அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 245

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَتَقَارَبَا فِي اللَّفْظِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أُسْرِيَ ‏ ‏بِي ‏ ‏لَقِيتُ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَنَعَتَهُ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا رَجُلٌ حَسِبْتُهُ قَالَ مُضْطَرِبٌ ‏ ‏رَجِلُ الرَّأْسِ ‏ ‏كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ قَالَ وَلَقِيتُ ‏ ‏عِيسَى ‏ ‏فَنَعَتَهُ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا ‏ ‏رَبْعَةٌ ‏ ‏أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ ‏ ‏دِيمَاسٍ ‏ ‏يَعْنِي حَمَّامًا قَالَ ‏ ‏وَرَأَيْتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ ‏ ‏وَأَنَا أَشْبَهُ وَلَدِهِ بِهِ قَالَ فَأُتِيتُ بِإِنَاءَيْنِ فِي أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الْآخَرِ خَمْرٌ فَقِيلَ لِي خُذْ أَيَّهُمَا شِئْتَ فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقَالَ هُدِيتَ الْفِطْرَةَ ‏ ‏أَوْ أَصَبْتَ الْفِطْرَةَ ‏ ‏أَمَّا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ ‏ ‏غَوَتْ ‏ ‏أُمَّتُكَ

நபி (ஸல்) அவர்கள், (விண்ணுலக) இரவுப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது நடந்தவற்றை விவரித்துக் கூறியபடி, “நான் மூஸா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு அவர்களை வர்ணித்தபோது, “மூஸா (அலை) அவர்கள் ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று ஒல்லியாக, தொங்கும் தலைமுடியோடு காணப் பட்டார்கள்”.

“நான் ஈஸா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர்களை வர்ணித்தபோது, “சிவந்த நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் கொண்டவர்களாக, (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்று இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தேன். அவர்களுடைய வழித்தோன்றல்களிலேயே சாயலில் அவர்களை ஒத்திருப்பவன் நானே. (அந்தப் பயணத்தில்) என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்துப் பருகினேன். அப்போது, நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டு விட்டீர்கள் அல்லது நீங்கள் இயற்கை மரபை பெற்றுக் கொண்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும் என்று என்னிடம் சொல்லப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 244

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عُرِضَ عَلَيَّ الْأَنْبِيَاءُ فَإِذَا ‏ ‏مُوسَى ‏ ‏ضَرْبٌ مِنْ الرِّجَالِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ ‏ ‏عِيسَى ابْنَ مَرْيَمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا ‏ ‏عُرْوَةُ بْنُ مَسْعُودٍ ‏ ‏وَرَأَيْتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ ‏ ‏فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا صَاحِبُكُمْ ‏ ‏يَعْنِي نَفْسَهُ وَرَأَيْتُ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا ‏ ‏دَحْيَةُ ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ رُمْحٍ ‏ ‏دَحْيَةُ بْنُ خَلِيفَةَ ‏

“(மிஃராஜின் இரவுப் பயணத்தில்) இறைத்தூதர்கள் எனக்குக் காட்டப்பட்டனர். மூஸா (அலை) அவர்கள் ‘ஷனூஆ’ குலத்து ஆண்களை ஒத்த உயரமானவராக இருந்தார்கள். மர்யமின் மைந்தர் ஈஸா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊதுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் உங்கள் தோழருக்கு(எனக்கு) மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என் தோழர்) தஹ்யா பின் கலீஃபா அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 243

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا عِنْدَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏فَذَكَرُوا ‏ ‏الدَّجَّالَ ‏ ‏فَقَالَ إِنَّهُ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ قَالَ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏لَمْ أَسْمَعْهُ قَالَ ذَاكَ وَلَكِنَّهُ قَالَ ‏ ‏أَمَّا ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ وَأَمَّا ‏ ‏مُوسَى ‏ ‏فَرَجُلٌ آدَمُ ‏ ‏جَعْدٌ ‏ ‏عَلَى جَمَلٍ أَحْمَرَ ‏ ‏مَخْطُومٍ ‏ ‏بِخُلْبَةٍ ‏ ‏كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذَا انْحَدَرَ فِي الْوَادِي يُلَبِّي

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு இருந்தபோது தஜ்ஜாலைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், “அவனுடைய இரு கண்களுக்குமிடையே ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்” என்று சொன்னார். அப்போது, “நான் அவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், ‘இப்ராஹீம் (அலை) அவர்களது உருவ அமைப்பை அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை(என்னை)ப் பாருங்கள். மூஸா (அலை) மாநிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணிப்பார்கள். அவர்கள் தல்பியா கூறியபடி இந்த (அல்-அஸ்ரக்) பள்ளத்தாக்கில் இறங்கியதை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்).

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 242

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَالْمَدِينَةِ ‏ ‏فَمَرَرْنَا بِوَادٍ فَقَالَ ‏ ‏أَيُّ وَادٍ هَذَا فَقَالُوا ‏ ‏وَادِي الْأَزْرَقِ ‏ ‏فَقَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ مِنْ لَوْنِهِ وَشَعَرِهِ شَيْئًا لَمْ يَحْفَظْهُ ‏ ‏دَاوُدُ ‏ ‏وَاضِعًا إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ لَهُ ‏ ‏جُؤَارٌ ‏ ‏إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ مَارًّا بِهَذَا الْوَادِي قَالَ ثُمَّ سِرْنَا حَتَّى أَتَيْنَا عَلَى ثَنِيَّةٍ فَقَالَ أَيُّ ثَنِيَّةٍ هَذِهِ قَالُوا ‏ ‏هَرْشَى ‏ ‏أَوْ ‏ ‏لِفْتٌ ‏ ‏فَقَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏يُونُسَ ‏ ‏عَلَى نَاقَةٍ حَمْرَاءَ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ ‏ ‏خِطَامُ ‏ ‏نَاقَتِهِ لِيفٌ ‏ ‏خُلْبَةٌ ‏ ‏مَارًّا بِهَذَا الْوَادِي مُلَبِّيًا ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது எந்தப் பள்ளத்தாக்கு?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்-அஸ்ரக் பள்ளத்தாக்கு” என்று பதிலளித்தனர். அப்போது அவர்கள், “மூஸா (அலை) அவர்கள் தம் இரு விரல்களைக் காதுகளுக்குள் நுழைத்தவர்களாக உரத்த குரலில் தல்பியாச் சொன்னபடி இந்தப் பள்ளத்தாக்கைக் கடந்து சென்று கொண்டிருந்ததை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் பயணம் செய்து ஒரு மலைக் குன்றுக்கு வந்து சேந்தோம். அப்போது “இது எந்த மலைக் குன்று?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். மக்கள், ‘ஹர்ஷா’ அல்லது ‘லிஃப்த்’ என்று பதிலளித்தனர். அப்போது, “யூனுஸ் (அலை) அவர்கள் நீண்ட கம்பளி அங்கியை அணிந்தவர்களாக, ஈச்சநாரால் கடிவாளம் இடப்பட்ட ஒரு சிவப்பு ஒட்டகத்திலமர்ந்து தல்பியா சொன்னவாறு இந்த (மலைக் குன்றின்) பள்ளத்தாக்கைக் கடந்து சென்றதை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

மூஸா (அலை) அவர்களைப் பற்றிக் கூறும்போது அவர்களது நிறத்தைப் பற்றியும் முடியைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதோ குறிப்பிட்டார்கள். ஆனால் அது அறிவிபாளர் தாவூத் (ரஹ்) அவர்களின் நினைவிலில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 241

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏وَسُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ ‏ ‏بِوَادِي الْأَزْرَقِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّ وَادٍ هَذَا فَقَالُوا هَذَا ‏ ‏وَادِي الْأَزْرَقِ ‏ ‏قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏هَابِطًا مِنْ ‏ ‏الثَّنِيَّةِ ‏ ‏وَلَهُ ‏ ‏جُؤَارٌ ‏ ‏إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ ثُمَّ أَتَى عَلَى ‏ ‏ثَنِيَّةِ هَرْشَى ‏ ‏فَقَالَ أَيُّ ‏ ‏ثَنِيَّةٍ ‏ ‏هَذِهِ قَالُوا ‏ ‏ثَنِيَّةُ هَرْشَى ‏ ‏قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏يُونُسَ بْنِ مَتَّى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏عَلَى نَاقَةٍ حَمْرَاءَ ‏ ‏جَعْدَةٍ ‏ ‏عَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ ‏ ‏خِطَامُ ‏ ‏نَاقَتِهِ ‏ ‏خُلْبَةٌ ‏ ‏وَهُوَ يُلَبِّي ‏
‏قَالَ ‏ ‏ابْنُ حَنْبَلٍ ‏ ‏فِي حَدِيثِهِ قَالَ ‏ ‏هُشَيْمٌ ‏ ‏يَعْنِي لِيفًا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) ‘அல்-அஸ்ரக்’ பள்ளத்தாக்கைக் கடந்து சென்றபோது, “இது எந்தப் பள்ளத்தாக்கு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்-அஸ்ரக் பள்ளத்தாக்கு” என்று பதிலளித்தார்கள். “மூஸா (அலை) அவர்கள் உரத்த குரலில் தல்பியா சொல்லிக் கொண்டு இந்த மலைக் குன்றிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ஹர்ஷா மலைக் குன்றின் பக்கம் சென்றபோது, “இது எந்த மலைக் குன்று?” என்று கேட்டார்கள். மக்கள், “(இது) ஹர்ஷா மலைக் குன்று” என்று பதிலளித்தனர். “யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்கள் நீண்ட கம்பளி அங்கியை அணிந்தவர்களாக, ஒரு திடமான சிவப்பு ஒட்டகத்திலமர்ந்து தல்பியா சொல்லிக் கொண்டிருந்ததை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நாரினாலானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 240

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يُونُسُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَمِّ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَرْتُ لَيْلَةَ ‏ ‏أُسْرِيَ ‏ ‏بِي عَلَى ‏ ‏مُوسَى بْنِ عِمْرَانَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏رَجُلٌ ‏ ‏آدَمُ ‏ ‏طُوَالٌ ‏ ‏جَعْدٌ ‏ ‏كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ ‏ ‏عِيسَى ابْنَ مَرْيَمَ ‏ ‏مَرْبُوعَ ‏ ‏الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ ‏ ‏سَبِطَ ‏ ‏الرَّأْسِ وَأُرِيَ ‏ ‏مَالِكًا ‏ ‏خَازِنَ النَّارِ ‏ ‏وَالدَّجَّالَ ‏ ‏فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ ‏
‏فَلَا تَكُنْ فِي ‏ ‏مِرْيَةٍ ‏ ‏مِنْ لِقَائِهِ ‏

‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏يُفَسِّرُهَا أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ لَقِيَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏

“நான் (விண்ணேற்றப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் இம்ரானின் புதல்வர் மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள் ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள் முடியுடையவர்கள். (அப்பயணத்தில்) மர்யமின் மைந்தர் ஈஸா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும் சிவப்பு-வெண்மை கலவையான சருமம் கொண்டவர்களாகவும் படிந்து தொங்கும் தலைமுடியுடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான மாலிக்கும் தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். அவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை” என்பதோடு, “நீங்கள் அவரைச் சந்தித்ததில் ஐயம் கொள்ள வேண்டாம்” (32:23) என்ற இறைவசனத்தை மேற்கோள் காட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இபுனு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

மேற்கண்ட (32:23 ஆவது) வசனத்திற்கு, “நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை (விண்ணேற்றத்தின்போது) சந்தித்ததைப் பற்றி நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம்” என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 239

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْعَالِيَةِ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏ابْنُ عَمِّ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أُسْرِيَ ‏ ‏بِهِ فَقَالَ ‏ ‏مُوسَى ‏ ‏آدَمُ ‏ ‏طُوَالٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَقَالَ ‏ ‏عِيسَى ‏ ‏جَعْدٌ ‏ ‏مَرْبُوعٌ ‏ ‏وَذَكَرَ ‏ ‏مَالِكًا ‏ ‏خَازِنَ جَهَنَّمَ وَذَكَرَ ‏ ‏الدَّجَّالَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விண்ணேற்றம் குறித்து நினைவு கூர்ந்தபோது, “மூஸா (அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று உயரமானவர்கள்” என்றும் “ஈஸா (அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயரமுடையவர்கள்” என்றும் நரகத்தின் காவலரான மாலிக்கைப் பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர்: இபுனு அப்பாஸ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 238

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏لَعَلَّهُ قَالَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ صَعْصَعَةَ ‏ ‏رَجُلٍ مِنْ قَوْمِهِ ‏ ‏قَالَ ‏
‏قَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَا أَنَا عِنْدَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏بَيْنَ النَّائِمِ وَالْيَقْظَانِ إِذْ سَمِعْتُ قَائِلًا يَقُولُ أَحَدُ الثَّلَاثَةِ بَيْنَ الرَّجُلَيْنِ فَأُتِيتُ فَانْطُلِقَ بِي فَأُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ فِيهَا مِنْ مَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏فَشُرِحَ ‏ ‏صَدْرِي إِلَى كَذَا وَكَذَا قَالَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏فَقُلْتُ لِلَّذِي مَعِي مَا ‏ ‏يَعْنِي قَالَ إِلَى أَسْفَلِ بَطْنِهِ فَاسْتُخْرِجَ قَلْبِي فَغُسِلَ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ أُعِيدَ مَكَانَهُ ثُمَّ حُشِيَ إِيمَانًا وَحِكْمَةً ثُمَّ أُتِيتُ بِدَابَّةٍ أَبْيَضَ يُقَالُ لَهُ ‏ ‏الْبُرَاقُ ‏ ‏فَوْقَ الْحِمَارِ وَدُونَ الْبَغْلِ يَقَعُ خَطْوُهُ عِنْدَ أَقْصَى طَرْفِهِ فَحُمِلْتُ عَلَيْهِ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا السَّمَاءَ الدُّنْيَا فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ نَعَمْ قَالَ فَفَتَحَ لَنَا وَقَالَ مَرْحَبًا بِهِ وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ قَالَ فَأَتَيْنَا عَلَى ‏ ‏آدَمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَذَكَرَ أَنَّهُ لَقِيَ فِي السَّمَاءِ الثَّانِيَةِ ‏ ‏عِيسَى ‏ ‏وَيَحْيَى ‏ ‏عَلَيْهَا السَّلَام ‏ ‏وَفِي الثَّالِثَةِ ‏ ‏يُوسُفَ ‏ ‏وَفِي الرَّابِعَةِ ‏ ‏إِدْرِيسَ ‏ ‏وَفِي الْخَامِسَةِ ‏ ‏هَارُونَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ‏ ‏قَالَ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ فَأَتَيْتُ عَلَى ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ فَلَمَّا جَاوَزْتُهُ بَكَى فَنُودِيَ مَا يُبْكِيكَ قَالَ رَبِّ هَذَا غُلَامٌ بَعَثْتَهُ بَعْدِي يَدْخُلُ مِنْ أُمَّتِهِ الْجَنَّةَ أَكْثَرُ مِمَّا يَدْخُلُ مِنْ أُمَّتِي قَالَ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَأَتَيْتُ عَلَى ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏وَقَالَ فِي الْحَدِيثِ وَحَدَّثَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ رَأَى أَرْبَعَةَ أَنْهَارٍ يَخْرُجُ مِنْ أَصْلِهَا نَهْرَانِ ظَاهِرَانِ وَنَهْرَانِ بَاطِنَانِ فَقُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏مَا هَذِهِ الْأَنْهَارُ قَالَ أَمَّا النَّهْرَانِ الْبَاطِنَانِ فَنَهْرَانِ فِي الْجَنَّةِ وَأَمَّا الظَّاهِرَانِ فَالنِّيلُ وَالْفُرَاتُ ثُمَّ رُفِعَ لِي ‏ ‏الْبَيْتُ الْمَعْمُورُ ‏ ‏فَقُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏مَا هَذَا قَالَ هَذَا ‏ ‏الْبَيْتُ الْمَعْمُورُ ‏ ‏يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ إِذَا خَرَجُوا مِنْهُ لَمْ يَعُودُوا فِيهِ آخِرُ مَا عَلَيْهِمْ ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ ثُمَّ فُرِضَتْ عَلَيَّ كُلَّ يَوْمٍ خَمْسُونَ صَلَاةً ثُمَّ ذَكَرَ قِصَّتَهَا إِلَى آخِرِ الْحَدِيثِ ‏
‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ صَعْصَعَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فَذَكَرَ نَحْوَهُ وَزَادَ فِيهِ فَأُتِيتُ ‏ ‏بِطَسْتٍ ‏ ‏مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَشُقَّ مِنْ ‏ ‏النَّحْرِ ‏ ‏إِلَى ‏ ‏مَرَاقِّ ‏ ‏الْبَطْنِ فَغُسِلَ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ مُلِئَ حِكْمَةً وَإِيمَانًا ‏

“நான் இறையில்லத்தில் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் (படுத்து) இருந்தபோது, (வானவர்) ஒருவர் (வந்து), “(அதோ, அந்த) இருவருக்கும் நடுவில் (படுத்து) உள்ள மூன்றாமவர்தாம்” என்று (என்னைச் சுட்டிக்) கூறுவதைக் கேட்டேன். எனக்காகப் பொன்னாலான தாம்பாளம் ஒன்று கொண்டுவரப் பட்டது. அதில் ‘ஸம்ஸம்’ நீர் இருந்தது. எனது நெஞ்சு இங்கிருந்து … இதுவரையில் பிளக்கப்பட்டது.

பிறகு எனது இருதயம் வெளியிலெடுக்கப்பட்டு, ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டு, பழையபடி அது இருந்த இடத்தில் (பொருத்தி) வைக்கப்பட்டது. பிறகு இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் அது நிரப்பப்பட்டது. பிறகு நாட்டுக் கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட உருவமைப்பில், வெள்ளை நிறத்திலமைந்த, பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கின்ற ‘புராக்’ எனப்படும் ஒரு (மின்னல்வேக) வாகனம் எனக்காகக் கொண்டு வரப்பட்டது. நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். பின்னர் நாங்கள் (புறப்பட்டு,) பூமியின் (முதல்) வானத்திற்குச் சென்றோம். அதைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் பணித்தபோது, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். “உம்முடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “முஹம்மத் (ஸல்)” என்று பதிலளித்தார்கள். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), “ஆம்” என்றார். (அந்த வானத்தின் காவலர்) எங்களுக்காகத் திறந்து, “அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்வருகை!” என்று (வாழ்த்துக்) கூறினர். நாங்கள் (அந்த வானிலிருந்த) ஆதம் (அலை) அவர்களிடம் சென்றோம் …

…இரண்டாம் வானத்தில் ஈஸா (அலை), யஹ்யா (அலை) ஆகியோரையும் மூன்றாம் வானத்தில் யூஸுஃப் (அலை) அவர்களையும் நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் சந்தித்த பிறகு, நாங்கள் ஆறாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள், “நற்குணச் சகோதரருக்கு நல்வரவு! நற்குண நபிக்கு நல்வரவு!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான் அவர்களிடமிருந்து கிளம்பியபோது அவர்கள் அழுதார்கள். “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்கின்றவர்களைவிட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு உன்னால் அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் செல்வார்கள் (என்பதால் என் சமுதாய மக்களை எண்ணி அழுதேன்)” என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன் …

-000-

அங்கு நான்கு நதிகளைக் கண்டதாக நபி (ஸல்) கூறினார்கள். மேலும், ‘சித்ரத்துல் முன்தஹா’வின் அடிமூலத்திலிருந்து, வெளிநோக்கி இரண்டு நதிகளும் உள்நோக்கி இரண்டு நதிகளும் வெளியாகி(ஓடி)க் கொண்டிருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “ஜிப்ரீலே! இந்நதிகள் எவை?” என்று கேட்டேன். “உள்ளே ஓடுபவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள(சல்சபீல், கவ்ஸர் ஆகிய)வையாகும். வெளியே ஓடுபவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்கள்.

பிறகு அல்-பைத்துல் மஅமூர் (எனும் இறையில்லம்) எனக்குக் காட்டப்பட்டது. நான், “ஜிப்ரீல்! இது என்ன?” என்று கேட்டேன். “இதுதான் அல்-பைத்துல் மஅமூர் ஆகும். இதில் (இறைவனை வணங்குவதற்காக) ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். (முதல் தடவை நுழைவான) அது அவர்களது இறுதி நுழைவாகும்” என்று ஜிப்ரீல் (அலை) சொன்னார்கள். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றின் ஒன்றில் மதுவும் மற்றொன்றில் பாலும் இருந்தன. அவ்விரு பாத்திரங்களையும் என்னிடம் எடுத்துக் காட்டப்(பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்)பட்டது. நான் பாலைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, “மிக மேன்மையானதைப் பெற்று விட்டீர்கள். உங்கள் மூலம் அல்லாஹ் மிக மேன்மையையே நாடியுள்ளான். உங்கள் சமுதாயத்தாரும் அந்த (மிக மேன்மையான) இயற்கை நெறியிலேயே இருப்பார்கள்” என்று கூறப்பட்டது. பிறகு என்மீது நாளொன்றுக்கு ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன ….

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறுதிவரை குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி).

குறிப்பு:

என்னுடன் இருந்த(ஜாரூத் என்ப)வரிடம், (அல்லாஹ்வின் தூதரது நெஞ்சு பிளக்கப் பட்டதான) “இங்கிருந்து … இதுவரையில் என்று கூறப்படுவதன் பொருள் யாது?” என்று நான் கேட்டதற்கு, “(நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து) அடிவயிறுவரை என்பது அனஸ் (ரலி) அவர்களது கருத்து” என்று (ஜாரூத்) பதிலளித்தார் என்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இதே ஹதீஸ், முஆத் இபுனு ஹிஷாம் வழி அறிவிப்பில், “… நுண்ணறிவும் இறைநம்பிக்கையும் நிரப்பப்பட்ட பொன்னாலான தாம்பாளம் ஒன்று எனக்காகக் கொண்டுவரப்பட்டது. பிறகு எனது காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டு ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பிறகு ஞானத்தாலும் இறைநம்பிக்கையாலும் (என் நெஞ்சம்) நிரப்பப்பட்டது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அறிவித்ததாகக் குறிப்பிடப் படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 237

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏يُحَدِّثُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَنَزَلَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ مِنْ مَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ فَلَمَّا جِئْنَا السَّمَاءَ الدُّنْيَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏لِخَازِنِ السَّمَاءِ الدُّنْيَا افْتَحْ قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قَالَ هَلْ مَعَكَ أَحَدٌ قَالَ نَعَمْ ‏ ‏مَعِيَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ فَفَتَحَ قَالَ فَلَمَّا عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا فَإِذَا رَجُلٌ عَنْ يَمِينِهِ أَسْوِدَةٌ وَعَنْ يَسَارِهِ أَسْوِدَةٌ قَالَ فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى قَالَ فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ ‏ ‏وَالِابْنِ الصَّالِحِ قَالَ قُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏آدَمُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهَذِهِ الْأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ فَأَهْلُ الْيَمِينِ أَهْلُ الْجَنَّةِ وَالْأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى قَالَ ثُمَّ عَرَجَ بِي ‏ ‏جِبْرِيلُ ‏ ‏حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ فَقَالَ لِخَازِنِهَا افْتَحْ قَالَ فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ خَازِنُ السَّمَاءِ الدُّنْيَا فَفَتَحَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَاوَاتِ ‏ ‏آدَمَ ‏ ‏وَإِدْرِيسَ ‏ ‏وَعِيسَى ‏ ‏وَمُوسَى ‏ ‏وَإِبْرَاهِيمَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ‏ ‏أَجْمَعِينَ وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ قَدْ وَجَدَ ‏ ‏آدَمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فِي السَّمَاءِ الدُّنْيَا ‏ ‏وَإِبْرَاهِيمَ ‏ ‏فِي السَّمَاءِ السَّادِسَةِ قَالَ فَلَمَّا مَرَّ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِإِدْرِيسَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ ‏ ‏قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قَالَ ثُمَّ مَرَّ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ هَذَا ‏ ‏إِدْرِيسُ ‏ ‏قَالَ ثُمَّ مَرَرْتُ ‏ ‏بِمُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قَالَ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏مُوسَى ‏ ‏قَالَ ثُمَّ مَرَرْتُ ‏ ‏بِعِيسَى ‏ ‏فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏قَالَ ثُمَّ مَرَرْتُ ‏ ‏بِإِبْرَاهِيمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ ‏ ‏وَالِابْنِ الصَّالِحِ قَالَ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا ‏ ‏إِبْرَاهِيمُ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏ابْنُ حَزْمٍ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏وَأَبَا حَبَّةَ الْأَنْصَارِيَّ ‏ ‏كَانَا يَقُولَانِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ عَرَجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الْأَقْلَامِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَزْمٍ ‏ ‏وَأَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَفَرَضَ اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً قَالَ فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ ‏ ‏بِمُوسَى ‏ ‏فَقَالَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏مَاذَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قَالَ قُلْتُ فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلَاةً قَالَ لِي ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَرَاجِعْ رَبَّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ قَالَ فَرَاجَعْتُ رَبِّي فَوَضَعَ ‏ ‏شَطْرَهَا ‏ ‏قَالَ فَرَجَعْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَأَخْبَرْتُهُ قَالَ رَاجِعْ رَبَّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ قَالَ فَرَاجَعْتُ رَبِّي فَقَالَ هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا ‏ ‏يُبَدَّلُ ‏ ‏الْقَوْلُ لَدَيَّ قَالَ فَرَجَعْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏فَقَالَ رَاجِعْ رَبَّكَ فَقُلْتُ قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي قَالَ ثُمَّ انْطَلَقَ بِي ‏ ‏جِبْرِيلُ ‏ ‏حَتَّى نَأْتِيَ سِدْرَةَ الْمُنْتَهَى فَغَشِيَهَا أَلْوَانٌ لَا أَدْرِي مَا هِيَ قَالَ ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ فَإِذَا فِيهَا ‏ ‏جَنَابِذُ ‏ ‏اللُّؤْلُؤَ وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (வானவர்) ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்தார். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை “ஸம்ஸம்” நீரால் கழுவினார். பிறகு ஞானமும் இறைநம்பிக்கையும் நிரம்பிய, பொன்னாலான தாம்பாளத்தோடு என்னிடம் வந்து, அதிலிருந்து என் நெஞ்சினுள் ஊற்றி மூடினார்.

பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டு விண்ணில் ஏறினார். பூமியின் (முதல்) வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானக் காவலரிடம், “திறப்பீராக!” என்று ஜிப்ரீல் கூறினார். “யார் அது?” எனக் காவலர் கேட்டார். அவர் “(நான்)ஜிப்ரீல்” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். “உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?” என்று காவலர் கேட்டார். “என்னுடன் முஹம்மத் (ஸல்) வந்திருக்கிறார்” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். “அவருக்கு ஆளனுப்பப் பட்டிருந்ததா?” என்று காவலர் கேட்க, ஜிப்ரீல் “ஆம்” என்று பதிலளித்தார். முதல் வானக் காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்துக்குள் உயர்ந்து சென்றபோது அங்கு தமக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் (பிரிந்து) புடைசூழ்ந்திருக்க ஒருவர் இருந்தார். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (என்னைப் பார்த்ததும் அவர்,) “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!” என்று என்னை வரவேற்றார். “யார் இவர் ஜிப்ரீலே?” என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டேன். “இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் (அலை). இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள், அன்னாரின் வழித்தோன்றல்கள். வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள்; இடப்பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப்பக்கம் பார்க்கும்போது சிரிக்கிறார். இடப்பக்கம் பார்க்கும்போது அழுகிறார்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்.

பிறகு ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு இரண்டாம் வானம் வரும்வரை உயர்ந்தேறினார். இரண்டாம் வானம் வந்ததும் அதன் காவலரிடம் “திறப்பீராக!” என்று கூறினார். அதன் காவலரும் முதலாம் வானத்தின் காவலர் கேட்டதைப் போன்றே கேட்ட பின்னர் திறந்தார்.

-000-

இவ்வாறாக அபூதர் (ரலி) அறிவித்து வந்ததாக அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார். தொடர்ந்து,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை முதல் வானத்திலும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்திலும் கண்டதாக அபூதர் (ரலி) அறிவித்தார்களேயன்றி, ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), ஈஸா (அலை), மூஸா (அலை) மற்றும் இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்ட(க் கூடுதல்) விபரங்களை நிறுவவில்லை.

ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இத்ரீஸ் (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது, “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று இத்ரீஸ் (அலை) வரவேற்றார்கள். பிறகு (அவரைக்) கடக்கும்போது “இவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, “இவர்தாம் இத்ரீஸ் (அலை)” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார் என்பதை அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

-000-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பின்னர் நான் மூஸா (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்களும், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று வரவேற்றார்கள். “இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். “இவர்தாம் மூஸா” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். பிறகு நான் ஈஸா (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்களும், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று வரவேற்றார்கள். “இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை), “இவர்தாம் மர்யமின் மைந்தர் ஈஸா” என்று பதிலளித்தார். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்கள், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!” என்று என்னை வரவேற்றார். “இவர் யார்?” என்று கேட்டேன். “இவர்தாம் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்.

-000-

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்-அன்சாரி (ரலி) ஆகிய இருவர் வழியாகச் செவியுற்று, இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களுக்குக் கூறியதாவது:

“… பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தேறினார். ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்த போது எழுதுகோல்கள் கீறுகின்ற ஓசையைப்போல் செவியுற்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அனஸ் பின் மாலிக்(ரலி), இப்னு ஹஸ்ம் (ரஹ்) ஆகியோர் அறிவிப்பதாவது:

“…என் சமுதாயத்தார் மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக் கோண்டு நான் திரும்பி, மூஸா (அலை) அவர்களைக் கடந்தபோது மூஸா (அலை) அவர்கள், “உங்கள் சமுதாயத்தார் மீது உங்கள் இறைவன் கடமையாக்கியது என்ன?” என்று கேட்டார்கள். நான், “அவர்கள் மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன். “அவ்வாறாயின் (எண்ணிக்கையைக் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்! ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அவற்றைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து (குறைப்பைத்) தெரிவித்தபோது (மீண்டும்) அவர்கள், “(இன்னும் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்” என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றபோது, “(முடிவான) இவை ஐவேளைத் தொழுகைகளும் (நன்மைகளில்) ஐம்பது(வேளைத் தொழுகைகளு)க்கு ஈடுமாகும். இந்தச் சொல் என்னால் மாற்றப்படாது” என்று கூறிவிட்டான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அவர்கள், “(இன்னும் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்!” என்றார்கள். “என் இறைவனிடம் (இன்னும் குறைத்துக் கேட்க) வெட்கப்படுகிறேன்” என்று சொல்லி விட்டேன்.

அதன் பின்னர், (வானின் உயரெல்லையில் உள்ள) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச் சென்றார். அதை, இன்னவைதாம் என்று எனக்கு(ச் சொல்ல)த் தெரியாத பல வண்ணங்கள் போர்த்திக் கொண்டிருந்தன. பிறகு நான் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கு முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 236

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ الْبُنَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَاهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ ‏ ‏فَصَرَعَهُ ‏ ‏فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ ‏ ‏عَلَقَةً ‏ ‏فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ ‏ ‏لَأَمَهُ ‏ ‏ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ ‏ ‏يَعْنِي ‏ ‏ظِئْرَهُ ‏ ‏فَقَالُوا إِنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ ‏ ‏مُنْتَقِعُ ‏ ‏اللَّوْنِ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏وَقَدْ كُنْتُ أَرْئِي أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ ‏
‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ وَهُوَ ابْنُ بِلَالٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يُحَدِّثُنَا عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏مَسْجِدِ الْكَعْبَةِ ‏ ‏أَنَّهُ جَاءَهُ ثَلَاثَةُ نَفَرٍ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يُوحَى إِلَيْهِ ‏ ‏وَهُوَ نَائِمٌ فِي ‏ ‏الْمَسْجِدِ الْحَرَامِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ نَحْوَ حَدِيثِ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏وَقَدَّمَ فِيهِ شَيْئًا وَأَخَّرَ وَزَادَ وَنَقَصَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்க வைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியிலெடுத்து, அதிலிருந்து ஒரு துண்டை(வெட்டி)ப் பிரித்து எடுத்து, “இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு” என்று கூறினார். பிறகு அதை ஒரு பொன்னாலான தாம்பாளத்தில் வைத்து ஸம்ஸம் நீரால் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிய) சிறுவர்கள், நபியவர்களின் செவிலித்தாயிடம் ஓடிச் சென்று, “முஹம்மது கொல்லப்பட்டு விட்டார்” என்று கூறினர். செவிலித்தாய் நபியவர்களிடம் வந்தபோது (அச்சத்தால்) அவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

குறிப்பு:

“நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்ட அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்” என்று ஹதீஸின் இறுதியில் அனஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்.

ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களுக்கு (தடைப்பட்ட பின்னர் மீண்டும்) வஹீ வருவதற்குமுன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் (வானவர்) மூவர் வந்தனர் …” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விண்ணேற்றப் பயணம் குறித்து அனஸ் (ரலி) இடமிருந்து செவியுற்றதாகக் குறிப்பிடப் படும் செய்தி, சற்றுக் கூடுதல்-குறைவுடன் காணப் படுகிறது.