அத்தியாயம்: 4, பாடம்: 04, ஹதீஸ் எண்: 573

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏:‏

‏كَانَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُؤَذِّنَانِ ‏ ‏بِلَالٌ ‏ ‏وَابْنُ أُمِّ مَكْتُومٍ ‏ ‏الْأَعْمَى ‏


‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْقَاسِمُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏مِثْلَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க(ளுடைய பள்ளிவாசலு)க்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் இருந்தனர். ஒருவர் பிலால் (ரலி); மற்றொருவர் பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி).

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 03, ஹதீஸ் எண்: 572

حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو غَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ ‏ ‏وَقَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ صَاحِبِ الدَّسْتَوَائِيِّ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏مَكْحُولٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَحْذُورَةَ ‏:‏

‏أَنَّ نَبِيَّ اللَّهِ عَلَّمَهُ هَذَا الْأَذَانَ ‏ ‏اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏ثُمَّ يَعُودُ فَيَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏حَيَّ عَلَى الصَّلَاةِ مَرَّتَيْنِ حَيَّ عَلَى الْفَلَاحِ مَرَّتَيْنِ ‏


‏زَادَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ‏

நபி (ஸல்) எனக்குக் கீழ்க்காணும் தொழுகை அழைப்பு (அதான்) முறையைக் கற்றுத் தந்தார்கள்:

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).

(மெதுவாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன்).

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் (முஹம்மது (ஸல்) இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன், முஹம்மது (ஸல்) இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன்)

பின்னர் மீண்டும் (சப்தமாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்.

பின்னர் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இருமுறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இருமுறையும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ மஹ்தூரா (ரலி)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ்வுக்குப் பிறகு) “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அதான் சொல்லக் கற்றுக் கொடுத்தார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 571

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏:‏

أُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ ‏ ‏يَشْفَعَ ‏ ‏الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏

தொழுகை அழைப்பு (அதான்) சொற்களை இரட்டைப்படையாகவும் தொழுகை அறிவிப்பு (இகாமத்) சொற்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) கட்டளை இடப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 570

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏ ‏

‏ذَكَرُوا أَنْ يُعْلِمُوا وَقْتَ الصَّلَاةِ بِشَيْءٍ يَعْرِفُونَهُ فَذَكَرُوا أَنْ يُنَوِّرُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا ‏ ‏فَأُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ ‏ ‏يَشْفَعَ ‏ ‏الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏لَمَّا كَثُرَ النَّاسُ ذَكَرُوا أَنْ يُعْلِمُوا بِمِثْلِ حَدِيثِ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ أَنْ يُورُوا نَارًا ‏

மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொழுகை நேரத்தை அறிவிக்கும் முறையை உருவாக்குவது குறித்து நபித்தோழர்கள் கலந்து பேசினர். அப்போது சிலர், “நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம்” என்றனர். (இரண்டும் யூத-கிறிஸ்தவக் கலாச்சாரம் என்பதால் புதிய முறையாக ‘அதான்’ எனும்) தொழுகைக்கான அழைப்புச் சொற்களை இரட்டைப்படையாகவும் இகாமத் எனும் தொழுகை அறிவிப்புச் சொற்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) கட்டளை இடப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

உஹைப் (ரஹ்) மற்றும் காலித் அல்-ஹத்தா வழி அறிவிப்புகள், “முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானபோது …” எனத் தொடங்குகிறது. அதில், “நெருப்பு மூட்டுவோம்” எனும் ஆலோசனை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 569

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏:‏

‏أُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏


‏زَادَ ‏ ‏يَحْيَى ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏أَيُّوبَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِلَّا الْإِقَامَةَ ‏

தொழுகை அழைப்பு (அதானில்) இரட்டையாகவும் தொழுகை அறிவிப்பு (இகாமத்தில்) ஒற்றையாகவும் சொற்றொடரை அமைத்துக் கொள்ளுமாறு பிலால் (ரலி) கட்டளை இடப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், ” (இகாமத்தில் சொல்லப்படும்) ‘கத் காமத்திஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 01, ஹதீஸ் எண்: 568

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ قَالَ :‏ ‏

‏كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلَوَاتِ وَلَيْسَ يُنَادِي بِهَا أَحَدٌ فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ فَقَالَ بَعْضُهُمْ اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ ‏ ‏النَّصَارَى ‏ ‏وَقَالَ بَعْضُهُمْ قَرْنًا مِثْلَ قَرْنِ ‏ ‏الْيَهُودِ ‏ ‏فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَوَلَا تَبْعَثُونَ رَجُلًا يُنَادِي بِالصَّلَاةِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏بِلَالُ ‏ ‏قُمْ فَنَادِ بِالصَّلَاةِ ‏

முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து) மதீனாவிற்கு வந்தபோது, தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகை(க்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்வார்கள். ஒருநாள் இது தொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், “கிறிஸ்தவர்கள் மணி அடிப்பது போன்று மணி அடிப்பதை(த்தேர்ந்து) எடுத்துக் கொள்ளலாம்” என்றனர். வேறு சிலர், “யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதலாம்” என்றனர். அப்போது உமர் (ரலி), “தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமித்தாலென்ன?” என்றார்கள். அப்போது நபி (ஸல்), (பிலால் (ரலி) அவர்களிடம்), “பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 33, ஹதீஸ் எண்: 567

حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

‏أُقِيمَتْ صَلَاةُ الْعِشَاءِ فَقَالَ رَجُلٌ لِي حَاجَةٌ فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُنَاجِيهِ ‏ ‏حَتَّى نَامَ الْقَوْمُ أَوْ بَعْضُ الْقَوْمِ ثُمَّ صَلَّوْا ‏

(ஒரு நாள்) இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒருவர் (நபி அவர்களிடம்) “எனக்கு(உங்களிடம்) ஓர் அலுவல் (குறித்துப் பேச வேண்டியது) இருக்கிறது” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) எழுந்து அவரிடம் (நீண்ட நேரம்) தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அனைவரும்/மக்களில் சிலர் (உட்கார்ந்த நிலையிலேயே) உறங்கிவிட்டனர். பிறகு (மீண்டும் உளூச் செய்யாமலேயே) தொழுதனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 33, ஹதீஸ் எண்: 566

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُ ‏:‏

‏كَانَ ‏ ‏أَصْحَابُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنَامُونَ ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ قَالَ قُلْتُ سَمِعْتَهُ مِنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ إِي وَاللَّهِ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (உட்கார்ந்து கொண்டே) உறங்கிவிட்டு (பிறகு எழுந்து) தொழுவார்கள். (அதற்குப் புதிதாக) உளூச் செய்யமாட்டார்கள்” என்று அனஸ் (ரலி)  கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன் என கத்தாதா (ரஹ்) கூறினார்கள். நான், “இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்) வழியாக ஷுஅபா (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 33, ஹதீஸ் எண்: 565

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قَالَ ‏:‏

‏أُقِيمَتْ الصَّلَاةُ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُنَاجِي رَجُلًا فَلَمْ يَزَلْ ‏ ‏يُنَاجِيهِ ‏ ‏حَتَّى نَامَ أَصْحَابُهُ ثُمَّ جَاءَ فَصَلَّى بِهِمْ ‏

(ஒருநாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. ஆனால், நபி(ஸல்) அவர்களோ ஒருவரிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (நீண்ட நேரம்) பேசிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் (உட்கார்ந்து கொண்டே) தூங்கி விட்டார்கள். பிறகு நபி (ஸல்) வந்து தோழர்களுக்குத் தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 564

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏:‏

أُقِيمَتْ الصَّلَاةُ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَجِيٌّ ‏ ‏لِرَجُلٍ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏وَنَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏يُنَاجِي ‏ ‏الرَّجُلَ فَمَا قَامَ إِلَى الصَّلَاةِ حَتَّى نَامَ الْقَوْمُ ‏

(ஒருநாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. (ஆனால்,) மக்கள் (உட்கார்ந்து கொண்டே) தூங்கிவிடும் வரைக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருவரிடம் (நீண்ட நேரம்) தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் தொழுகைக்கு (வந்து) நின்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)