அத்தியாயம்: 3, பாடம்: 02, ஹதீஸ் எண்: 443

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مَخْرَمَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَضْطَجِعُ مَعِي وَأَنَا حَائِضٌ وَبَيْنِي وَبَيْنَهُ ثَوْبٌ ‏

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  படுத்திருப்பார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் ஆடையே (தடையாக) இருக்கும்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 01, ஹதீஸ் எண்: 442

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُبَاشِرُ ‏ ‏نِسَاءَهُ فَوْقَ ‏ ‏الْإِزَارِ ‏ ‏وَهُنَّ حُيَّضٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மாதவிடாய் ஏற்பட்டுள்ள தம் மனைவியைக் கீழாடைக்கு மேலாக அணைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷத்தாத்( ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 01, ஹதீஸ் எண்: 441

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

كَانَ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا ‏ ‏أَمَرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏تَأْتَزِرَ ‏ ‏فِي فَوْرِ حَيْضَتِهَا ثُمَّ ‏ ‏يُبَاشِرُهَا ‏ ‏قَالَتْ وَأَيُّكُمْ يَمْلِكُ ‏ ‏إِرْبَهُ ‏ ‏كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمْلِكُ ‏ ‏إِرْبَهُ ‏

எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு, உதிரப்போக்கு அதிகமாக ஆரம்பித்த உடனேயே கீழ்(உள்)ஆடை கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுவார்கள். பின்னரே அணைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டுப்படுத்திக் கொண்டதைப் போன்று உங்களில் எவரால் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 01, ஹதீஸ் எண்: 440

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

كَانَ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَمَرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَأْتَزِرُ ‏ ‏بِإِزَارٍ ‏ ‏ثُمَّ ‏ ‏يُبَاشِرُهَا ‏

தம் மனைவியருக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (அவரைக்) கீழ்(உள்)ஆடை கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுவார்கள். (உள்ளாடை கட்டிக்கொண்ட) பின்னரே மனைவியை அணைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 34, ஹதீஸ் எண்: 439

حَدَّثَنِي ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏ ‏

مَرَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى قَبْرَيْنِ فَقَالَ ‏ ‏أَمَا إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ قَالَ فَدَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا ثُمَّ قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا ‏


حَدَّثَنِيهِ ‏ ‏أَحْمَدُ بْنُ يُوسُفَ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَلَّى بْنُ أَسَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ وَكَانَ الْآخَرُ لَا يَسْتَنْزِهُ عَنْ الْبَوْلِ أَوْ مِنْ الْبَوْلِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அப்போது, “அறிந்து கொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விருவரும் பெரிய (பாவச்) செயலுக்காக வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது இன உறுப்பை) மறைக்க மாட்டார்” என்று கூறினார்கள்.

பிறகு பச்சை பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாகப் பிளந்து ஒருவர் (மண்ணறை) மீது ஒரு துண்டையும் இன்னொருவர் (மண்ணறை) மீது இன்னொரு துண்டையும் ஊன்றி வைத்தார்கள். பிறகு, “இவ்விரண்டின் ஈரம் உலராதவரைக்கும் இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

அப்துல் வாஹித் (ரஹ்) வழி அறிவிப்பில், “… மற்றொருவரோ சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்ய மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 33, ஹதீஸ் எண்: 438

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏قَالَ حَدَّثَتْنِي ‏ ‏فَاطِمَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِحْدَانَا يُصِيبُ ثَوْبَهَا مِنْ دَمِ الْحَيْضَةِ كَيْفَ تَصْنَعُ بِهِ قَالَ ‏ ‏تَحُتُّهُ ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ ثُمَّ تَنْضَحُهُ ثُمَّ تُصَلِّي فِيهِ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ ‏ ‏وَمَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏وَعَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவட்டும். பின்னர் அந்த ஆடையிலேயே தொழுது கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)


குறிப்பு :

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தூய்மையடையும்வரை தொழக்கூடாது. தூய்மை அடைந்த பின்னர் தொழும்போது மாதவிடாய் பட்டுவிட்ட உடைப் பகுதியை மட்டும் சுத்தப் படுத்திக் கொண்டால் போதும்; முழு உடையையும் துவைத்து உடுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.

அக்காலத்தில் அங்கு நிலவிய தண்ணீர் பஞ்சமும் நபித்தோழர்/தோழியரது ஆடைகளின் குறைந்த எண்ணிக்கையும் இங்குக் கருத்தில் கொள்ளத் தக்கவை.

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 437

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏شَبِيبِ بْنِ غَرْقَدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شِهَابٍ الْخَوْلَانِيِّ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ نَازِلًا عَلَى ‏ ‏عَائِشَةَ ‏:‏

فَاحْتَلَمْتُ فِي ثَوْبَيَّ فَغَمَسْتُهُمَا فِي الْمَاءِ فَرَأَتْنِي جَارِيَةٌ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏فَأَخْبَرَتْهَا فَبَعَثَتْ إِلَيَّ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقَالَتْ ‏ ‏مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ بِثَوْبَيْكَ قَالَ قُلْتُ رَأَيْتُ مَا يَرَى النَّائِمُ فِي مَنَامِهِ قَالَتْ هَلْ رَأَيْتَ فِيهِمَا شَيْئًا قُلْتُ لَا قَالَتْ فَلَوْ رَأَيْتَ شَيْئًا غَسَلْتَهُ لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَحُكُّهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَابِسًا بِظُفُرِي ‏

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒருநாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு, உறக்கத்தில் விந்து வெளியாகிவிட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் ஊற வைத்தேன். அதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்துவிட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்து விட்டார். அப்போது ஆயிஷா (ரலி) என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்). அப்போது அவர்கள், “உங்கள் இரு ஆடைகளையும் அவ்வாறு செய்யக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். நான், “தூங்கக் கூடிய(ஓர் ஆணான)வர் கனவில் காண்பதை நான் கண்டு விட்டேன்” என்று கூறினேன். “அந்த இரு ஆடைகளில் (விந்து) எதையும் கண்டீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். “அப்படியே எதையேனும் நீங்கள் கண்டிருந்தாலும் ஆடைகளைக் கழுவத் தேவையில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் விந்து பட்டுக் காய்ந்து போயிருக்கும் பகுதியை நான் என் நகத்தால் சுரண்டித்தான் விடுவேன் (கழுவ மாட்டேன்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்-கவ்லானீ (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 436

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏سُلَيْمَانَ بْنَ يَسَارٍ ‏ ‏عَنْ الْمَنِيِّ يُصِيبُ ثَوْبَ الرَّجُلِ أَيَغْسِلُهُ أَمْ يَغْسِلُ الثَّوْبَ ‏ ‏فَقَالَ أَخْبَرَتْنِي ‏ ‏عَائِشَةُ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَغْسِلُ الْمَنِيَّ ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلَاةِ فِي ذَلِكَ الثَّوْبِ وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ الْغَسْلِ فِيهِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏فَحَدِيثُهُ كَمَا قَالَ ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَغْسِلُ الْمَنِيَّ ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَعَبْدُ الْوَاحِدِ ‏ ‏فَفِي حَدِيثِهِمَا قَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது ஆடையில்) விந்து பட்ட இடத்தை (மட்டும்) கழுவிவிட்டு அதே ஆடையில் தொழுகைக்காகப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த ஆடையில் கழுவியதற்குரிய (ஈர) அடையாளத்தை நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்)


குறிப்புகள்:

ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) அவர்களிடம், “ஒருவரது ஆடையில் விந்து பட்ட இடத்தை மட்டும் கழுவ வேண்டுமா? அந்த ஆடையை(முழுவதுமாக)க் கழுவ வேண்டுமா?” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அம்ரு பின் மைமூன் (ரஹ்) கேட்டபோது, அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் மேற்கண்டவாறு செவியுற்றதாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) கூறினார்.

இப்னு அபீஸாயிதா (ரஹ்) வழி அறிவிப்பில், “விந்து பட்ட இடத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

இப்னுல் முபாரக் (ரஹ்), அப்துல் வாஹித் பின் ஸியாத் (ரஹ்) ஆகிய இருவரது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடை(யில் விந்து பட்டிருக்கும்) பகுதியை நான் கழுவுவேன்’ என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 435

و حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَهَمَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

‏فِي الْمَنِيِّ قَالَتْ ‏ ‏كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ حَسَّانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاصِلٍ الْأَحْدَبِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْرَائِيلُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏وَمُغِيرَةَ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فِي حَتِّ الْمَنِيِّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ ‏

ஆயிஷா (ரலி), விந்து பற்றிக் கூறுகையில், “அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டி விடுவது வழக்கம்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அல்-அஸ்வது (ரஹ்) & ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 434

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏وَالْأَسْوَدِ :‏

‏ ‏أَنَّ ‏ ‏رَجُلًا ‏ ‏نَزَلَ ‏ ‏بِعَائِشَةَ ‏فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ فَإِنْ لَمْ تَرَ ‏ ‏نَضَحْتَ ‏ ‏حَوْلَهُ وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرْكًا فَيُصَلِّي فِيهِ ‏

ஒருவர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவிக் கொண்டிருந்தார். (அதைக் கண்ட அன்னை) ஆயிஷா (ரலி), “அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்து விடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டிருப்பதை நன்கு சுரண்டி விடுவேன். அந்த ஆடையை அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்) & அல்-அஸ்வத் (ரஹ்)


குறிப்பு :

இந்த ஹதீஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் ஹதீஸ் எண் 437இல் பதிவாகியுள்ளன. தூக்கத்தில் விந்து வெளியானால் குளிக்காமல் தொழக் கூடாது. எனினும் விந்து, சிறுநீரைப் போன்று அசுத்தமானதன்று. ஆடையில் விந்து பரவிய இடத்தில் தண்ணீர் தெளித்தோ சுரண்டி விட்டோ அதே ஆடையோடு தொழுவதற்குத் தடையில்லை.