அத்தியாயம்: 3, பாடம்: 32, ஹதீஸ் எண்: 563

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏وَقَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَيْضًا ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏ ‏

‏فِي حَدِيثِ ‏ ‏حَمَّادٍ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَخَلَ الْخَلَاءَ وَفِي حَدِيثِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا دَخَلَ ‏ ‏الْكَنِيفَ ‏ ‏قَالَ ‏ ‏اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ ‏ ‏الْخُبْثِ ‏ ‏وَالْخَبَائِثِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ أَعُوذُ بِاللَّهِ مِنْ ‏ ‏الْخُبْثِ ‏ ‏وَالْخَبَائِثِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கழிப்பிடத்திற்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் குப்ஸி வல்கபாயிஸி” என்று கூறுவார்கள் (இறைவா! ஆண்-பெண் ஷைத்தான்களி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்).

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) வழி அறிவிப்பில், கழிப்பிடம் என்பதைக் குறிக்க, “அல்கனீஃப்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது.

இஸ்மாயீல் இப்னு உலையா (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) ‘அவூது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபாயிஸி’ என்று கூறுவார்கள்” என அல்லாஹ்வுக்குப் படர்க்கைச் சொல் ஆளப் பட்டுள்ளதைக் குறிக்கிறது.

அத்தியாயம்: 3, பாடம்: 31, ஹதீஸ் எண்: 562

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ حُوَيْرِثٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ ‏:‏

‏إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَضَى حَاجَتَهُ مِنْ الْخَلَاءِ فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فَأَكَلَ وَلَمْ يَمَسَّ مَاءً ‏


قَالَ ‏ ‏وَزَادَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ لَهُ ‏ ‏إِنَّكَ لَمْ تَوَضَّأْ قَالَ مَا أَرَدْتُ صَلَاةً فَأَتَوَضَّأَ ‏ ‏وَزَعَمَ ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّهُ سَمِعَ مِنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏

நபி (ஸல்) இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டுக் கழிவறையிலிருந்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு உணவு கொண்டு வந்து பரிமாறப்பட்டது. அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். ஆனால், (உளூச் செய்ய) தண்ணீரைத் தொடவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ஸயீத் பின் அல்ஹுவரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், நபி(ஸல்) அவர்களிடம் “நீங்கள் உளூச் செய்யவில்லையே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் இப்போது தொழப் போவதில்லையே – உளூச் செய்து கொள்ள?” என்று கேட்டார்கள் என்பதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 31, ஹதீஸ் எண்: 561

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏مَوْلَى آلِ ‏ ‏السَّائِبِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏:‏

‏ذَهَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏الْغَائِطِ ‏ ‏فَلَمَّا جَاءَ قُدِّمَ لَهُ طَعَامٌ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ أَلَا تَوَضَّأُ قَالَ ‏ ‏لِمَ أَلِلصَّلَاةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கழிவறைக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்தபோது அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டது. அப்போது, “நீங்கள் உளூச் செய்து கொள்ளவில்லையே அல்லாஹ்வின் தூதரே!?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “எதற்கு தொழுகைக்கா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 31, ஹதீஸ் எண்: 560

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏كُنَّا عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَجَاءَ مِنْ ‏ ‏الْغَائِطِ ‏ ‏وَأُتِيَ بِطَعَامٍ فَقِيلَ لَهُ أَلَا تَوَضَّأُ فَقَالَ ‏ ‏لِمَ ‏ ‏أَأُصَلِّي فَأَتَوَضَّأَ ‏

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இருந்தபோது, அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றுவிட்டு வந்தார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அவர்களிடம், “நீங்கள் உளூச் செய்து கொள்ளவில்லையே?” என்று (உண்ண வந்தபோது) கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்), “ஏன்? நானென்ன தொழவா போகிறேன், உளூச் செய்து கொள்வதற்கு?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 31, ஹதீஸ் எண்: 559

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ مِنْ الْخَلَاءِ فَأُتِيَ بِطَعَامٍ فَذَكَرُوا لَهُ الْوُضُوءَ فَقَالَ ‏ ‏أُرِيدُ أَنْ أُصَلِّيَ فَأَتَوَضَّأَ ‏

நபி (ஸல்) கழிவறையிலிருந்து வெளிவந்த பின்னர், அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது மக்கள் உளூவைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டினர். நபி(ஸல்), “நான் தொழப் போவதில்லையே, உளூச் செய்து கொள்வதற்கு?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 30, ஹதீஸ் எண்: 558

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ مُوسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدِ بْنِ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَهِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ ‏

நபி (ஸல்) எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்பவர்களாய் இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 29, ஹதீஸ் எண்: 557

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاصِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقِيَهُ وَهُوَ جُنُبٌ ‏ ‏فَحَادَ ‏ ‏عَنْهُ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ فَقَالَ كُنْتُ جُنُبًا قَالَ ‏ ‏إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ ‏

நான் பெருந்துடக்காளியாக இருந்தபோது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பார்த்துவிட்டார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து விலகிச் சென்று குளித்து விட்டு வந்து, “நான் பெருந்துடக்கு உள்ளவனாய் இருந்தேன். (குளித்து விட்டு வரத் தாமதமாகி விட்டது)” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகிவிட மாட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 29, ஹதீஸ் எண்: 556

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏حُمَيْدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ الطَّوِيلِ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّهُ لَقِيَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي طَرِيقٍ مِنْ طُرُقِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَهُوَ جُنُبٌ ‏ ‏فَانْسَلَّ ‏ ‏فَذَهَبَ فَاغْتَسَلَ فَتَفَقَّدَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا جَاءَهُ قَالَ أَيْنَ كُنْتَ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ يَا رَسُولَ اللَّهِ لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُبْحَانَ اللَّهِ ‏ ‏إِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ ‏

நான் பெருந்துடக்காளியாக இருந்தபோது மதீனாவின் வழிகளில் ஒன்றில் வைத்து நபி (ஸல்) என்னைப் பார்த்துவிட்டார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து நழுவிச் சென்று குளித்தேன். இதற்கிடையே நபி (ஸல்) என்னைக் காணாமல் தேடினார்கள். நான் (குளியலை முடித்து விட்டு) அவர்களிடம் வந்தபோது, “(இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர், அபூஹுரைரா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் நானிருந்த நிலையில் என்னைத் நீங்கள் பார்த்தீர்கள். குளிக்காமல் உங்களிடம் வந்து அமர்வதை நான் வெறுத்தேன்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்), “சுப்ஹானல்லாஹ்! இறைநம்பிக்கையாளர் (பெருந்துடக்கு ஏற்பட்டால்) அசுத்தமாகிவிட மாட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 555

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏:‏

‏أَنَّ رَجُلًا مَرَّ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَبُولُ فَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்ற ஒருவர் ஸலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதில் ஸலாம் சொல்லவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 554

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَرَوَى ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَيْرٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ سَمِعَهُ يَقُولُ ‏:‏

‏أَقْبَلْتُ أَنَا ‏ ‏وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ يَسَارٍ ‏ ‏مَوْلَى ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى دَخَلْنَا عَلَى ‏ ‏أَبِي الْجَهْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الْأَنْصَارِيِّ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو الْجَهْمِ ‏ ‏أَقْبَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ نَحْوِ ‏ ‏بِئْرِ جَمَلٍ ‏ ‏فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهِ حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ فَمَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ ‏

நானும் நபி (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துர் ரஹ்மான் பின் யஸார் (ரஹ்) அவர்களும் அபுல் ஜஹ்மு பின் ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘பிஃரு ஜமல்’ எனும் இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து, ஸலாம் சொன்னார். நபி (ஸல்) அவருக்கு உடனடியாக பதில் ஸலாம் சொல்லாமல் ஒரு சுவரை நோக்கிப் போய் (அதில் தம் கைகளை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொண்ட பின்னர் அவருக்குப் பதில் ஸலாம் சொன்னார்கள்” என்ற ஹதீஸை அபுல்ஜஹ்மு (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுல்ஜஹ்மு (ரலி) வழியாக உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)