அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 433

و حَدَّثَنِيهِ ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏:‏

أَنَّ ‏ ‏أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ ‏ ‏وَكَانَتْ مِنْ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ اللَّاتِي بَايَعْنَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهِيَ أُخْتُ ‏ ‏عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ ‏ ‏أَحَدُ ‏ ‏بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ ‏ ‏قَالَ ‏‏أَخْبَرَتْنِي أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِابْنٍ لَهَا لَمْ يَبْلُغْ أَنْ يَأْكُلَ الطَّعَامَ ‏ ‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏أَخْبَرَتْنِي أَنَّ ابْنَهَا ذَاكَ ‏ ‏بَالَ فِي ‏ ‏حَجْرِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَدَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَاءٍ ‏ ‏فَنَضَحَهُ ‏ ‏عَلَى ثَوْبِهِ وَلَمْ يَغْسِلْهُ غَسْلًا ‏

திடஉணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத என் ஆண் குழதையுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது ஆடையின் மீது தெளித்தார்கள்; அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை.

அறிவிப்பாளர் : உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்)


குறிப்பு :

இந்த அறிவிப்பில் உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி) என்ற நபித்தோழியைப் பற்றி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தவர்; ஆரம்பத்தில் நாடு துறந்து ஹிஜ்ரத் சென்ற பெண்மணிகளுள் ஒருவர்; பனூ அஸத் பின் குஸைமா குலத்தைச் சேர்ந்த உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரி” என்று அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் சிறப்பு அறிமுகம் செய்கின்றார்.

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 432

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ ‏:‏

‏أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِابْنٍ لَهَا لَمْ يَأْكُلْ الطَّعَامَ فَوَضَعَتْهُ فِي ‏ ‏حَجْرِهِ ‏ ‏فَبَالَ قَالَ فَلَمْ يَزِدْ عَلَى أَنْ ‏ ‏نَضَحَ ‏ ‏بِالْمَاءِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فَدَعَا بِمَاءٍ فَرَشَّهُ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திடஉணவு உட்கொள்ளாத என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு வந்து அவர்களது மடியில் வைத்தேன். அவர்கள் மீது குழந்தை சிறுநீர் கழித்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சிறுநீர் பட்ட இடத்தில்) தண்ணீரைத் தெளித்து விட்டதைத் தவிர கூடுதலாக ஏதும் செய்யவில்லை.

அறிவிப்பாளர் : உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி)


குறிப்பு :

இபுனு உஅய்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “… தண்ணீர் கொண்டுவரச் சொல்லித் தெளித்துக் கொண்டார்கள்” என்று மட்டும் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 431

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِصَبِيٍّ يَرْضَعُ ‏ ‏فَبَالَ فِي ‏ ‏حَجْرِهِ ‏ ‏فَدَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால்குடி மாறாத ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்களது மடியில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 430

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُؤْتَى بِالصِّبْيَانِ ‏ ‏فَيُبَرِّكُ ‏ ‏عَلَيْهِمْ ‏ ‏وَيُحَنِّكُهُمْ ‏ ‏فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ بَوْلَهُ وَلَمْ يَغْسِلْهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அக்குழந்தைகளின் அருள்வளத்துக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் (மட்டும்) தண்ணீரைத் தெளித்தார்கள்; (முற்றாகக்) கழுவவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 30, ஹதீஸ் எண்: 429

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ أَبِي طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏وَهُوَ عَمُّ ‏ ‏إِسْحَقَ ‏ ‏قَالَ :‏ ‏

‏بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ ‏ ‏أَصْحَابُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَهْ ‏ ‏مَهْ ‏ ‏قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏تُزْرِمُوهُ ‏ ‏دَعُوهُ فَتَرَكُوهُ حَتَّى بَالَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعَاهُ فَقَالَ لَهُ إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأَمَرَ رَجُلًا مِنْ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ ‏ ‏فَشَنَّهُ ‏ ‏عَلَيْهِ ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தபோது, கிராமவாசி ஒருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள், “நிறுத்து! நிறுத்து!” என்று கூவினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டு விட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பின்னர் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அழைத்து, “பள்ளிவாசல்கள் என்பன சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்” என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் (கழிக்கப்பட்ட இடத்தின்) மீது ஊற்றச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 30, ஹதீஸ் எண்: 428

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الدَّرَاوَرْدِيِّ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏:‏

‏يَذْكُرُ أَنَّ أَعْرَابِيًّا قَامَ إِلَى نَاحِيَةٍ فِي الْمَسْجِدِ فَبَالَ فِيهَا فَصَاحَ بِهِ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعُوهُ فَلَمَّا فَرَغَ أَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَنُوبٍ ‏ ‏فَصُبَّ عَلَى بَوْلِهِ ‏

ஒரு கிராமவாசி பள்ளிவாசலின் ஒரு பகுதியில் நின்று சிறுநீர் கழித்தார். அப்போது அவரைப் பார்த்து மக்கள் சப்தமிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். அவர் (சிறுநீர் கழித்து) முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். அவ்வாறே (தண்ணீர் கொண்டுவரப்பட்டு) அது சிறுநீர் (கழிக்கப்பட்ட இடத்தின்) மீது ஊற்றப்பட்டது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 30, ஹதீஸ் எண்: 427

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏:‏

‏أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ فَقَامَ إِلَيْهِ بَعْضُ الْقَوْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعُوهُ وَلَا ‏ ‏تُزْرِمُوهُ ‏ ‏قَالَ فَلَمَّا فَرَغَ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ ‏

ஒரு கிராமவாசி, பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கிச் சிலர் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதைச் சிறுநீர் (கழிக்கப்பட்ட இடத்தின்) மீது ஊற்றினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 29, ஹதீஸ் எண்: 426

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَبُو الطَّاهِرِ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ وَهْبٍ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَشَجِّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا السَّائِبِ ‏ ‏مَوْلَى ‏ ‏هِشَامِ بْنِ زُهْرَةَ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ ‏ ‏الدَّائِمِ ‏ ‏وَهُوَ جُنُبٌ ‏‏فَقَالَ ‏ ‏كَيْفَ يَفْعَلُ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ يَتَنَاوَلُهُ تَنَاوُلًا ‏

“உங்களில் ஒருவர் பெருந்துடக்கு உள்ளவராய் இருக்கும்போது தேங்கி நிற்கும் தண்ணீரில் (இறங்கிக்) குளிக்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) சொன்னார்கள். அப்போது நான், “அவர் என்ன செய்ய வேண்டும், அபூஹுரைரா?” என்று கேட்டேன். அதற்கு, “அவர் (அதிலிருந்து) தண்ணீரை அள்ளிக் குளிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபுஸ்ஸாயிப் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 28, ஹதீஸ் எண்: 425

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏:‏

عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏ ‏وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَبُلْ فِي الْمَاءِ ‏ ‏الدَّائِمِ ‏ ‏الَّذِي لَا يَجْرِي ثُمَّ تَغْتَسِلُ مِنْهُ ‏

“ஓடாமல் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்காதே; பின்னர் அதில் குளிக்காதே” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்).


குறிப்பு :

இது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

 

அத்தியாயம்: 2, பாடம்: 28, ஹதீஸ் எண்: 424

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ ‏ ‏الدَّائِمِ ‏ ‏ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ ‏

“உங்களில் எவரும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது; பின்னர் அதில் குளிக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)