச் செல்வர்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 445

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا اعْتَكَفَ يُدْنِي إِلَيَّ رَأْسَهُ ‏ ‏فَأُرَجِّلُهُ ‏ ‏وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ

நபி (ஸல்) பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருக்கும்போது என் பக்கம் தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன். இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அன்னை ஆயிஷா அவர்களின் இல்லம், மஸ்ஜிதுந் நபவி என்று அழைக்கப் படும் மதீனத்துப் பள்ளியை ஒட்டி, மெல்லிய தடுப்புடன் அமைந்திருந்தது.

அத்தியாயம்: 3, பாடம்: 02, ஹதீஸ் எண்: 444

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ ‏ ‏حَدَّثَتْهُ أَنَّ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏حَدَّثَتْهَا قَالَتْ ‏:‏

‏بَيْنَمَا أَنَا مُضْطَجِعَةٌ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْخَمِيلَةِ إِذْ حِضْتُ فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَفِسْتِ ‏ ‏قُلْتُ نَعَمْ فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي ‏ ‏الْخَمِيلَةِ ‏ ‏قَالَتْ وَكَانَتْ هِيَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْتَسِلَانِ فِي الْإِنَاءِ الْوَاحِدِ مِنْ الْجَنَابَةِ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குஞ்சம் வைத்த ஒரு போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் (போர்வைக்குள்ளிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய் (கால)த்துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன். பெருந்துடக்குடன் இருந்த நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திர நீரில் குளிப்போம்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)